Sunday, June 28, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . . 1

ஸ்கிரீன் ப்ளே என்பதன் நேரடித்தமிழாக்கம்தான் திரைக்கதை என்றாலும், காட்சியாக்கம் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். ஒரு திரைப்படம் வெற்றிபெற இன்னின்ன காரணிகள்தான் வேண்டும் என்ற ஃபார்முலா, அதாவது சக்சஸ் ஃபார்முலா எதுவும் இல்லை.

அப்படி இருந்திருந்தால் தோல்விப்படங்களே இருக்காது. ஆனால் எது இருக்கிறதோ இல்லையோ திரைக்கதை சரியாக இல்லாவிட்டால் அந்தப் படம் நிச்சயம் ஓடாது. பாடல்கள் தனியே ஹிட்டாகலாம், காமெடி ஹிட்டாகலாம் ஆனால் வலுவான திரைக்கதை மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்கு அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்ற இயக்குனர்கள் திரைக்கதையில் மிக்க கவனம் கொண்டிருந்தனர். ஆனாலும், பிற்காலத்தில் அவர்கள் படம் வெற்றி பெறவில்லை. இதற்கான காரணத்தைப் பின்னர் ஆராய்வோம்.

பதிவின் உள்ளே செல்லும் முன் ஒன்றை தெளிவு படுத்திவிட விரும்புகிறேன். திரைப்படம் பார்ப்பதைத் தவிர திரைத்துறைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனினும் ஒரு ரசிகனின் பார்வையில் அல்லது ஒரு வருங்கால இயக்குனரின் (?!) பார்வையில் திரைக்கதை எழுதுவதைப் பற்றிய கருத்துதான் இது.


திரைக்கதைக்கு அடித்தளம்

திரைக்கதைக்கு அடித்தளம் கதைதான். 99.99% கதைகள் நல்லவர்கள் முதலில் கஷ்டப்படுவதும் தீயவர்கள் அதிக சக்தியுடன் இருப்பதும், இறுதியில் நன்மையே வெல்வதும் என்ற பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். ஆக அடிப்படையில் நன்மையே வெல்லும் என்ற 'மெசேஜ்' அனைத்துக் கதைகளிலும் இருக்கிறது. ஆனால் சில வெற்றி பெறுகின்றன. மற்றவை தோல்வியடைகின்றன.

ஆக நல்ல கதை, சுமாரான கதை என்றெல்லாம் இல்லை. வெற்றி பெற்றால் நல்ல கதை. தோல்வியடைந்தால் கதை நன்றாக இருந்தாலும் 'ப்ச்'தான். எதுவாயினும் ஒரு கதை வேண்டும்.

மற்ற காரணிகள்.


1. மக்கள் ரசனை


சினிமா துவங்கப்பட்டது முதல் 1950கள் பெரும்பாலான படங்கள் புராணப் படங்கள். 2000க்குப் பிறகு புராணப் படங்கள் அரிதாகி விட்டது. புராணப் படங்களே இல்லை எனலாம்.

60களில் பிழியப்பிழிய அழ வைக்கும் சென்டிமென்ட் படங்கள் சக்கைப் போடு போட்டன. இப்போது வரும் படங்களில் உள்ள ஒன்றிரண்டு சென்டிமென்ட் சீன்களில் கூட விசில் பறப்பதைப் பார்த்திருக்கலாம்.

70களில் புரட்சிகரமான கருத்துக்களுடன் படங்கள் வெளிவந்தன. ருத்ரய்யா, பாலச்சந்தர் போன்றோர் சமூகக்கட்டமைப்பை உடைத்தெறியும் முயற்சியில் பெரிதும் வெற்றி பெற்றனர். இப்போது அத்தகைய படங்கள் (உதாரணம்: தனம்) வரவேற்கப் படுவதில்லை.

80களில் காதலை மையமாக வைத்துப் படங்கள் பெருவெற்றி பெற்றன. இன்னிசை படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. இப்போதும் காதல் படங்கள் வந்தாலும் அந்த அளவுக்கு வெற்றி பெறுவது குறைவுதான்.

90களில் கிராமத்தை மையமாகக் கொண்ட படங்கள் பெரிதும் வெற்றி பெற்றன. இப்போது ராஜ்கிரண், , ராமராஜன் போன்றோரின் நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.

புதிய நூற்றாண்டில் இப்படி எந்த ஒரு லாஜிக்கும் இல்லை.

ஏன்?? மக்கள் ரசனை மாறுகிறதா?

இல்லை என்பதே என் பதில். இதற்கான காரணம் பின்னர்...


2. தொழில் நுட்பம்.

கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், கலர், சினிமாஸ்கோப், 70 எம்.எம்., டி.டி.எஸ்., டிஜிடல் சினிமா என்று தொழில் நுட்பத்தில் பரிணாமித்திருக்கிறது சினிமா. எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், கிராஃபிக்ஸ் என்று மற்ற துறைகளிலும் பெருமளவில் மாற்றம் கண்டிருக்கிறது.

இந்தத் தொழில் நுட்பங்கள் ஒரு பண்டத்தை எவ்வளவு நன்றாக ப்ரெசன்ட் செய்ய வேண்டிய அளவுக்குப் பயன் படுத்த வேண்டும். இவை நன்றாக இருப்பது திரைக்கதைக்கு மேலும் வலுவூட்டும்.


