Friday, March 13, 2009

எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும் நான்

வழக்கம் போல சுற்றிக் கொண்டிராமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். இதைப் படித்தபின் இதுதானா விஷயம் என்று ஆச்சரியக் குறியும், ஸ்மைலியும் போடலாமே ஒழிய, இதுதானா விஷயம் என்று கேள்விக் குறியோ, அழுகை ஸ்மைலியோ போடக்கூடாது என்ற விஷயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன். (ஆஹா.. விஷயத்தைக் கூறாமலேயே முதல் பாராவை முடிப்பதில்தான் எத்தனை திருப்தி!!!)

சரி விஷயத்திற்கு வருகிறேன். அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன். மற்ற ப்ரொஃபஷனல் கோர்ஸ்களைப் போலல்லாமல், சி.ஏ.வை ஆடிட்டரிடம் வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும். இப்படி வேலை செய்யாமல் சில பேர் பேப்பரில் மட்டும் சர்டிஃபிகேட் வாங்கி விடுவார்கள்.இவர்களை 'டம்மி ஆர்டிகிள்ஸ்' என்று அழைப்போம். இவர்கள் படித்துக் கொண்டேஏஏஏஏஏ இருப்பார்கள். ஏன் இங்கே இழுக்கிறேன் என்றால், சி.ஏ. தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள் ப்ராக்டிகலான விஷயங்கள் சம்பந்தப் பட்டவை. ஆகவே டம்மி ஆட்களெல்லாம் தேர்வில் பம்மித்தான் ஆகவேண்டும்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத சப்ஜக்ட் ஒன்று உண்டு. அதுதான் ஆபரேஷனல் ரிசர்ச். ஆபரேஷனை ரிசர்ச் செய்து என்ன கிழிக்கப் போகிறோம் என்று தெரியாத நிலையில் அந்த சப்ஜக்ட் வந்து மாட்டியது. இந்த மாதிரியான மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை வேண்டாமென்று சி.ஏ.விற்கு வந்தால் இங்கேயும் அது வந்து ஜிங்கு ஜிங்கென்று ஆடிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது. விதி வலியதல்லவா. என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.

சரி விஷயத்திற்கு வருகிறேன். இறங்கிவிட்ட பிறகு யோசிக்க முடியாதே. எப்படியாவது முடித்துவிடவேண்டும். இப்படிப்பட்ட ஆபரேஷன் ரிசர்ச் புத்தகத்தை ஸ்கேன் செய்து கொண்டிருந்தால் அதில் ஒரு பகுதி பெர்ட் & சி.பி.எம். என்னடா இது ஆஸ்திரேலிய நகரும், அரசியல் கட்சி பெயரும் போல் இருக்கிறதே என்று பார்த்தால் அது ப்ரோக்ராம் எவால்யூவேஷன் அண்ட் ரிவ்யூ டெக்னிக் மற்றும் க்ரிடிகல் பாத் மெத்தட் என்று சொன்னார்கள்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். பெயரைத் தெரிந்து கொள்வதற்கே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியாகிவிட்டது. மற்றதை எங்கே வாங்குவது? இதை வேறு, சாய்சில் விடமுடியாத படி கேட்கிறார்கள். பயங்கர குழப்பமாக இருந்தது. அப்போதுதான் ஆபத்பாந்தவனாக சீனியர் ஒருவன் கை கொடுத்தான். அதுதான் இந்தத் தலைப்பு. அவன் சொன்னதை உங்களுக்குக் கீழே வசனமாகக் கொடுத்துள்ளேன்.

நான்: டேய் (இவன் கொஞ்சம் ஜூனியர் சீனியர். எனவே 'டேய்'), இத எப்படிறா படிச்சு பாஸ் பண்ண? இது இருக்குன்னு மொதல்லயே தெரிஞ்சிருந்துதுன்னா இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்.

சீனியர்: இதெல்லாம் ஜுஜுபிடா.

நான்: மொதல்லயே பாஸ் பண்ணிட்ட. நீ ஏன் சொல்லமாட்ட?

சீனியர்: அதான் எங்கிட்ட வந்துட்ட இல்ல. நான் கிளியர் பண்றேன். இப்ப நீ எங்க இருக்க.

