Sunday, August 30, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? - கந்தசாமி - காம்ப்ரமைஸ்? .. 6

ஒரு படம் எப்படியிருக்கும் என்ற சஸ்பென்ஸ் அதை முதலில் பார்க்கும் போதே உடைந்துவிடும். அல்லது அதைப்பற்றிய விமர்சனத்தைப்படிக்கும் போது கட்டுடைக்கப்பட்டு விடும். இதையும் மீறி அந்தத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுவது எது? அதுதான் திரைக்கதை..

ஜென்டில்மேன் சங்கரின் முதல் படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். மலைக்கள்ளன் புரட்சித்தலைவரின் அதிரடிப்படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். இவை தவிர நிறைய ராபின் ஹூட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சில வெற்றிகள். பல பிளாப்கள்.

வெற்றித் திரைக்கதை அமைப்பதற்கான சில அடிப்படை அமைப்புகளைப்பார்ப்போம். இது இன்க்விசிஷன் செஷன் என்று சொல்லலாம்.

1. நான் இந்தப்படத்தை ரசிகனாகப்பார்க்க நேர்ந்தால் என்ன செய்வேன்?
2. பணம் கொடுத்து சினிமாவிற்கு வரும் ரசிகனுக்கு நான் கொடுக்கும் 'வேல்யூ' என்ன?
3. இந்தப் படம் மூலம் நான் எந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகிறேன்.
4. மெசேஜ் இருந்தால் அதன் 'டோசேஜ்' எவ்வளவு? மற்ற மசாலாக்களில் அது நீர்த்துப் போகுமா?
5. தயாரிப்பாளர், நடிகர்கள் முதலிய 'ஸ்டேக் ஹோல்டர்'களை என் திரைக்கதை பாதிக்கிறதா?

இந்தக் கேள்விகளை ஒரு திரைக்கதை ஸ்கெட்ச் அமைக்கும் போது கேட்டுக்கொள்ள வேண்டும். 100% சரியென்று வந்தால் அந்தப்படம் வெற்றியடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் இல்லை.

இந்தக் கேள்விகளை அடிப்படையாக வைத்துத்தான் நம் அடுத்த பாடங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.

அதற்கு முன்னர் இப்போது பரபரப்பாக அடிபடும் கந்தசாமியைப் பற்றி பார்ப்போம்.

செலவைப் பற்றி கவலையே படாத தயாரிப்பாளர் - கலைப்புலி தாணு
வித்தியாசமான படங்களைத் தந்த இயக்குனர் - சுசி கணேசன்
சூப்பர் ஸ்டாருடன் ஏற்கனவே நடித்துவிட்ட நாயகி - ஸ்ரேயா
அடுத்த சூப்பர் ஸ்டாராக அடியெடுத்துக் கொண்டிருக்கும் - விக்ரம்
புதுமை ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம்
சமீபகாலமாக கலக்கிவரும் இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீப்ரசாத்
மற்றும் வடிவேலு, பிரபு, ஆஷீஷ் வித்யார்த்தி, எக்ஸ், ஒய், இசட்...
வெரைட்டி லொக்கேஷன்கள்



இப்படி ஒரு மெகா கூட்டணியிருந்தும் மக்களுக்கு திருப்தியில்லாமல் போனது ஏன்?


பிரம்மாண்டத்தில் காணாமல் போன லாஜிக். அதனாலேயே அன்னியப்பட்டுவிட்ட காட்சியமைப்புகள்.

சிவாஜிக்கு அளிக்கப்பட்டதை விட கூடுதலாகக் கொடுத்து விட்டதால் ஸ்ரேயா கூடுதலாக குறைக்க வேண்டிய நிலை. அதனாலேயே முகத்தைச் சுளிக்கும் மக்கள்.

சம்பிரதாயத்திற்கு தலை காட்டுவது போல் வடிவேலு.

வலுவில்லாத வில்லன் ஆசீஷ் வித்யார்த்தி.

