சாப்பிட டோக்கன் வாங்குவதற்காக அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கியூவில் நிற்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
அப்படி கூட்டம் வந்தாலும் இருக்கும் 40 சீட்களுக்கு மேல் கூட்ட மாட்டேன் என்று சொல்லும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?
ஞாயிறு இரவு, தீபாவளி / பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஒரு வாரம் என்று கடையை மூடும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?
ஒரே சாப்பாட்டையே பல விதமான காம்பினேஷன்களில் கொடுக்கும் இடம் ஏதாவது இருக்கிறதா?
இப்படிப்பட்ட 'இருக்கிறதா'க்களுக்கு ஒரு (ஒரே?) பதில்தான் 'காசி வினாயகா மெஸ்'. சென்னையில் பேச்சுலராக இருந்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கிற ஒரு மெஸ். பேச்சுலர்ஸ் பேரடைஸ் என்று அழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் அக்பர் தெருவில் இருக்கிறது இந்த மெஸ்.
எனக்கு சற்றேறக்குறைய 15 ஆண்டுகளாகப் பழக்கம். அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியான சுவை, அளவு மற்றும் அமைப்புதான் அந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி.
அந்த மெஸ்ஸைப் பற்றி ஒரு அறிமுகம்.
அக்பர் தெரு ஒரு சிறிய சந்து. அதில் ஒரு வீடு மாதிரியான இடத்தில்தான் இந்த மெஸ் இருக்கிறது. மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு மட்டும்தான். டிஃபன் காபி போன்றவை இல்லை. மதியமென்றால் 1 மணி முதல் கியூ சேர்ந்து விடும். இரவென்றால் 8 மணி முதல் கியூ இருக்கும்.
மொத்தம் 40 சீட்கள். நான்கு வரிசையாக இருக்கும். முதல் இரண்டு வரிசை ஒரு பேட்ச் ஆகவும் அடுத்த இரண்டு வரிசை மற்றொரு பேட்ச் ஆகவும் பரிமாறுவார்கள். முதல் வரிசை 'யெல்லோ டோக்கன்' என்று சொல்வார்கள். அடுத்த வரிசை, 'ஒயிட் டோக்கன்'.
முதலில் டோக்கன் வாங்க வரிசையில் நிற்க வேண்டும். 20 பேருக்குத்தான் டோக்கன். அவர்கள் சாப்பிட்டு முடித்தஉடன் அடுத்த 20 பேருக்கு சாப்பாடு. இப்படித்தான் போகும்.
அளவு சாப்பாட்டிலேயே இரண்டு வகை உண்டு. சாதா, லிமிட்(!). சாதாவில் ரெகுலர் 'பட்டை'யும் லிமிட்டில் சிறிய பட்டையும் இருக்கும். அதற்கு ஒரு டோக்கன் உண்டு!.
தயிர் வேண்டுமென்றால் அதற்கு ஒரு டோக்கன்.
மதியம் பருப்பு நெய், இரவு பருப்பு பொடி நெய் ஸ்பெஷல் உண்டு. இது வேண்டாம் என்பவர்களுக்கு 2 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.
அதே போல் அப்பளம் வேண்டாம் என்பவர்களுக்கு 1 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.
இவை வேண்டாம் என்றால் சர்வரிடம் சொல்ல வேண்டும். அவர் ஒரு டோக்கன் தருவார். அதை கல்லாவில் கொடுத்தால் அங்கே பணம் ரிட்டர்ன் கிடைக்கும்.
வேகமாக சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த செட் வந்து விடும். பரிமாறல்கள் எல்லாம் வரிசையாக வருவார்கள். பொரியலும், கூட்டும் இரண்டாவது முறை உண்டு.
உணவு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாததுதான் இந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி. வேறு சில மெஸ்களில் சாப்பிட்டிருக்கிறேன். அங்கேயெல்லாம் சாதத்தில் சுண்ணாம்பு போடுவார்கள். அது அசிடிட்டியை உருவாக்கும். இங்கே அப்படியில்லை.
இந்த மெஸ்சுக்கு பல 'வருடக்கணக்கான' வாடிக்கையாளர்கள் உண்டு.
திருமணத்திற்குப் பிறகு இந்த மெஸ்சுக்குப் போக முடியவில்லை :(.
ஆனாலும் வீட்டில் எப்போதாவது ஊருக்குப் போனால் திருவல்லிக்கேணிக்கு இங்கு சாப்பிடுவதற்காகவே செல்வேன்.
தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி - காசி வினாயகா மெஸ்...
23 comments:
விநாயகாவுக்கு வாழ்த்துக்கள்
நானும் அந்தக் கூட்டத்தில ஒருத்தந்தான்
நாங்கள் அங்கே சாப்பிடும் போது ரிட்டர்ன் வசதி கிடையாது. எக்ஸ்ட்ரா சாப்பாடு டோக்கன் உண்டு
முக்கியமானதை விட்டு விட்டீர்கள்
நோ பார்சல்.
