Monday, August 31, 2009

காஞ்சித்தலைவனுக்கு வயது ஒன்று!


சரியாக கி.பி.2008, ஆகஸ்டு மாதம். சுக்கில பட்சத்து பவுர்ணமி நிலவு தன் கிரணங்களை வீசி இருட்டைப் போக்கும் முயற்சியில் வெற்றிபெற துடித்துக்கொண்டிருக்கும் போது, அந்த முயற்சியைத் தடுக்கும் விதமாக ஓங்கி அடர்ந்த மரங்கள் தங்கள் கரிய நிழலை படரவிட்டுக்கொண்டிருந்த ஓர் சோலையின் மூலையில் அமர்ந்திருந்தான் ஒருவன். அவன் சிந்தனையில் உதித்த எண்ணங்களின் வண்ணங்கள் அவன் முகத்தில் அந்தக் கும்மிருட்டிலும் தெளிவாகத் தெரிந்தன. முடிவு செய்துவிட்டான்.

எல்லோரும் குதித்து விட்டார்கள், நாம் குதிக்க யோசித்தால் எப்படி?? குதித்துவிட வேண்டியதுதான்...

மற்றொரு சுபயோக சுப நாளில் (யாருக்கு என்று கேட்டால், யாருக்கோ என்றுதான் பதில் வரும்!!) பிளாக்கர் வழங்கும் இலவச சேவையில் தன் பதிவைப்போட்டு. ஒரே பதிவை மூன்று முறை எழுதி தமிழ்மணத்தின் தேவையையும் பூர்த்தி செய்து தன் திறமையைக் காட்டினான்.

வந்தாரை வாழவைக்கும் வலைப்பூக்களம் இவனை வஞ்சிக்கவில்லை. பின்னூட்டங்களை வாரி வழங்காவிடினும், வயிற்றுக்குக் குறைவில்லாமல் தந்துகொண்டிருந்தது. நட்சத்திரம் என்று இடையில் மின்னி, பணிச்சுமையில் காணாமல் போய், தட்டுத்தடுமாறி, திக்கித் திணறி ஒர் ஆண்டை வெற்றிகரமாகக் கடந்துவிட்டான்.

ஆம் காஞ்சித்தலைவனுக்கு ஒரு வயது நிரம்பிவிட்டது.

இது நல்லதோ, கெட்டதோ, எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான்!!.

ஒரு வேளை அதிக பின்னூட்டங்கள் வந்தால் "ஆஹா, இவ்வளவு புகழறாங்களே, இவங்களுக்காக நெறய எழுதணும்"னு எழுதுவான்.

வழக்கம் போல் பின்னூட்டங்கள் வரவில்லையென்றால் "ஆஹா, நாம எழுதறது இவங்களுக்குப் பிடிக்கலையோ? மாத்தி எழுதணும்"னு எழுதுவான்.

உங்களோடு மேலும் வளர உங்கள் நல் ஆதரவை என்று நாடும்,
உங்கள்
காஞ்சித்தலைவனாகிய
இளையபல்லவன்..



பி.கு:- இந்தப் பதிவு போடக் காரணமாக இருந்த நான் ஆதவனுக்கு நன்றிகள் பல!!

12 comments:

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் இளைய பல்லவன் !

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் பல்லவன் :)


//ஒரு வேளை அதிக பின்னூட்டங்கள் வந்தால் "ஆஹா, இவ்வளவு புகழறாங்களே, இவங்களுக்காக நெறய எழுதணும்"னு எழுதுவான்.

வழக்கம் போல் பின்னூட்டங்கள் வரவில்லையென்றால் "ஆஹா, நாம எழுதறது இவங்களுக்குப் பிடிக்கலையோ? மாத்தி எழுதணும்"னு எழுதுவான்.//

பின்னூட்டம் போட்டாலும் போடலைனாலும் எங்களை விடமாட்டீங்கன்னு சூசகமா சொல்லிட்டீங்க :)

☀நான் ஆதவன்☀ said...

பின்னூட்டத்தை பற்றி கவலைப்பட்டதால இன்னொன்னு :)

☀நான் ஆதவன்☀ said...

//பி.கு:- இந்தப் பதிவு போடக் காரணமாக இருந்த நான் ஆதவனுக்கு நன்றிகள் பல!!//

இதுக்கு இன்னொன்னு :)

☀நான் ஆதவன்☀ said...

சரி வரட்டா :)

CA Venkatesh Krishnan said...

நன்றி கோவி.கண்ணன்!

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன்!

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நமது கடன் பதிவெழுதிக்கிடப்பதே!

இதுதான் என் தாரக மந்திரம்!!

வெட்டி வேலு said...

///வந்தாரை வாழவைக்கும் வலைப்பூக்களம் இவனை வஞ்சிக்கவில்லை. ///


வாழ்த்துகள் :)

CA Venkatesh Krishnan said...

நன்றிக்கு நன்றி!

வர்ட்டாவுக்கும் நன்றி!!!

Nimal said...

வாழ்த்துகள் ... !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இனிமேல் காஞ்சித்தலைவனின் சேட்டைகள் அதிகமாகிவிடும் என்று சொல்லுங்கள். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பாரோ..,

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் அண்ணா :)