Thursday, June 25, 2009

லவ் ஆல் (உரையாடல் போட்டிக்கான சிறுகதை)

நகரின் மையமான சாலையில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தை நீங்கள் அந்த வழியாகச் செல்லும் போது ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள். அந்தக் கட்டிடத்தில் கம்பெனி இருக்கிறதென்பதே ஒரு மிகப் பெரிய அட்ராக்ஷன். அப்படித்தான் ராகவனுடைய கம்பெனிக்கும் கிடைத்தது. கம்பெனியின் பெயர், அந்த கட்டிடத்தின் பெயர் எழுதிவிட்டால் போதும். யாரும் வந்துவிடுவார்கள். எப்போதும் விறுவிறுப்புடனும் சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் இருப்பது கம்பெனி, கட்டிடம், ராகவன் ஆகியோரின் ஸ்பெஷாலிட்டி.

====

அன்று வழக்கம் போல் படு டென்ஷனான நாள். நாளை தேவைப்படுவதை நேற்றே வேண்டுமென்று இன்று தலைமையலுவலகத்திலிருந்து வந்த மெயில் எல்லாரையும் பம்பரமாகச் சுழற்றியது.

"அருண், எஞ்சினீரிங்க்லருந்து அந்த ஸ்பெக் ஷீட் ஃபில் பண்ணி வந்துருச்சா?"

"அருண், அக்கவுன்ட்ஸ்ல பட்ஜெட் வேரியன்ஸ் அனலசிஸ் பண்ணிட்டாங்களா?"

"அருண், கையோட மார்க்கெட்டிங் அப்டேட் குடுங்கப்பான்னு கேட்டா அல்வாதான் குடுக்குறாங்க. போய் உடனே வாங்கிட்டுவா"

இப்படியாக சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருந்தான் ராகவன். வயது 36 இருக்கலாம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை டை அடிக்கிறான். முடி வளர்வது நின்றுவிட்டதோ என்ற கவலை உண்டு. இப்போதெல்லாம் சலூனுக்குப் போகும்போது லைட்டா ட்ரிம் பண்ணுங்க என்றுதான் சொல்வான். பத்து வருடங்களுக்கு முன்பு, ஃபுல்லா ஷார்ட் பண்ணிடுங்க என்று சொல்பவன்.


செல்போன் சிணுங்கியது. ப்ச் என்றவாறே எடுத்தவன், "குட் மார்னிங்க் சார். இன்னும் ஆஃப் அன் அவர்ல உங்க இன்பாக்சுக்கு வந்துடும் சார்."

"...."

" ஹி.ஹி.. இங்க இப்பதான் பவர் வந்து சிஸ்டம்லாம் பூட் ஆயிட்டிருக்கு. அதனாலதான் டிலே. "

"..."

"அதெல்லாம் இல்ல சார். நெஜமாவே. இவ்ளோ பெரிய பில்டிங்க்னுதான் பேரு. மெயின்டனன்ஸ் டீமுக்கு காட்டமா ஒரு மெய்ல் போட்டிருக்கேன். உங்களுக்கும் காப்பி போட்டிருக்கேன்."

"..."

"என்னாது.. வர்லியா.. ஓ சாரி சார், மெய்ல் சர்வர் கூட டவுன் தான். இப்ப அனுப்பிச்சிடுறேன்"

"..."

"ஆமா சார். டேட்டாதான்"

"...."

"ஓகே சார். டெஃபனிட்லி"

"...." (டொக்)

"தேங்க்ஸ்" என்று வைத்தவன் வாயிலிருந்து "உஃப்" என்ற ஒலி முத்தாய்ப்பாகக் கேட்டது.

சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ரிப்போர்ட்கள் சென்றுவிட, அடுத்த சுழலுக்குத் தயாரானது கம்பெனி.

====

லஞ்ச் ரூமில் எல்லாரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

"ஒரே ரோதனையாப் போச்சுப்பா. ராகவா, இதுக்கு ஏதாவது வழி பண்ண மாட்டியா?" அருண் கேட்டான்.

"..." மவுனமும் புன் சிரிப்பும் கலந்த பதில்தான் வந்தது ராகவனிடமிருந்து.

====

"ஹலோ, மதுரை?, நான் ராகவன் ரீஜினல் ஆஃபீஸ்லருந்து, கலாவுக்குக் கனெக்ட் பண்ணுங்க"

"கலா எப்படியிருக்கீங்க? செல் ஃபோன் ஆஃப்ல இருக்கு. எனி பிராப்ளம்?"

"..."

"ஓக்கே. ஓக்கே. சாரி. பட் அர்ஜன்ட் ரிகுயர்மென்ட் ஃப்ரம் ஹெச்.ஓ. ஐ அம் ஹெல்ப்லெஸ். உடனே பண்ணி அனுப்புங்க. மெய்ல் அனுப்பியிருக்கேன். இன்ஃபாக்ட் இதை நேத்தே நீங்க அனுப்புவீங்கன்னு எதிர்பார்த்தேன். இனிமே கொஞ்சம் ப்ரோ ஆக்டிவா இருந்துக்குங்க".