நானும் அந்தக் கூட்டத்தில ஒருத்தந்தான்
நாங்கள் அங்கே சாப்பிடும் போது ரிட்டர்ன் வசதி கிடையாது. எக்ஸ்ட்ரா சாப்பாடு டோக்கன் உண்டு
முக்கியமானதை விட்டு விட்டீர்கள்
நோ பார்சல்.
//திருமணத்திற்குப் பிறகு இந்த மெஸ்சுக்குப் போக முடியவில்லை :(.//
ஏன்? ரெண்டுபேருமாப் போய் ஒருநாள் சாப்பிடலாமே. தங்க்ச்க்கும் ஒருநாள் லீவு கிடைக்குமே:-)
பெண்களுக்கு அனுமதி உண்டா இல்லே இல்லையா?
சென்னை நினைவுகளை கிளறி வீட்டீர்கள். நான் இரவு ஷிப்ட் பார்த்துக் கொண்டு இருக்கும் போது பெரும்பாலான நேரங்களில் எனக்கு ப்ரேக்பாஸ்ட் (இரவு 8 மணி) காசி விநாயகாவில் தான். வேகமாக சாப்பிடத் தெரியாத நான், பெரும்பாலும் கடைசியாகத் தான் எழுந்திருப்பேன். எஸ்.இரா தனது ‘துணையெழுத்தில்’ காசி விநாயகா பற்றி எழுதி இருக்கிறார். முடிந்தால் படியுங்கள். அப்பிடிக்கா நம்ம ப்ளாக் பக்கமும் விசிட் அடியுங்கள். ஓட்டும் போட்டாச்சு...
சூளைமேட்டில் அன்னை மெஸ்சும், சைதையில் கலைமகள் மெஸ்சும் ரொம்ப ஃபேமஸ்.
//
SUREஷ் (பழனியிலிருந்து) said...
விநாயகாவுக்கு வாழ்த்துக்கள்
//
வாங்க தல ! வாழ்த்துக்களுக்கு நன்றி!
சென்னை வரும்போது இந்த மெஸ்ல ஒரு ட்ரை பண்ணிப்பாருங்க!
//
முரளிகண்ணன் said...
நானும் அந்தக் கூட்டத்தில ஒருத்தந்தான்
நாங்கள் அங்கே சாப்பிடும் போது ரிட்டர்ன் வசதி கிடையாது. எக்ஸ்ட்ரா சாப்பாடு டோக்கன் உண்டு
முக்கியமானதை விட்டு விட்டீர்கள்
நோ பார்சல்.
//
வாங்க முரளிகண்ணன்.
முக்கியமான ரெண்டை நீங்க பாயின்ட் அவுட் பண்ணிட்டீங்க.
1. எக்ஸ்ட்ரா சாப்பாடு
2. நோ பார்சல்
///
துளசி கோபால் said...
//திருமணத்திற்குப் பிறகு இந்த மெஸ்சுக்குப் போக முடியவில்லை :(.//
ஏன்? ரெண்டுபேருமாப் போய் ஒருநாள் சாப்பிடலாமே. தங்க்ச்க்கும் ஒருநாள் லீவு கிடைக்குமே:-)
பெண்களுக்கு அனுமதி உண்டா இல்லே இல்லையா?
///
வாங்க மேடம்.
பெண்களுக்கு நிச்சயமா அனுமதி உண்டு. என்ன ஃபாஸ்டா சாப்படணும். தங்க்ஸ கூப்டிருக்கேன். நீங்க சொன்னதையும் சொல்றேன்.
// பிரசன்னா இராசன் said... //
வாங்க ப்ரசன்னா! எஸ்.ராவைப்படிக்கிறேன். நிச்சயம் உங்கள் வலைப்பூவிற்கும் வருகிறேன்!
//
துபாய் ராஜா said...
சூளைமேட்டில் அன்னை மெஸ்சும், சைதையில் கலைமகள் மெஸ்சும் ரொம்ப ஃபேமஸ்
//
வாங்க துபாய் ராஜா..
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. அந்தப்பக்கம் போய்ப்பார்க்கிறேன்.
//கலைமகள் மெஸ்சும் //
இது மேற்கு சைதையில் இருக்கிறதா??
good coverage
வயிற்றுக்கு உபாதை தராத இடமென்றால் கூட்டம் சேரக் கேட்பானேன். நாம போகலாம் துளசி ஒரு நாளைக்கு!!
நன்றி தகவலுக்கு.
நன்றி ஷிரடி சாயிதாசன் அவர்களே!
நன்றி வல்லிசிம்ஹன் மேடம்!
