Sunday, August 2, 2009

புணர்ச்சி பழகுதல்... (150வது பதிவு)

நாம் தினமும் அலுவலகத்தில் சந்திக்கும் பழகும் பலரை விட, எங்கோ மூலையில் இருக்கும் மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ நம்மை தொடர்பு கொள்ளும் நம் நண்பனிடம் கொண்டுள்ள நட்பு பெரியதல்லவா? அந்த நட்பு தானே நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது?

புணர்ச்சி என்பது சேர்க்கையைக் குறிக்கும். சேர்ந்தே இருப்பதெல்லாம் இயைந்திருப்பதாகக் கொள்ளலாகாது.


வார்த்தைகளை, இருப்பை, இயல்பை மீறிய உணர்வு நட்பு. நட்பு பெரும்பாலும் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை, நட்பைத் தவிர.

நான் எதிர் பார்ப்பதும் அதுதான் நட்பு மட்டுமே..

என்னுடைய நூறாவது பதிவும் நட்பைப் பற்றியதுதான் என்று எண்ணும் போது அதன் ஒற்றுமை சற்றே சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. என் 150வது பதிவும் நட்பைப் பற்றியமைந்தது என் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.


புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

(அதிகாரம் நட்பு, குறள் 5)

நல்ல நட்பிற்கடிப்படை புணர்வதன்று (அதாவது சேர்ந்து இருப்பதன்று), உணர்வதுதான் என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறார் தெய்வப்புலவர்.

அந்த உணர்வு பூர்வமான உங்கள் நட்பை என்றும் நாடும்
உங்கள்
இளையபல்லவன்...

8 comments:

சென்ஷி said...

நண்பர்கள் தினத்திலான 150 வது இடுகைக்கும் வா(வ்)ழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்!

150க்கும் ...

துபாய் ராஜா said...

நல்லதொரு 150-வது பதிவு.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

CA Venkatesh Krishnan said...

நன்றி சென்ஷி,

நன்றி ஜமால்,

நன்றி ராஜா!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்களுக்கு இன்னொரு விருதும் கொடுத்திருக்கிறேன்.., பெற்றுக் கொள்ளவும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஃபீலிங்க்ஸ் அப்படின்னு சொல்லுங்க..,

வாழ்த்துக்கள்

CA Venkatesh Krishnan said...

விருதுக்கு நன்றி தல!!

ஃபாலோயர்கள் எல்லோருக்கும் நட்பு விருது கொடுத்தது வித்தியாசமான முயற்சி.

பாராட்டுக்கள்.

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஃபீலிங்க்ஸ் அப்படின்னு சொல்லுங்க..,

வாழ்த்துக்கள்
//

கோ இன்சிடன்ஸா எழுதுற ஃபீலிங்க்ஸ் தான்~~