"...."

"அதெப்படிங்க, டேட்டா கேட்டா மட்டும் சர்வர் டவுன் ஆகும், பவர் கட் ஆகும்? இந்த ப்ராப்ளம்லாம் இருக்கக் கூடாதுன்னுட்டுதானே, பெரிய புது பில்டிங்க்ல ஆஃபீஸ் புடிச்சது?"

"..."

"இந்தக் கதையெல்லாம் வாணாம். எனக்கு ஒரு மெய்லும் வர்ல"

"..."

"தட்ஸ் யுவர் பிராப்ளம். முடிச்சி அனுப்பிச்சுட்டு, ஒரு தடவ ஃபோன் பண்ணுங்க. நான் ஓக்கே சொன்னதும் கெளம்பிடலாம். பட் உங்க அதர் காண்டாக்ட் நம்பரக் கொடுங்க. ஐ வில் ட்ரை டு அவாய்ட் டிஸ்டர்பிங்க் யூ அஸ் ஃபார் அஸ் பாசிபிள்"

"..."

"ஓகே. தாங்க்ஸ். பை." மறுபடியும் ஒரு "உஃப்"

"ரிப்போர்ட் கேட்டா கத கதயா சொல்றாப்பா" அருணிடம் சொல்லியது ராகவன்தான்.

====

மாலை அலுவலகத்தின் கேம்ஸ் ரூமில் டேபிள் டென்னிஸ் ஆட வந்திருந்தான் ராகவன். கூட அருண்.

"தாங்க்ஸ் பா. எப்படியோ மதுரைலருந்து வாங்கி கொடுத்துட்ட. அந்தம்மா நாளைக்குன்னு சொன்னதும் ரொம்ப டென்ஷனாயிட்டேன். இப்ப ஹெச். ஓக்கு அனுப்பனதுதார் ரிலீஃபா இருக்குது. ஏம்பா எத கேட்டாலும் பிராஞ்ச்ல உடனே கொடுக்க மாட்றாங்க?"

"சரி சரி அதான் முடிஞ்சிடிச்சில்ல. வா. சர்வீஸ் போடு. லவ் ஆல்"

"ஓகே. லவ் ஆல்..." டொக். டொக். டொக். டொக்....

பந்து இங்கும் அங்கும் வந்து போய்க்கொண்டிருந்தது.

12 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பெரும்பகுதி உரையாடல்தானா.., தல..,

ராஜசுப்ரமணியன் S said...

நான் பணியில் இருந்தபோது கிளை அலுவலகம் ஒன்றுக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தால் --ரிப்போர்ட் அனுப்புங்க என்று சொன்னவுடனே போன் சரியாக்கேக்கல நான் திரும்ப பண்றேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிடுவர் அந்த மானேஜர்.எல்லா இடத்திலும் நடப்பது தான்,சாக்கு சொல்வது. உங்கள் கதை நன்றாக இருந்தது.

இளைய பல்லவன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
பெரும்பகுதி உரையாடல்தானா.., தல..,
//

(உரையாடல் போட்டிக்கான சிறுகதை)!!!

இளைய பல்லவன் said...

// ராஜசுப்ரமணியன் S said... //

நன்றி ராஜசுப்ரமணியன் !

☀நான் ஆதவன்☀ said...

ஏற்கனவே எனக்கு கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை...நீங்கெல்லாம் கலந்து இந்த மாதிரி கதை எழுதுனா கன்பாஃர்ம் தான்.

கதை நல்லாயிருக்கு பல்லவன். (படிச்சுட்டு போட்ட கமெண்ட் தான்)

வெற்றி பெற வாழ்த்துகள்

இளைய பல்லவன் said...

//
☀நான் ஆதவன்☀ said...
ஏற்கனவே எனக்கு கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை...நீங்கெல்லாம் கலந்து இந்த மாதிரி கதை எழுதுனா கன்பாஃர்ம் தான்.

கதை நல்லாயிருக்கு பல்லவன். (படிச்சுட்டு போட்ட கமெண்ட் தான்)

வெற்றி பெற வாழ்த்துகள்
//

நன்றி ஆதவன்.
(கமெண்டிற்கும், போட்டியில் கலந்து கொள்ளத் தூண்டியதற்கும்!)

☀நான் ஆதவன்☀ said...

கதைய இங்க இணைக்கல போல...

http://tamil.blogkut.com/contest-uraiyadal.php

இணைத்துவிடவும் பல்லவரே!

கலையரசன் said...

அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

டைம் இருந்தா நம்ம கூட்டதுல
ஐகியம் ஆகுங்க!!

ஓட்டும் போட்டாச்சு..

" உழவன் " " Uzhavan " said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சுபா said...

சுபா கூறியது,
தங்கள் சுய அனுபவத்தை மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்க

இளைய பல்லவன் said...

நன்றி ஆதவன். சேத்துட்டேன். கன்ஃபர்ம் பண்ணிட்டேன்.

இளைய பல்லவன் said...

நன்றி உழவன்.

நன்றி சுபா,

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க..