Monday, March 23, 2009

கண்டேன் கண்மணிகளை !!!

ஒரு வழியாக கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த ஃபாலோயர்களை பதிவில் மீண்டும் கொண்டு வந்தாகிவிட்டது.


இதற்கு வழி செய்த வேத்தியன் அவர்களின் இந்தப் பதிவின் மூலம் பலரும் பயனடைந்திருப்பது பாராட்டுக்குறியது என்றாலும் அதை சரியாகப் பாராட்டுவது என்பது மிகக் கடினமான செயல்.

ஆனாலும் என் பணி சிறக்க அவர் பதிவில் நான் இட்ட பின்னூட்டக் கவிதையை இங்கே மறுபிரசுரம் செய்கிறேன்.

* * * *

ரொம்ப நன்றின்னு சொல்றது

ரொம்ப குறைவாப் படுது. ஆனாலும்

ரொம்ப நன்றின்னுதான் சொல்லவேண்டியிருக்குது!!

ரொம்ப நன்றி!!!



* * * *

கவிதையைப் பாராட்டியும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போனீங்கன்னா,

இது மாதிரி சமூகப் பணி அதிகமா செய்யிறதுக்கு வாய்ப்பா அமையும்.

6 comments:

வேத்தியன் said...

அண்ணாத்தே என்னாதிது???
நன்றியெல்லாம் சொல்லி நம்மள அன்னியமாக்கிக்கிட்டு...
அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல...
இது அல்லவா கவிதை...
சூப்பர்ங்க...
ஏதோ உங்களால முடிஞ்சது...
:-)
நம்ம கடை பக்கம் அடிக்கடி வந்துட்டு போங்க...

CA Venkatesh Krishnan said...

அட நீங்க வேற,

ஒரு பதிவு போடறதுக்கு லீட் கொடுத்திருக்கீங்கல்ல

அதான்...

☀நான் ஆதவன்☀ said...

//இளைய பல்லவன் said...

அட நீங்க வேற,

ஒரு பதிவு போடறதுக்கு லீட் கொடுத்திருக்கீங்கல்ல

அதான்...//

இப்படி சொல்லி சொல்லி "சக்கர வியூகத்தை" கணக்குலயே சேர்க்காம வர்ரீங்க...பாப்போம் இந்த வாரம் வருதான்னு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பரிசு கொடுப்பதாக அறிவித்திருந்தீர்கள்

சும்மா ஞாபகப் படுத்தலாம் என்றுதான்.

ஹி....ஹி....ஹி....

இந்தப் பதிவையே பரிசாக வைத்துக் கொள்ளலாமா... தல

CA Venkatesh Krishnan said...

ஆதவன்,

மார்ச் மாசம் வந்துட்டாலே எங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் திருவிழாதான்!

சக்கர வியூகம் மனசுல இருக்கு.

இந்த வாரம் கண்டிப்பா வரும். எப்பாடு பட்டாவது வரவச்சிடுவோம்.

CA Venkatesh Krishnan said...

///
SUREஷ் said...
பரிசு கொடுப்பதாக அறிவித்திருந்தீர்கள்
சும்மா ஞாபகப் படுத்தலாம் என்றுதான்.
ஹி....ஹி....ஹி....
இந்தப் பதிவையே பரிசாக வைத்துக் கொள்ளலாமா... தல
///

பரிசா?

நான் தேடிப் பாத்ததுல நன்றின்னுதான் இருக்கு!!!

இருந்தாலும் நீங்க சொன்னா மாதிரி இதையே பரிசாக வச்சிக்கலாம்.