Saturday, August 1, 2009

சீரியல்களை எதிர்ப்போரே! சற்று சிந்திப்பீரா???

சே! என்ன உலகமடா இது. நல்லது செய்வோரை நாடாமல் நிந்திப்போரை என்ன செய்வது? தெய்வமே உனக்குக் கண் இல்லையா? இருந்தும் காட்சி தெரியவில்லையா? கலி முற்றிவிட்டதா? அல்லது கருணைதான் வற்றி விட்டதா? என்ன கொடுமை சரவணன் இது??

இப்படியெல்லாம் புலம்பத் தோன்றுகிறது சீரியல்களை எதிர்ப்போரைப் பார்த்து.

சீரியல் எடுப்பவர்களை சீரியல் கில்லர்ளாகப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று நேரடியாகவே கேட்கிறேன்.

முடிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்..

சீரியல் எடுப்பது சிம்பிளான வேலையா? சீரியல் என்பது எவ்வளவு சீரியஸ் மேட்டர் என்பதை உங்களுக்கெல்லாம் உறைப்பதைப் போல் எடுத்துரைக்கவே இந்தப் பதிவு!

முதலில் ஒரு ஸ்டேடிஸ்டிக்ஸ் (புரட்சிக் கலைஞர் ரேஞ்சுக்கு இல்லைன்னாலும் புரட்சி தளபதி ரேஞ்சுக்கு இருக்கும்!!)

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. அதாவது தொலைக்காட்சி விளம்பரங்களுக்குத் தணிக்கை வேண்டுமென்பதே அது. அந்த விவகாரம் ஒரு புறமிருக்க, ஒரு சுவையான தகவலை அமைச்சர் (பெண் அமைச்சரை எப்படி அழைப்பது?!) அம்பிகா சோனி அவர்கள் சொன்னார். இந்தியாவில் 480 அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் இருக்கின்றன என்பதுதான் அது.

480 சேனல்களில் 75 விழுக்காடு என்டெர்டெய்ன்மென்ட் சேனல்கள் என்றால் 360 சேனல்கள். அதில் ஒரு நாளைக்கு 10 சீரியல் என்றால் கூட ஒரு நாளைக்கு 3600 சீரியல்கள்!! இதில்லாமல் வார இறுதி சீரியல்கள் என்றெல்லாம் வைத்துக் கொண்டால் கூட 4000 முதல் 5000 சீரியல்கள் ஒரு வருடத்தில் டி.வி.யில் ஓடி(ஊர்ந்து)க்கொண்டிருக்கின்றன. இதற்கு எத்தனை நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், இன்ன பிற தொழில் நுட்பக் கலைஞர்கள்???

(ஸ்டேடிஸ்டிக்ஸ் முடிவுற்றது..)

இப்போது தெரிந்து கொண்டீர்களா??

இன்னொரு ஸ்டேடிஸ்டிக்ஸ்

டிவியில் எத்தனை வகைகள் என்று தெரியுமா?? (பிளாக் அன்ட் வொயிட், கலர், எல்.சி.டி. இன்னுல்லாம் சொல்லக்கூடாது)

டி.டி., கேபிள், சி.ஏ.எஸ், டி.டி.எச் (இதுல சன், டாடா, ஜீ, பிக், ஏர்டெல் அப்படின்னு ரகங்கள்)

ஒவ்வொருத்தருடைய டீ.வி.லயும் 30முதல் 300-400 சேனல் வரை இருக்கு...

(இன்னொரு ஸ்டேடிஸ்டிக்ஸ் முடிந்தது)

இப்படி 480 சேனல்களும், டிஷ் டி.டி.எச் டிவிக்களும் சேர்ந்து கொண்டு போட்டி போட்டு மக்களுக்கு சேனல்களை அளிக்கின்றன.

போதாக்குறைக்கு ரிமோட் வேறு ஒவ்வொருத்தர் கையிலும் இருக்கிறது. ஒரு செகண்ட் தொய்வா இருந்தாலும், உடனே அடுத்த சேனல் மாறும் நம் முன்னோர்களின் குணம் மட்டும் மாறாமல் இருக்கிறது.

இத்தனை இருக்கும் போது மக்களைக் கட்டிப் போட தேவையான கயிறு ஒன்று வேண்டுமல்லவா??? அந்த மந்திரக் கயிறுதான் சீரியல்.......

மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மச்சினர், கணவர், மாமனார், அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, மற்றும் ஒண்ணுவிட்ட மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மச்சினர், கணவர், மாமனார், அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, மற்றும் ரெண்டுவிட்ட மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மச்சினர், கணவர், மாமனார், அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, மற்றும் பல பெயர் தெரியாத உறவுகளுடன் கதையை நகர்த்திச் செல்வது எவ்வளவு கடினமான வேலை என்பது சீரியல் எடுப்பவர்களுக்குத்தான் தெரியும்.

சீரியல் பார்ப்பதை விட எடுப்பது என்பது எவ்வளவு கொடுமையான செயல்???
ஒரு சீரியலில் ஒருவர் வில்லி அத்தையாக நடிப்பார். அடுத்த சீரியலில் அவரே நல்ல கஷ்டப்படும் அம்மாவாக இருப்பார். கன்டினுடியை எப்படி மெய்ன்டைன் செய்வது??

