Saturday, June 20, 2009

யவன ராணி Vs கடல் புறா

சாண்டில்யனின் பல்வேறு படைப்புகளில் மிகச் சிறந்தவையாக நான் கருதுபவை யவன ராணியும், கடல் புறாவும். இவையன்றி, ராஜ திலகம், ராஜ பேரிகை, விலை ராணி, ஜல தீபம், ராஜ முத்திரை உள்ளிட்டவைகளையும் படித்திருக்கிறேன்.

ஆயினும் யவனராணியும் கடல்புறாவும் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. இவ்விரண்டில் எது முதன்மையானது என்பதைப் பற்றிய என் ஆய்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்.


முதலில் இப்படைப்புகளைப் பற்றி சிறு அறிமுகம்.

யவன ராணி

இது முற்காலச் சோழர்களின் தலை சிறந்த அரசனான கரிகால்வளவன் சோழப் பேரரசை மீட்டதைப் வந்ததைப் பற்றிய கதை. கோச்செங்கட்சோழனின் மறைவிற்குப் பின் சோழ நாட்டில் வேளிர்களின் ஆட்சி நடக்கிறது. சோழ குல இளவல் திருமாவளவனை அழிக்கவும் திட்டமிடுட்டு அவன் தங்கியிருந்த அரண்மனைக்கு தீயிடுகிறார்கள் அங்கிருந்து தப்பிக்கும் போது திருமாவளவனின் கால் தீயினால் கருகுகிறது. அன்று முதல் திருமாவளவன் கரிகால்வளவனாகிறார். இது வரலாற்றை ஒட்டிய நிகழ்வு.

யவனர்கள் (ஐரோப்பியர்கள்) தமிழகத்தில் மிக அதிக அளவில் வாணிபம் செய்துள்ளது பல்வேறு சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவற்றில் முக்கியமானது 'தி பெரிப்ளூஸ் ஆஃப் எரித்ரீயன் ஸீ" என்ற நூலாகும். இது ஒரு 'ட்ராவலாக்'.

இதன் அடிப்படையில் தமிழகத்தின் முக்கியத் துறைமுகமான புகாரைக் கைப்பற்றி அங்கு யவன அரசு அமைக்கும் முயற்சி நடை பெறுகிறது. அதை இந்தப் புதினத்தின் நாயகன் இளஞ்செழியன் எப்படித் தடுத்தான். அவனுடைய அயல் நாட்டுப் பயணங்களில் என்ன நிழந்தது என்று மிகச் சுவையாக புனையப்பட்டிருக்கும்.

யவன ராணி, பூவழகி என்று வழக்கம் போல் இரு நாயகிகள். பிரும்மானந்தர் என்ற ஒரு முக்காலும் அறிந்த சாமியார். டைபீரியஸ் என்ற யவன தளபதி. மற்றும் சாம்பிராணி நாட்டு மன்னன், அவனது மகள் அங்கே ஒரு சாமியார்ஆகிய கேரக்டர்கள் உண்டு. இரண்டு பாகங்கள்.


கடல் புறா

இராஜராஜ சோழனுக்குப் பிறகு இராஜேந்திர சோழத் தேவர் ஆட்சி ஏறும் போது அவருக்கு வயது கிட்டத்தட்ட 55க்கு மேல். அவர் ஆட்சிக்குப் பிறகு 10 வருடங்களுக்குள்ளாகவே நான்கு அரசர்களை அரியணையேற்ற வேண்டிய நிலை சோழர்களுக்கு. அவர்களுக்குப் பிறகும் நேர் வாரிசு இல்லாத காரணத்தால் மகள் வழி மகனான அனபாயன் சோழ சாம்ராஜ்யத்திற்கு வாரிசானான்.