3. நடிகர்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப் பிறகு ரஜினி கமல் படங்கள் அபவ் ஆவரேஜ் வெற்றியைத் தந்தன. அதே போன்று விஜய் அஜித் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இவர்கள் படம் கூட வெற்றி பெறாமல் போய்விடுகிறது. புது முகங்கள் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று விடுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த கதா நாயகிகள் அருகிக் கொண்டே வருகின்றனர். மொத்தமும் இறக்குமதிதான். மற்ற கலைஞர்களின் பங்களிப்பு ஓரளவுக்கு இருக்கும்.

ஆக கலைஞர்கள் தேர்வு முக்கியமானதல்ல.


4. இசை

இசையைப் பொறுத்தவரை மிக அடிப்படையான வாதம் இதுதான். வெற்றி பெற்ற படங்களின் இசை தானாக வெற்றி பெற்று விடும். இசை மிகப் பிரமாதமாக இருந்தாலும் படம் தோல்விடையலாம். ஆகவே இசை என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனாலும் படம் வெற்றி பெற கூடுதல் உந்து சக்தி அளிக்கும்.

மற்றவற்றை அவ்வப்போது பார்ப்போம்.


இப்போது ரசனையைப் பற்றிய எனது கருத்து:

மக்கள் ரசனை மாறிவிட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவியலாது. Human beings are emotionally charged animals. காலங்கள் மாறினாலும், நமது அடிப்படை என்றுமே மாறாது. பிறகு ஏன் புராண, சென்டிமென்ட், கிராமப் படங்கள் இப்போது வெற்றி பெறுவதில்லை? ஏனென்றால் நம்மிடையே இவை ஏற்கனவே இருக்கின்றன.

சென்டிமென்டிற்கு ஒரு பாசமலர் ஏற்கனவே இருக்கும் போது மீண்டும் எதற்கு ஒரு சென்டிமென்ட் படத்தைப் பார்க்க வேண்டும்? சம்பூர்ண ராமாயணம், திருவிளையாடல், போன்ற படங்கள் இருக்க ஏன் மீண்டும் நான் ஒரு புது புராண படத்தைப் பார்க்க வேண்டும்? கரகாட்டக்காரனும், சேரன் பாண்டியனும் இருக்க நான் ஏன் மீண்டும் ஒரு கிராமத்துக் கதையைப் பார்க்க வேண்டும்?

இவை அனைத்தும் நம்மிடையே ஆர்கைவ் ஆக இருக்கின்றன. ஆகவே இப்போது தேவைப் படுவது வேறு. இதே காரணம் தான் இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர் ஆகியோர் பிறகு என்ன ஆனார்கள்?. பாக்யராஜ், பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோரின் நிலைமை என்ன? இவர்களின் படங்கள் பிற்காலத்தில் ஏன் தோல்வியடைந்தன? ஆனால் இவர்களது பழைய படங்களை மக்கள் இன்னும் ரசித்துப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

எம்.எஸ்.விஸ்வனாதனுக்கு என்னவாயிற்று? இளையராஜாவால் இப்போது மக்களை மயக்கமுடியவில்லையே? ஆனால் இவர்களது பழையபாடல்களை விரும்பாதார் யார்?

இப்போது புரிகிறதா?. . . தொடர்வோமா??

எக்சர்சைஸ்:
ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.


பின்குறிப்பு:- தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டைப் போடுங்கள். அது இந்தப் பதிவுத்தொடரைப் பலரிடமும் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

9 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுக்கள் போட்டாச்சு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் சவாலுக்கான முதல் இடுகை

தேவன் மாயம் said...

நல்ல முயற்சி!!

CA Venkatesh Krishnan said...

உடனடியாக செயலில் இறங்கியதற்கு மிக்க நன்றி சுரேஷ்.

உங்கள் பதிவில் காட்சிகளை விவரித்திருக்கிறீர்கள். என் கருத்தைப் பின்னர் தெரிவிக்கலாம் அல்லவா?

(ரொம்ப தூய தமிழ்ல இருக்கோ!!!)

CA Venkatesh Krishnan said...

நன்றி தேவன்மயம் அவர்களே!!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல முயற்ச்சி பாராட்டுகள்

CA Venkatesh Krishnan said...

//
ஆ.ஞானசேகரன் said...
நல்ல முயற்ச்சி பாராட்டுகள்
//

Many Thanks

☀நான் ஆதவன்☀ said...

//எக்சர்சைஸ்:
ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது. //

இரஜினி படம் கலெஷன் இருக்கு... பார்த்துட்டு ரெண்டு நாள்ல நானும் திரைக்கதை எழுதுறேன்...

கிருஷ்ணமூர்த்தி, said...

பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் உறவு முறைகளின் கட்டமைப்பை உடைத்தவர் என எழுதி உள்ளீர்கள். 'ரித்விக் கடாக்' எனும் அற்புதமான வங்காள இயக்குனரின் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களே, தமிழில் பாலச்சந்தரின் படங்களாக உருவெடுத்தது. ருத்ரையாவுடன் பாலச்சந்தரை ஒப்பிடுவது, ருத்ரையாவை அசிங்கப்படுத்துவது ஆகும். பாலச்சந்தரின் பெருமைகள் அனைத்தும் அவரது உதவியாளர் அனந்துவையே சாரும். கமல் அடிக்கடி அனந்துவின் பெயரைக் குறிப்பிடுவதைக் காணலாம். அனந்துவின் மரணதிட்க்குப் பிறகு பாலச்சந்தர் ஒரு வெற்றிப் படங்களைக் கூட கொடுக்கவில்லை. பாலச்சந்தர் இயக்குனரும் இல்லை. சிகரமும் இல்லை.