நான்: இங்க தான் இருக்கேன்.

சீனியர்: டேய். ஒழுங்கா பதில் சொன்னா சரியா கத்து தருவேன். இந்த மாதிரி டார்ச்சர் பண்ணா, டரியலாயிடுவ.

நான்: இல்லண்ணா. இனிமே சரியா பதில் சொல்றேன். வேப்பேரில இருக்கேன்.

சீனியர்: அது. இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணு. நான் எங்க இருக்கேன்.

நான்: (இது கூட தெரியாம இருக்க. உங்கிட்ட வந்து கேக்க வேண்டியிருக்கு). நீயும் வேப்பேரிலதான் இருக்க.

சீனியர்: குட். இப்ப சி.ஏ. கிளாஸ் எங்க நடக்குது.

நான்: (அது எங்க நடக்குது. ஓடுதுல்ல. நம்மளால அதுங்கூட ஓட முடியாமத்தானே உன்னத் தேடி வந்தது) ராயப்பேட்டைல.

சீனியர்: இங்கேருந்து ராயப்பேட்டைக்கு எப்படி போலாம்.

நான்: (ஒழுங்கா போய்ச் சேரணும்னா, டிரஸ் போட்டுட்டு தான் போகணும். இல்லைன்னா கீழ்பாக்கத்துக்கு டைவர்ட் பண்ணிருவாங்களே) நெறய வழி இருக்கு.

சீனியர்: ஒரு ரெண்டு வழி சொல்லு.

நான்: எக்மோர் போயி உட்லன்ட்ஸ்,பைலட் வழியா ராயப்பேட்டை போலாம். சேத்பட் போயி நுங்கம்பாக்கம் ஹை ரோட் ராதாகிருஷ்ணன் ரோடு வழியாவும் போலாம்.

சீனியர்: இதுவரைக்கும் கரைக்டா சொல்லியிருக்கே. இப்ப ஈசியான கேள்விகேக்கறேன். இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.

நான்: (எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்) லேடீஸ் காலேஜா, அப்படின்னா?

சீனியர்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

நான்: சரிண்ணே.. சாரிண்ணே.. எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.

சீனியர்: அது. இன்னோருவாட்டி இப்படி பண்ணே, அங்கயே கட் பண்ணிருவேன். அப்புறம் பாதி சக்கர வியூகம் கேட்ட அபிமன்யு கதையாயிடும்.

நான்: (சக்கரவியூகம்.. பேர் நல்லாயிருக்கே. தேவைப்படும் போது யூஸ் பண்ணிக்கலாம்). டேய். சீனியராச்சேன்னு மதிச்சு வந்து கேட்டா ஓவரா போற. நீ சொல்ல மாட்டேன்னா சொல்லு, நமக்கு சேச்சிங்க நெறைய இருக்காங்க. நான் அங்க போய்க்கிறேன்.

சீனியர்: கண்ணா இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமாடா. சரி சரி சொல்லித்தர்றேன். ட்ராக்க மாத்தாத. இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.

நான்: (இதென்ன விஷ்ணு சகஸ்ர நாமமா?) எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.

சீனியர்: எந்த ரூட்ல எந்த எந்த காலேஜ் இருக்கு.

நான்: (எங்க வர்றான் இவன்? ஒரு வேள நம்மள வார்றானோ). எக்மோர் ரூட்ல எத்திராஜ், காயிதே மில்லத். சேத்பட் ரூட்ல டபள்யூ.சி.சி, டி.ஜி.வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ் இருக்கு.

சீனியர்: குட். நல்லா வருவேடா. இப்ப நான் சேத்பட் ரூட்ல போறேன். நீ எக்மோர் ரூட்ல போற.

நான்: ஒத்துக்க மாட்டேன். நீ எக்மோர் ரூட்ல போ. (எனக்கு காயிதே மில்லத். உனக்கு ஸ்டெல்லா மேரீஸா)

சீனியர்: ஒரு பேச்சுக்கு சொன்னேன்டா. சரி அப்படியே வச்சுக்குவோம். இப்ப ரெண்டு பேரும் ஸ்டெல்லா மேரீஸ் கிட்ட மீட் பண்ணனும்னா எவ்வளவு நேரம் ஆகும்.