இந்த அனபாயன் தான் சுங்கம் தவிர்த்த சோழன், கலிங்கம் கொண்ட குலோத்துங்கன். இவனது காலத்தில் சீன சாம்ராஜ்யத்திற்கு ஒரு அரச தூதுக் குழு சென்றதற்கான ஆதாரம் உள்ளது. இதே காலத்தில் கடாரம், ஸ்ரீவிஜயத்திலும் சோழ வீரர்கள் வந்து சென்றதற்கான ஆதாரமும் உள்ளது. மேலும் கலிங்கப் போர் ஏற்படக் காரணமாக ஒரு நிகழ்வு புனையப் படுகிறது. இதன் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் மூன்று பாகங்கள் கொண்ட கடல் புறா.

கதையின் நாயகன் இளையபல்லவன். (கதை அருமையாக இருக்கும் என்பதற்கு இதற்கு மேலும் சான்று வேண்டுமா?!) இவனது இயற்பெயர் கருணாகர தொண்டைமான். கலிங்கத்துப் பரணியில் இவன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. வழக்கம் போல் இரு நாயகிகள். காஞ்சனாதேவி, மஞ்சளகி. அகூதா என்ற சீன கடலோடி. சுவர்ணதீபத்தில் ஒரு தளபதி என்று வெரைட்டி உண்டு.



இனி இவற்றின் ஒற்றுமைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. இரண்டுமே சோழர்களைப் பற்றியது.

2. இரண்டும் சோழ வாரிசு குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

3. கடல் மற்றும் கப்பல் சம்பந்தப் பட்டவை

4. அயல் தேசத்தில் நமது வீரர்களின் சாகசங்கள் விவரிக்கப் பட்டிருக்கும்.

5. இரண்டிலும் இரண்டு நாயகிகள்.

6. இரண்டிலும் அரச பரம்பரையினரின் சாகசங்களை விட தளபதிகளின் சாகசம் அதிகமாக விவரிக்கப் பட்டிருக்கும்.

7. இரண்டு நாயகர்களுக்கும் ஆரம்பம் "இளைய" என்றிருக்கும். இளஞ்செழியன், இளையபல்லவன்.

8. இரண்டு நாயகர்களும் சோழ நாட்டைச் சேர்ந்தவர்களல்ல. இளஞ்செழியன் பாண்டிய நாட்டவன். இளையபல்லவன் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன்.



பொதுவாகவே, சாண்டில்யனின் நாயகர்கள் 'இன்வின்சிபிள்' வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எத்தகைய சூழலையும் வெற்றி கொள்வார்கள். ஆனால் சூழலின் கடுமையும் அதிலிருந்து 'லாஜிக்கல்'ஆக வெளிவரும் தன்மையை விவரிக்கும் விதமுமே அந்த நாயகர்களின் மதிப்பை உயர்த்தும். அவ்விதத்தில் கடல் புறாவில் லாஜிக் அதிகம் உள்ளது.


யவனராணியில், சாம்பிராணி நாட்டில் இளஞ்செழியன் நிகழ்த்தும் சாகசம் மடசாம்பிராணியால் கூட நம்ப முடியாது! மேலும் யவன தேசத்தில் அவன் தேரோட்டுவதும் பொருள் தீட்டுவதும் அதீத கற்பனைக்கும் மேல் என்றால் மிகையாகாது!.


எப்படியிருந்தாலும், இவையிரண்டுமே மிகச் சிறந்த 'விருந்து' என்பதில் ஐயமில்லை!.


"ஃபர்ஸ்ட் அமாங்க் ஈக்வல்ஸ்" என்ற அடிப்படையில் கடல் புறாவே சிறந்தது என்பதை நடு நிலையாளர்கள் மறுக்க மாட்டார்கள் என ஐயம்திரிபற சொல்லலாம். (கதையின் நாயகன் இளைய பல்லவன் என்பதால் இந்த முடிவு அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்!!!)


உங்கள் கருத்துக்களையும் சொல்லலாமே.

47 comments:

Subbiah Veerappan said...