சரி கதைகளாவது அதிகம் இருக்கிறதா??? மாமனார் இல்லாமல் இருக்கலாம், கணவர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மாமியார் மருமகள் ஆகிய கேரக்டர்கள் இல்லாத ஒரு சீரியலை நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா? மாமியார் மருமகள் ஆகிய இரு கேரக்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வளவு வெரைட்டி படைக்கிறார்களே இதைப் பார்த்துமா உங்களுக்குப் பரிதாபம் வரவில்லை???

கதை கிடக்கட்டும் க(ழு)தை. நடிகர் நடிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். திடீர் திடீரென அவர்கள் காணாமல் போகும் போது 'அவர் இவராகிவிட்டார்' என்று கேப்ஷன் போடும் போது அவர்கள் படும் பாடு உங்களுக்குத் தெரியுமா????

அதையும் விடுங்கள்... டைட்டில் சாங்க் என்று ஒன்று இருக்கிறதே... அதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. எத்தனை குருப் டேன்சர்கள் தேவைப் படுகிறார்கள். எத்தனை முறை சீரியல் டைட்டிலை ரிப்பீட்ட வேண்டியிருக்கிறது.. ஒவ்வொரு சீரியலுக்கும் டைட்டில் சாங்க் வெரைட்டி வைப்பது பெண்டை நிமிர்த்துகிற வேலை....

அட அதைக்கூட விட்டுவிடுங்கள்.. இந்த ஸ்லாட் என்று ஒன்று இருக்கிறதே.. இறைவன் எவ்வளவு கஞ்சமானவன். ப்ரைம் டைம் மூன்று மணி நேரம் மட்டும்தானாம். கடவுளே, அதுவே ஆறு அல்லது எட்டு மணி நேரம் என்று இருந்துவிட்டால் எத்தனை சீரியல்களை திணித்து விடலாம்.. இப்போது சீரியல் எடுப்பவர்கள் ப்ரைம் டைமுக்குள் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது....

ஹூம்... மகா ஜனங்களே... ஏதோ டிவி இருக்கிறதா, கேபிளோ, டிஷ்ஷோ வாங்கினோமா? டிவியைப் போட்டோமா, புரோகிராமைப் பார்த்தோமா, என்று இருக்காமல், அது சரியில்லை இது சரியில்லை, அதனால் இதுவாயிற்று, இதற்கு அது காரணம் என்று சீரியலைப் பற்றி சீரியல் கணக்காக குறை சொல்வதை நிறுத்துங்கள்.

நீங்களெல்லாம் சிந்தித்து செயல்பட்டாலே போதும்... துன்பங்கள் யாவும் தீரும்...

12 comments:

சென்ஷி said...

//மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மச்சினர், கணவர், மாமனார், அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, மற்றும் ஒண்ணுவிட்ட மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மச்சினர், கணவர், மாமனார், அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, மற்றும் ரெண்டுவிட்ட மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மச்சினர், கணவர், மாமனார், அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, மற்றும் பல பெயர் தெரியாத உறவுகளுடன்//

சகலையை விட்டுட்டீங்களே மச்சான்!

☀நான் ஆதவன்☀ said...

இந்த கூவு கூவுறத பார்த்தா ஏதோ ஒரு சீரியலுக்கு உங்ககிட்ட கதை கேட்டுருக்காங்க போலயே... :)

☀நான் ஆதவன்☀ said...

பதிவுக்கு தலைப்பு “உள்குத்து”ன்னு வச்சிருக்கலாம்

CA Venkatesh Krishnan said...

///
Blogger சென்ஷி said...

சகலையை விட்டுட்டீங்களே மச்சான்!

///

ஆகா, பெருந்தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி

CA Venkatesh Krishnan said...

//☀நான் ஆதவன்☀ said...

இந்த கூவு கூவுறத பார்த்தா ஏதோ ஒரு சீரியலுக்கு உங்ககிட்ட கதை கேட்டுருக்காங்க போலயே... //

அப்படி யாராவது கேக்க மாட்டாங்களான்னு இப்பவே துண்ட போட்டு வச்சிக்கறதுக்குதான்..

CA Venkatesh Krishnan said...

///☀நான் ஆதவன்☀ said...

பதிவுக்கு தலைப்பு “உள்குத்து”ன்னு வச்சிருக்கலாம்///

இவ்வளவு வெளிப்படையா இருக்கு. அதப்போயி....

Sathis Kumar said...

அடுத்த வாரம் 'சக்கர வியூகம்'னு ஒரு சீரியல் வர்றதா பேச்சு அடிபடுது... உண்மையாவா சகா? :)

சென்ஷி said...

இதுல அண்ணன், தம்பி கூட இல்லை :-(

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் said...

அடுத்த வாரம் 'சக்கர வியூகம்'னு ஒரு சீரியல் வர்றதா பேச்சு அடிபடுது... உண்மையாவா சகா? :)//

அப்படியில்லைங்க. நான் மெகா சீரியல் எடுத்தா அதுக்கு சுத்தாத சக்கரம்னு பேர் வைப்பேன். அப்பதான் ரொம்ப நாள் இழுக்கலாம்!!

CA Venkatesh Krishnan said...

சென்ஷி,

இது மெகா சீரியல். அதனால, பெண்கள் சம்பந்தப்பட்ட கேரக்டர்களுக்குத்தான் முக்கியத்துவம்!! (அவ்வ். எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

CA Venkatesh Krishnan said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே//

அடி பலமா இருக்குமோ!!