நான்: நீ சீக்கிரம் போயிடுவ. எனக்கு லேட்டாகும்.

சீனியர்: ஏன் லேட்டாகும்.

நான்: ஜெமினி சிக்னல் க்ராஸ் பண்ணனுமே.

சீனியர்: நான் சீக்கிரம் போயிட்டாலும் நீ வர்ற வரைக்கும் என்னால ஒண்ணும் பண்ண முடியாது இல்லயா. அதனால நீ வர்ற ரூட்தான் க்ரிடிகல். இதுதான் க்ரிடிகல் பாத். இதையே கொஞ்சம் டெவலப் பண்ணா பெர்ட். அவ்வளவுதான். புரிஞ்சுதா.

நான்: (அதுசரி. நீ தனியா என்னைக்கு பண்ணியிருக்க. கும்பல்ல கோவிந்தாதானே) சரிடா. இது கத்து குடுத்ததுக்காக இனிமே உன்ன டா போட்டு பேச மாட்டேன். சரியா.

சீனியர்: டேய் அப்படில்லாம் பண்ணி என்னைய பிரிச்சிராதடா.

=====

இப்படித்தான் நான் பெர்ட் சி.பி.எம் கற்றுக்கொண்டேன். இதுதான் எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் உடனான என் அனுபவம்.ப்ராக்கெட்டுக்குள் இருப்பதெல்லாம் நான் மனதில் நினைத்துக் கொண்டவை என்பதை குறிப்பிடவேண்டிய அவசியமில்லையல்லவா?

=====

இந்தக் கதை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.

நன்றி.

53 comments:

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருந்திச்சுங்க..

இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் வேண்டாம் அப்படின்னுட்டுத்தான் நானு பி.காமோட நிப்பாட்டிடேங்க..

இராகவன் நைஜிரியா said...

மீதி கும்மி பின்னாடி..

இப்போதைக்கு ஜகா... (எல்லாம் உங்க ஆளுங்க பண்ற லொள்ளுதான்.. அதாங்க இயர் எண்ட் ஆடிட்டிங் )

நான் ஆதவன் said...

//இந்தக் கதை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.//

தலைவா அதுக்கு முதல்ல தமிலிஷ்ல சப்மிட் பண்ணனும். அத பண்ணுங்க முதல்ல...

நான் ஆதவன் said...

ம்ம்ம் எப்படியெல்லாம் பாஸ் பண்ணி வந்திருக்கீங்க....எங்க காலத்திலயெல்லாம் இப்படி இல்ல. நாங்களெல்லாம் ஒழுங்கா படிச்சு பாஸானோம். இப்படி ஊர்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரு கூட தெரிஞ்சு வச்சிருக்கல தெரியுமா.

இராகவன் நைஜிரியா said...

\\ நான் ஆதவன் கூறியது...

//இந்தக் கதை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.//

தலைவா அதுக்கு முதல்ல தமிலிஷ்ல சப்மிட் பண்ணனும். அத பண்ணுங்க முதல்ல...\\

கணக்கு வழக்கு எழுதாமேயே ஆடிட் பண்ண சொன்னா எப்படி உங்களால பண்ணமுடியாதோ, அது மாதிரி, தமிழிஷில் நீங்க சேர்க்காம எங்களால ஓட்டு போடவும் முடியாதுங்க..

தமிழ் மணத்தில் ஒட்டு போட்டுட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// (ஆஹா.. விஷயத்தைக் கூறாமலேயே முதல் பாராவை முடிப்பதில்தான் எத்தனை திருப்தி!!!)//

எங்களுக்கு இது ஒண்ணும் புதுசு இல்லீங்க..

எல்லா பதிவுலேயும் செய்யறதுதானே!!

இராகவன் நைஜிரியா said...

// அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன். //

ஆமாம் சி.ஏ. படிக்காம பாஸ் பண்ணமுடியாது.

இராகவன் நைஜிரியா said...

// சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத சப்ஜக்ட் ஒன்று உண்டு. //

சி.ஏ. விலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பாங்களா?

’டொன்’ லீ said...

haahha...