இரண்டிலும் சிறந்தது.யவனராணிதான்.
அதில் சந்தேகமில்லை.
கதை வெளிவந்த காலத்தில் மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறேன்

ராமகுமரன் said...

இரண்டு சாண்டில்யன் புத்தகங்களைப் பற்றி விபரம் தந்தற்கு நன்றி. இதுவரை சாண்டில்யனின் மூங்கில்கோட்டை மட்டும் படித்துள்ளேன். சமயம் கிடைக்கும்பொழுது மற்ற புதினங்களையும் படிக்கிறேன். பாண்டியர்களின் வீரத்தைப் பற்றி பேசும் புதினம் ஏதேனும் தமிழில் வந்துள்ளதா?

நன்றி,
ராமகுமரன்

நர்சிம் said...

தலைவா.. மிக அருமையான பதிவு.

☀நான் ஆதவன்☀ said...

//பாண்டியர்களின் வீரத்தைப் பற்றி பேசும் புதினம் ஏதேனும் தமிழில் வந்துள்ளதா?

நன்றி,
ராமகுமரன்//

படிக்க "சக்கர வியூகம்"

ஆசிரியர்:இளைய பல்லவன்

☀நான் ஆதவன்☀ said...

உங்ககிட்ட கேட்டு தான் "யவனராணி" வாங்கியிருக்கேன். இன்னும் படிக்கல தலைவா.

"கடல் புறா" ஸ்பென்ஸர் லேண்ட்மார்க்ல கிடைக்கல :(

☀நான் ஆதவன்☀ said...

ஆமா இதென்ன "ஜிங்கு ஜான் ஜிங்கு ஜான் மஞ்ச கலரு ஜிங்கு ஜான்"?

வெட்டிப்பயல் said...

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு... யவனராணி தான் சிறந்தது.

ராம் குமார்,
ராஜ முத்திரை, கன்னி மடம், கயல்விழி மூன்றும் எனக்கு தெரிந்து பாண்டியர்களை வைத்து வந்தது.

Sathis Kumar said...

என் ஓட்டு ‘கடல் புறா’விற்குதான்..

//யவனராணியில், சாம்பிராணி நாட்டில் இளஞ்செழியன் நிகழ்த்தும் சாகசம் மடசாம்பிராணியால் கூட நம்ப முடியாது!//

யவனராணி, சாம்பிராணி, மடசாம்பிராணி.. ஹி..ஹி..ஹி :)))))))))))))))

CA Venkatesh Krishnan said...

// SP.VR. SUBBIAH said...
இரண்டிலும் சிறந்தது.யவனராணிதான்.
அதில் சந்தேகமில்லை.
கதை வெளிவந்த காலத்தில் மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறேன்
//

யவனராணியின் விறுவிறுப்புக்கு ஈடு இல்லை. ஆனால் முழுமையாக ஒப்பு நோக்கும் போது கடல்புறா பெட்டர் என்று எண்ணுகிறேன்.

வருகைக்கு நன்றி. உங்களை மீண்டும் கேள்வி பதில் தொடருக்கு அழைத்துள்ளேன்.

CA Venkatesh Krishnan said...

// RamKumar said...
பாண்டியர்களின் வீரத்தைப் பற்றி பேசும் புதினம் ஏதேனும் தமிழில் வந்துள்ளதா?

நன்றி,
//

நான் ஆதவன் கீழே கொடுத்துள்ளார்:))

ஆனாலும் சாண்டில்யனின் ராஜ முத்திரை மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனான 'ஜடாவர்ம சுந்தர பாண்டியனின்' கேரள வெற்றியை எடுத்துரைக்கும் நாவல். மிக அருமையாக இருக்கும்.

சோழர்களைப் பார்க்கும் போது பாண்டியர்களைப் பற்றிய நாவல்கள் குறைவே. ஏனெனில் சோழர்களைப் போல் பாண்டியர்கள் பெற்ற வெற்றி குறைவுதான்:((. நாவல் வடிக்க வெற்றி என்ற ஒரு நிகழ்வு தேவை.