சுவை முக்கியமாக நன்றாக இருக்கிறது.சாப்பிடுபவர்களுக்கு நன்றாக ஒத்துக்கொள்கிறது. கண்டிப்பா ஒரு முறை போய் ட்ரை பண்ணுங்க!
கண்டிப்பா அடுத்த விசிட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு ஒரு பதிவே போடுறேன் :)
நீங்க சுத்திகிட்டதும் இல்லாம நிறைய பேருக்கு கொசுவத்தி சுத்தியிருக்கீங்க போல...குட் :)
காசி வினாயகருக்கு நானும் அடிமை
எப்போது சென்னைக்கு வந்தாலும் அங்கு வந்து சாப்பிட்டாதான் ஒரு திருப்தி.(அதுவும் அந்த பைனாப்பிள் ரசம், பருப்பு சாம்பார், பருப்பு பொட்டி ...... ஆஹா ).
நான் எழுத வேண்டும் என்று இருந்தேன்.
பதிவுக்கு நன்றி.
ya i too had food once, but its not suitable with wife or sister. fully crowded with males,
Triplicane itslelf is a SEVAL PANNAI.
///☀நான் ஆதவன்☀ said...
கண்டிப்பா அடுத்த விசிட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு ஒரு பதிவே போடுறேன் :)
நீங்க சுத்திகிட்டதும் இல்லாம நிறைய பேருக்கு கொசுவத்தி சுத்தியிருக்கீங்க போல...குட் :)///
ஆதவன், வாங்க. ஒரு முறை அங்கே போய் சாப்டு பாருங்க. விடவே மாட்டீங்க!
ம். நெறய கொசுவத்தி வெளிய வரும். ஏன்னா காசி வினாயகரோட ஃபேமஸ் அப்படி.
Blogger சரவணன். ச said...
காசி வினாயகருக்கு நானும் அடிமை
எப்போது சென்னைக்கு வந்தாலும் அங்கு வந்து சாப்பிட்டாதான் ஒரு திருப்தி.(அதுவும் அந்த பைனாப்பிள் ரசம், பருப்பு சாம்பார், பருப்பு பொட்டி ...... ஆஹா ).
நான் எழுத வேண்டும் என்று இருந்தேன்.
பதிவுக்கு நன்றி.///
வாங்க சரவணன்!
//பருப்பு பொட்டி ...... ஆஹா )//
பொடின்னு எழுதும் போதே நாக்குல எச்சில் ஊறி பொட்டியாயிருச்சா!!
///ராம்ஜி.யாஹூ said...
ya i too had food once, but its not suitable with wife or sister. fully crowded with males,
Triplicane itslelf is a SEVAL PANNAI.
///
வாங்க ராம்ஜி யாஹூ. அப்படின்னு சொல்ல முடியாது. நானே நெறைய லேடிஸ் அங்க சாப்பிடறத பாத்திருக்கேன். என்ன ஒண்ணுன்னா, ஃபாஸ்டா சாப்புடணும், கூட்டத்தையும் கண்டுக்கக்கூடாது.
நம்மாளுங்கல்லாம் காசி வினாயகாவில சாப்பிட உக்காந்தாங்கன்னா இலையத்தவிர வேற ஒண்ணையும் பாக்கமாட்டாங்க!
என் நினைவுகளை மீண்டும் மீட்டி விட்டீர்கள். பத்தொன்பது வருடங்களுக்கு முன் நான் அக்பர் சாகிப் தெருவில் பிஸ்மி மேன்ஷனிலிருந்தபோது, பக்கத்துக் கட்டடத்தில் காசி விநாயகா மெஸ் தொடங்கினார்கள். இன்னும் சக்கைபோடு போடுகிறதா?! என்னுடைய ஒரு இடுகையில் இந்த மெஸ்ஸை கோடி காட்டியிருந்தேன்.
வெள்ளை டோக்கன்லாம் வாங்க, மஞ்ச டோக்கன்லாம் வாங்கன்னு கூப்பாடு போட ஒருத்தர். வரிசையாக கூட்டு, பொரியல், சோறு, குழம்பு என்று டக் டக் என்று அவர்கள் வைக்கும் பாங்கு ஒரு கலையனுபவம். என்ன ரசிச்சுச் சாப்பிட முடியாது! மஞ்ச டோக்கன்காரர்களோ, வெள்ள டோக்கன்காரர்களோ வெளியே வெயிட் பண்ணிக் கொண்டிருப்பார்கள். இன்னும் நிறைய எழுதலாம். பதிவாக ஆகிவிடும். ஆகிருச்சோ?!
/// சங்கா said...
என் நினைவுகளை மீண்டும்... //
வாங்க சங்கா... இன்னும் அதே வெள்ளை, மஞ்சள் டோக்கன்தான்!. இன்னும் சக்கை போடு போடுது. உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி!!
Post a Comment