நல்ல அனுபவம் தான் :-)

உருப்புடாதது_அணிமா said...

ஆஆ...

உருப்புடாதது_அணிமா said...

ஹா ஹா ஹா

உருப்புடாதது_அணிமா said...

இஃகி இஃகி இஃகி

உருப்புடாதது_அணிமா said...

//சரி விஷயத்திற்கு வருகிறேன்///

எத்தனை முறை???

உருப்புடாதது_அணிமா said...

//சரி விஷயத்திற்கு வருகிறேன். அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன்.

//சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத///

///சரி விஷயத்திற்கு வருகிறேன். இறங்கிவிட்ட பிறகு யோசிக்க முடியாதே. ////
///சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத //////


வுட்டா வரிக்கு வரி விஷயத்திற்க்கு வருவீங்களா??

உருப்புடாதது_அணிமா said...

உள்ளே யயாருமே இல்லியா?

உருப்புடாதது_அணிமா said...

தனியா இருக்க எனக்கு பயமா இருக்கு......

உருப்புடாதது_அணிமா said...

நான் இப்போதிக்கு ஜூட் வுட்டுக்குறேன்..

உருப்புடாதது_அணிமா said...

சூப்ப்ரா கும்மி அடிக்க வேண்டிய பதிவு...

சீக்கிரம் யாராச்சும் வாங்க..

உருப்புடாதது_அணிமா said...

//மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.///

தம்ஸ் அப்ல ஓட்டு போட சொல்ரீங்களே, நீங்க என்ன கோகோ கோலா ட்டீலரா??

உருப்புடாதது_அணிமா said...

//(ஆஹா.. விஷயத்தைக் கூறாமலேயே முதல் பாராவை முடிப்பதில்தான் எத்தனை திருப்தி!!!)///


என்னா ஒரு வில்லத்தனம்??

உருப்புடாதது_அணிமா said...

//"எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும் நான்"///

அவ்வ்வ்வ்வ்வ்....

அந்த நாள் நியாபகம் வந்ததே..

உருப்புடாதது_அணிமா said...

//வழக்கம் போல சுற்றிக் கொண்டிராமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.//

வாங்க...

வாங்க.....

உருப்புடாதது_அணிமா said...

இது தானா விஷயம் ????

உருப்புடாதது_அணிமா said...

இதுதானா விஷயம் :-((((((

உருப்புடாதது_அணிமா said...

//இதுதானா விஷயம் என்று கேள்விக் குறியோ, அழுகை ஸ்மைலியோ போடக்கூடாது என்ற விஷயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்///

நாங்க எல்லாம் என்னிக்கு சொல் பேச்சு கேட்டிருக்கோம்...

உருப்புடாதது_அணிமா said...

இதுதானா விஷயம் !!!!!!

உருப்புடாதது_அணிமா said...

இதுதானா விஷயம் :-(((((((((

உருப்புடாதது_அணிமா said...

///இதைப் படித்தபின் இதுதானா விஷயம் என்று ஆச்சரியக் குறியும், ஸ்மைலியும் போடலாமே ஒழிய, இதுதானா விஷயம் என்று கேள்விக் குறியோ, அழுகை ஸ்மைலியோ போடக்கூடாது என்ற விஷயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.///

நல்ல தெளிவு...
நல்ல சிந்தனை...
( படுத்துக்கிடே யோசிப்பாய்ங்களோ??)

உருப்புடாதது_அணிமா said...

//அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன்.///

இப்போ மட்டும் என்னவாம் என்று யாரோ கேட்டது எனக்கு கேக்கின்றது...

உருப்புடாதது_அணிமா said...

//இந்த மாதிரியான மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை வேண்டாமென்று சி.ஏ.விற்கு வந்தால் இங்கேயும் அது வந்து ஜிங்கு ஜிங்கென்று ஆடிக்கொண்டிருக்கிறது///

எங்க ???

( தொரத்தி தொரத்தி அடிச்சிருக்கு)

உருப்புடாதது_அணிமா said...

///விதி வலியதல்லவா. என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.
////

அதுவுமா??
:-)))

உருப்புடாதது_அணிமா said...