கோவி.மணிசேகரனின் ஒரு நாவல் பாண்டியன் கடுங்கோன் என்ற அரசனைப் பற்றியது. களப்பிரர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவித்தவன் என்ற பெருமை இவனுக்கு உண்டு. "எழு ஞாயிறு" என்பதாக நினைவு.

Rajeswari said...

யவனராணி இன்னும் படிக்கவில்லை..
பொன்னியின் செல்வனுக்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்தது சாண்டில்யனின் கடல்புறா.

பதிவு நன்றாக உள்ளது.யவனராணியையும் படிக்க தூண்டுகிறது

chandru / RVC said...

இரண்டிலும் சிறந்தது " கடல் புறா" தான். இளையபல்லவன் - காஞ்சனாதேவி - மஞ்சள் அழகி காதலும், கலிங்கமன்னன் பீமனின் வீரர்களுடன் கலிங்கத்தில் (1-பாகம்) நடக்கும் சண்டையும்,கண்டியதேவன், அமீர், பாலிக்குள்ளன் கூட்டணியும், கடல்புறா உருவாக்கமும்'( அக்ரமந்திரம் என நினைக்கிறேன்..!) அதன் கடல் சாகசமும், பலவர்மனின் வஞ்சகமும் வீழ்ச்சியும், சீனத்து வாணங்களும் இன்னும் கண்முன்னே நிற்கின்றன. கோவா சென்றிருந்தபோது அகூதா கோட்டை என்ற ஒன்றிற்கு சென்றிருந்தேன், நமது கடற்கொள்ளையர் அகூதாவின் பெயரில் அமைந்த கோட்டையா அது என விவரம் தெரிந்தவர்கள் விளக்கவும். கடல்புறா ஒரு சிறந்த சரித்திர திரைப்படமாக்க அனைத்து தகுதிகளும் நிறைந்தது. திரைக்கதைக்கு மெனக்கெட வேண்டாம். யவன ராணி நீங்கள் சொல்வதுபோல் நிறைய லாஜிக் பொத்தல்கள் நிறைந்தது. இளையபல்லவன் is rocking...! :)

chandru / RVC said...
This comment has been removed by the author.
CA Venkatesh Krishnan said...

//
நர்சிம் said...
தலைவா.. மிக அருமையான பதிவு.
//

நன்றி நர்சிம்.

மாறவர்மன் எங்கேன்னு ஒரு பதிவு போட்டுடலாமா? (சக்கர வியூகம் எங்கேன்னு கேட்காதீங்க. வந்துகிட்டே இருக்கு!!)

CA Venkatesh Krishnan said...

//
☀நான் ஆதவன்☀ said...

படிக்க "சக்கர வியூகம்"

ஆசிரியர்:இளைய பல்லவன்
///

ஹி.ஹி. நன்றி ஆதவன்.

CA Venkatesh Krishnan said...

// ☀நான் ஆதவன்☀ said...
உங்ககிட்ட கேட்டு தான் "யவனராணி" வாங்கியிருக்கேன். இன்னும் படிக்கல தலைவா.

"கடல் புறா" ஸ்பென்ஸர் லேண்ட்மார்க்ல கிடைக்கல :(
//
வானதி பதிப்பகத்துல ட்ரை பண்ணீங்களா!!

CA Venkatesh Krishnan said...

//
☀நான் ஆதவன்☀ said...
ஆமா இதென்ன "ஜிங்கு ஜான் ஜிங்கு ஜான் மஞ்ச கலரு ஜிங்கு ஜான்"?
//

எல்லாம் ஒரு சேஞ்சுக்குத்தான். வேணான்னா சேஞ்ச் பண்ணிடலாம்.

CA Venkatesh Krishnan said...