இத்தனைக்கும் படம் ஒடுவது மூன்று மணி நேரத்திற்கும் மேல்.

=====


என்னைப் பொறுத்தவரை இயக்குனர் பல இடங்களில் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

கலைஞனுக்கு சுதந்திரம் முக்கியம். அவனது கிரியேட்டிவிட்டியில் மற்றவர்கள் கைவைத்தால் அவ்வளவுதான். அன்ஃபார்ச்சுனேட்லி, இன்றைய தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் நிலை இதுதான்.



====

சரி ஒரு சிறு எக்சர்சைஸ் செய்யலாமா? கந்தசாமி படத்திலுள்ள உங்களுக்குப் பிடிக்காமல் போன இடங்களையும், அது எப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறீர்களா?

9 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வில்லனும் வில்லத்தனமும் சிறப்பாக இருந்திருந்தால் படம் அத்தனை ஓட்டைகளையும் தாண்டி ஓடியிருக்கும்..,

☀நான் ஆதவன்☀ said...

//சரி ஒரு சிறு எக்சர்சைஸ் செய்யலாமா? கந்தசாமி படத்திலுள்ள உங்களுக்குப் பிடிக்காமல் போன இடங்களையும், அது எப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறீர்களா?//

மூனு மணி நேர படமே பிடிக்கலையே தலைவா? டோட்டலா கதையவே மாத்தனுமே :)

வெட்டி வேலு said...

//சரி ஒரு சிறு எக்சர்சைஸ் செய்யலாமா? கந்தசாமி படத்திலுள்ள உங்களுக்குப் பிடிக்காமல் போன இடங்களையும், அது எப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறீர்களா?//

உங்க கேள்வியே சரியில்ல... :) இப்படி கேக்கலாம் பேசாம,

உங்களுக்கு பிடிச்ச சீன் ஏதாவது படத்துல இருக்கா?

அப்படி எதுவும் இந்த படத்துல இல்லங்க...

இருந்தாலும் குருவி, வில்லு, ஏகன், தோரனை, சத்யம் படங்களா விட இது பெட்டர்...

CA Venkatesh Krishnan said...

// SUREஷ் (பழனியிலிருந்து)///

ஆமா தல. வில்லன் எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கோ, அந்த அளவுக்கு ஹீரோவுக்கு புகழ் கிடைக்கும்.

CA Venkatesh Krishnan said...

// ☀நான் ஆதவன்☀ ///


மூனு மணி நேர படமே பிடிக்கலையே தலைவா? டோட்டலா கதையவே மாத்தனுமே :)
///

என்ன பண்றது ஆதவன். இப்படி ஆகிப்போச்சே!!!

CA Venkatesh Krishnan said...

// வெட்டி வேலு said...///

வாங்க வெட்டி வேலு, வில்லு, குருவிய விட பெட்டர்னு சொன்னீங்க பாருங்க. அங்க தப்பிச்சிது படம்!!

பெருங்காயம் said...

படத்திற்கு தேவையில்லாத பிரம்மாண்டம், பாடல், காமெடிகள் இல்லாமல் இருக்கணும். எதற்காக இத்தனை வேடங்கள்? பழைய கதையானாலும் விறுவிறுப்பான திரைக்கதை வேண்டும்.
நான் ஒரு கதை ரெடிசெய்தேன். நம்ம விஜயகாந்துதான் காதாநாயகன். ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்திய அரசியல்வாதிகளின் பணத்தை வெளிக்கொண்டுவர இந்தியாவின் பிரதமராகிறhர். ஸ்விஸ் வங்கியில் கொள்ளையடிக்கிறhர். ஒரு அரசாங்கமே வங்கியில் கொள்ளையிடிக்கிறது. அரசியியல் வாதிற்கு கொள்ளையடிப்பது எளிதே. இது எப்படியிருக்கு................?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Shraya vap paarhtaale vomit varuthuppaaa

கிள்ளிவளவன் said...

neenga ennathaan sonnalum. padam hit thalaiva... so ....