///ஆகவே டம்மி ஆட்களெல்லாம் தேர்வில் பம்மித்தான் ஆகவேண்டும்.//

ஆஹா என்னா ஒரு டைமிங்கு, என்னா ஒரு ரைமிங்கு ..

உருப்புடாதது_அணிமா said...

அப்பாலிக்கா வாரேன்,...

இராகவன் நைஜிரியா said...

ஹாய் இளைய பல்லவா...

இதுக்குத்தான் அணிமா வேண்டும் என்பது..

அடிச்சார் பாருங்க 24 பின்னூட்டம் ஒரே ஸ்டோர்க்ல...

யார் தருவார் இந்த அரியாசனம் பாட்டு மாதிரி..

யார் தருவார் இந்த பின்னூட்டம்...

SUREஷ் said...

வாழ்க நீங்கள் வாழ்க...


தமிழ்மணத்தில் நமக்கு நாமே ஒரு ஓட்டுப் போட்டுக் கொள்ள முடியும். அதனால் நீங்களும் ஒரு ஓட்டுப் போட்டுக் கொள்ளுங்கள்.

தமிழீஷில் நீங்கள் சப்மிட் செய்தால்தான் நாங்கள் ஓட்டே போட முடியும்.

இளைய பல்லவன் said...

நன்றி இராகவன் அவர்களே !!!

இளைய பல்லவன் said...

நன்றி நான் ஆதவன் அவர்களே!!

இளைய பல்லவன் said...

நன்றி டொன் லீ அவர்களே !!

இளைய பல்லவன் said...

நன்றி உருப்புடாதது அணிமா அவர்களே!!

இளைய பல்லவன் said...

நன்றி சுரேஷ் அவர்களே !!

இளைய பல்லவன் said...

இவ்வளவு கும்மிகளை அடித்து ஆடிய உருப்புடாதது அணிமா அவர்களுக்கும், இராகவன் நைஜீரியா அவர்களுக்கும் மீண்டும் நன்றிகள் பலப்பல!!!

உருப்புடாதது_அணிமா said...

நாங்க கும்மி அடிச்சது மார்ச் 13, அதுக்கு மறுமொழி நீங்க போடுவது மார்ச் 18,..

இது நல்லதுக்கு இல்ல.. சொல்லிப்புட்டேன்..

இளைய பல்லவன் said...

அண்ணே, அவ்வளவு ஆணிண்ணே!!

மூச்சு கூட விட முடியலன்னா பாத்துக்கிருங்க.

இளைய பல்லவன் said...

இன்னொரு முக்கியமான விஷயம்.

இதை சிறுகதை என்று வகைப் படுத்தியிருப்பதை கவனிக்கவும். நன்றி. நன்றி. நன்றி.

உருப்புடாதது_அணிமா said...

//இளைய பல்லவன் கூறியது...

அண்ணே, அவ்வளவு ஆணிண்ணே!!

மூச்சு கூட விட முடியலன்னா பாத்துக்கிருங்க.///

அப்படியா??
( ஹய்யா ஜாலி ஜாலி)

உருப்புடாதது_அணிமா said...

///இளைய பல்லவன் கூறியது...

இன்னொரு முக்கியமான விஷயம்.

இதை சிறுகதை என்று வகைப் படுத்தியிருப்பதை கவனிக்கவும். நன்றி. நன்றி. நன்றி.

////


இது எப்போ??
இது கொஞ்சம் ஓவரா தெரியில??

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...


அப்படியா??
( ஹய்யா ஜாலி ஜாலி)
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உருப்புடாதது_அணிமா said...

47

உருப்புடாதது_அணிமா said...

49

உருப்புடாதது_அணிமா said...

50

உருப்புடாதது_அணிமா said...

போட்டாச்சு அம்பது..
அப்பாலிக்கா வரேண்..

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
///
இதை சிறுகதை என்று வகைப் படுத்தியிருப்பதை கவனிக்கவும். நன்றி. நன்றி. நன்றி.
////
இது எப்போ??
இது கொஞ்சம் ஓவரா தெரியில??
//


முதல்ல 'தொடர் கதை'ன்னு வகைப் படுத்தலாம்னு பாத்தேன் !!!!

இளைய பல்லவன் said...

54