//
வெட்டிப்பயல் said...
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு... யவனராணி தான் சிறந்தது.

ராம் குமார்,
ராஜ முத்திரை, கன்னி மடம், கயல்விழி மூன்றும் எனக்கு தெரிந்து பாண்டியர்களை வைத்து வந்தது.
///

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

கன்னி மடம் அல்ல, கன்னி மாடம்..

CA Venkatesh Krishnan said...

நன்றி சதீசுகுமார்,
நீங்க நம்ம பக்கம்!!

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் said...
யவனராணி, சாம்பிராணி, மடசாம்பிராணி.. ஹி..ஹி..ஹி :)))))))))))))))
///

ஹி..ஹி..ஹி :)))))))))))))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதெல்லாம் படிக்க குமுதம் பைண்டிங்தான் பெஸ்ட்

ஈ-புக் எங்காவது இருந்தால் லிங்க் கொடுங்கள், அழிக்கும்முன் எடுத்துக் கொள்வோம்

CA Venkatesh Krishnan said...

///
Rajeswari said...
பொன்னியின் செல்வனுக்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்தது சாண்டில்யனின் கடல்புறா.

///

Same Blood.

///
பதிவு நன்றாக உள்ளது.யவனராணியையும் படிக்க தூண்டுகிறது
///
நன்றி ராஜேஸ்வரி,
சீக்கிரம் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவா போடுங்க!

CA Venkatesh Krishnan said...

//
RVC said...
இரண்டிலும் சிறந்தது " கடல் புறா" தான்.

இளையபல்லவன் is rocking...! :)
//

நன்றி

நீங்கள் எந்த இளைய பல்லவனைப் பற்றி சொல்கிறீர்கள்?:)))

CA Venkatesh Krishnan said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
இதெல்லாம் படிக்க குமுதம் பைண்டிங்தான் பெஸ்ட்

ஈ-புக் எங்காவது இருந்தால் லிங்க் கொடுங்கள், அழிக்கும்முன் எடுத்துக் கொள்வோம்
///

பைண்டிங் புக்கில் படிக்கும் சுகமே தனி. கதையோடு அந்தக்கால ஜோக்குகளும், பிட்டுகளும், விளம்பரங்களும்....

சாண்டில்யனின் படைப்புகள் அனைத்தும் காபிரைட் செய்யப்பட்டவை. சமீபத்தில் நடந்த தேசியமயமாக்கல் முயற்சி தோல்வியடைந்தது உங்களுக்குத் தெரிந்ததே..

சூர்யா ௧ண்ணன் said...

//ஈ-புக் எங்காவது இருந்தால் லிங்க் கொடுங்கள், அழிக்கும்முன் எடுத்துக் கொள்வோம்//

http://kadalpuraaonnet.blogspot.com/2009/02/blog-post_20.html

ஆரம்பித்து, பிறகு ஏனோ விட்டுவிட்டார்

ஆகாய நதி said...

ஆஹா! நான் இந்த இரு நாவல்களுக்கும் பைத்தியக்காரத்தனமான விசிறி! :)))

பாலராஜன்கீதா said...

எங்கள் அண்ணனுக்கு யவனராணி பிடிக்கும். எனக்கு கடல்புறா பிடிக்கும்.

வெட்டிப்பயல் said...

//கன்னி மடம் அல்ல, கன்னி மாடம்..

//

கன்னி மாடம் தான். அவசரத்துல டைப்பிட்டேன். மன்னிக்கவும் :)

ராமகுமரன் said...

சக்ரவியூகம் படித்துக்கொண்டிருக்கிறேன் இது வரை 8 பகுதிகள் படித்துவிட்டேன், மிக அருமையாக எழுதியிருக்கார் நம் ஆசிரியர்.

CA Venkatesh Krishnan said...

சூர்யா கண்ணன்,

சாண்டில்யனின் நாவல்கள் காபிரைட் செய்யப்பட்டவை. அதை பதிப்பாளரின் / உரிமையாளரின் அனுமதியின்றி பதிப்பிப்பது தவறு. பொன்னியின் செல்வன் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால் அது இ-புக்காக கிடைக்கிறது.

CA Venkatesh Krishnan said...

//
ஆகாய நதி said...
ஆஹா! நான் இந்த இரு நாவல்களுக்கும் பைத்தியக்காரத்தனமான விசிறி! :)))
//

same blood!!!

CA Venkatesh Krishnan said...

//
பாலராஜன்கீதா said...
எங்கள் அண்ணனுக்கு யவனராணி பிடிக்கும். எனக்கு கடல்புறா பிடிக்கும்.
//

இயற்கையாகவே கடல் புறாவுக்கு யவன ராணியை விட அதிக விசிறிகள் உண்டு!!. நீங்க நம்ம க்ரூப். நன்றி!!

CA Venkatesh Krishnan said...

///
வெட்டிப்பயல் said...
//கன்னி மடம் அல்ல, கன்னி மாடம்..

//

கன்னி மாடம் தான். அவசரத்துல டைப்பிட்டேன். மன்னிக்கவும் :)
///

E&OE !!!

CA Venkatesh Krishnan said...

//
RamKumar said...
சக்ரவியூகம் படித்துக்கொண்டிருக்கிறேன் இது வரை 8 பகுதிகள் படித்துவிட்டேன், மிக அருமையாக எழுதியிருக்கார் நம் ஆசிரியர்.
//

நன்றி ராம்குமார்.

இடையில் பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுது முடியவில்லை. இப்போது மீண்டும் தொடரும்.

Sabarinathan Arthanari said...

உபயோகமான தகவல்கள்!

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்!!
நண்பரே!!

CA Venkatesh Krishnan said...

//
Sabarinathan Arthanari said...
உபயோகமான தகவல்கள்!

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்!!
நண்பரே!!
//

நன்றி சபரி நாதன் !!!

நிகழ்காலத்தில்... said...

கடல்புறா - க்கு என் ஓட்டு.,

அனைத்து படைப்புகளுமே அருமையாக இருக்கும்.

வாழ்த்துக்கள்

ராமகுமரன் said...

சக்ரவியூகம் இதுவரை வெளிவந்த பகுதிகள் முழுவதும் படித்துவிட்டேன், மிக அருமை நன்றி, அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஸ்ரீ வேனுகோபாலன்ன் (புஷ்பா தங்கதுரை) எழுதிய 'திருவரங்கன் உலா' மாலிக் காபூரின் படையெடுப்பையும் அதனால் திருவரங்கத்திற்கு ஏற்பட்ட ஆபத்தையும், அம்மக்கள் எப்படி இயன்றவரை போராடினார்கள் என்பதையும், வேதாந்த தேசிகர் மற்றும் அவரது சிஷ்யர்கள் அரங்கன் உற்சவரை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகளையும், மதுரை சுல்தான் ஆட்சி உருவானதையும் , ஹொஸ்சாலர்கள் அவர்களிடமிருந்து மதுரையை மீட்க முயலுவதையும் விவ‌ரிக்கிறது. அடுத்த பகுதியான 'மதுரா விஜயம்' விஜயநகர‍‍‍,ஹொய்சாள‌ அரசர்களின் உதவியால் அரங்கன் சிலை மீண்டும் திருவரங்கம் கொண்டு வரப்பட்டதையும், மதுரை எப்படி மீட்கப்பட்டது என்பதையும் விவரிக்கிறது. ஆர்வலர்கள் படித்து பயன்பெறலாம்.

நன்றி,
ராமகுமரன்

CA Venkatesh Krishnan said...

//
நிகழ்காலத்தில்... said...
கடல்புறா - க்கு என் ஓட்டு.,

அனைத்து படைப்புகளுமே அருமையாக இருக்கும்.

வாழ்த்துக்கள்
//
நன்றி!!!

CA Venkatesh Krishnan said...

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ராம்குமார். சக்கரவியூகம் தொடர்ந்து வெளிவரும்.

சக்கர வியூகத்தின் ஒரு பகுதி மாலிக் கஃபூரின் படையெடுப்பு. இந்தப் புதினம் மூலம் தமிழகத்தில் தமிழரல்லாத ஆட்சி ஏற்பட்ட சூழலை விவரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

CA Venkatesh Krishnan said...

Thanks for your responses to all of you.

CA Venkatesh Krishnan said...

test

ஷங்கி said...

//பொதுவாகவே, சாண்டில்யனின் நாயகர்கள் 'இன்வின்சிபிள்' வகையைச் சேர்ந்தவர்கள்......//
எனக்கும் இதே தோன்றியது.
எனக்கும் கடல் புறா ரொம்பப் பிடிக்கும். ரொம்ப வருடங்களுக்கு முன் படித்தது. என் நினைவிலிருந்து எழுதுகிறேன். அந்தக் கதையில் அவரின் வழக்கமான வர்ணனைகளை விட கொஞ்சம் குறைவென்று நினைக்கிறேன். (இது தவறாகவும் இருக்கலாம்). இதை ஒரு நல்ல பீரியட் திரைப்படமாக எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

அன்புடன் சங்கா

ஷங்கி said...

இன்னும் சிந்தித்துப் பார்த்ததில், அவரோட ப்ராண்டட் வர்ணனைகள் அதிகமானது பிற்காலத்தில் தான் நினைக்கிறேன். அதுவும் குமுதத்தில் ஒரு தொடரில் ஒரு அத்தியாயம் முழுதும் (Almost; Like the current Mega serial Episodes) கதாநாயகியை வர்ணித்தார்னு நினைக்கிறேன். ஹாவ்வ்வ்!

ராம பக்தன் said...

இரண்டுமே நல்ல புத்தகங்கள் தான். ஆனால் எனது கருத்தில் கன்னி மாடம் மற்றும் மன்னன் மகள் இவற்றை விட நன்றாக இருக்குகின்றது. ஜீவ பூமி என்னும் ஒரு சிறிய நாவல் மிக நல்ல விறுவிறுப்பான ஒன்று. ரதன் சாந்தவந்த் சலும்பரா என்ற ராஜபுத்திர வீரனின் கதை அது.

குப்பத்து ராசா said...

சக்கர வியூகம் மிகவும் நன்றாக உள்ளது. தொடர்த்து எழுதுங்கள்

Anonymous said...

யவனராணியே எனக்குப்பிடித்தது .....ராஜ முத்திரையும் .....மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில எழுத்தாளார்களின் பல்லாயிரம் நூல்கள் வாசித்த வாசகன்.

எட்டு வயதில் வாசிப்பு ஆரம்பம். ஒன்பது வயதில் "ஜலதீபம்" 1970- களில் குமுதம் தொடராக வந்த போதே வாரா வாரம் வாசித்து அகமகிழ்ந்தவன்.சாண்டில்யனின் எல்லா எழுத்துக்களும் பலமுறை வாசித்து இன்னும் வாசிப்பவன். பிடித்த தமிழ் எழுத்தாளார்களின் பட்டியலில் முதல்வர் - சாண்டில்யனே ...எனக்கு பிடித்த சாண்டில்யன் நூல்கள் தர வரிசை : யவனராணி(இளஞ்செழியன் - பூவழகி & யவனராணி) ,ராஜமுத்திரை(வீரபாண்டியன் - இளநங்கை ),ராஜதிலகம்(ராஜசிம்ம பல்லவன் , மைவிழி செல்வி & ரங்கபதாக தேவி ) ,ஜலதீபம் (இதயசந்திரன் - பானு,மஞ்சு,காதரைன்)..எழுதினால் பக்கங்கள் போதாது.....