Wednesday, June 17, 2009

ஏன் ? (இது கேள்வி பதில் தொடர்தான்!!)

நான் ஒரு பட்டயக் கணக்கர். அதாவது ஆடிட்டர். திருவிளையாடல் தருமி போன்று எனக்கு கேக்கதான் தெரியும்.

ஆனாலும் தொடர் பதிவு, அதுவும் சுய புராணம் பாடுவது என்பது அல்வா சாப்பிடுவது போல் என்பதால் இதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு மாதத்திற்கும் மேல் பதிவு ஏற்ற முடியாத நிலை. ஆனால் அவ்வப்போது இந்தப் பக்கம் வந்து யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வது, தவிர்க்க முடியாத சூழலில்(!) பின்னூட்டமிடுவது என்று ஓடியது ஒரு மாதம். இந்தச் சூழலில் தொடர் பதிவு.

ஆஹா யாராவது நம்மை அழைக்க மாட்டார்களா என்று நினைத்துக் கொண்டிருந்தால்.. மருத்துவர் ஐயா அதாவது சுரேஷ் (பழனியிலிருந்து) இழுத்து விட்டார்.


சுரேஷ் (பழனியிலிருந்து) அவர்களே, ஒரு அருமையான லீட் கொடுத்து கூப்பிட்டு இருக்கீங்களே, உங்களுக்கு என் பொன்னான மணியான முத்தான இன்னும் பிறவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எந்தப் பெயர்? ஏன் இந்த கேள்வி? இது ஒரு கேள்வியா ரெண்டு கேள்விகளா? அப்படின்னுல்லாம் கேக்கத் தோணுது. ஆனாலும் அதையெல்லாம் கேக்காம நீங்க கேட்டதுக்கு பதில் சொல்றேன். நோட் பண்ணிக்குங்க.

நமக்கு ஒரு புனைப் பெயர் தேவையா இருந்திச்சா. நமக்கு வரலாற்று நாவல்னா ரொம்பப் புடிக்குமா. அதுலயும் சாண்டில்யன்னா உசுரா. அதுலயும், யவனராணியும், கடல்புறாவும் என்னை ரொம்பவும் கவர்ந்துச்சா. அதுல வர்ற ஈரோக்கள் ரொம்ப சூப்பரான கேரக்டர்களா இருப்பாங்களா.

நமக்கு சொந்த ஊரு காஞ்சிபுரமாச்சா. ஒரு கெத்து கெடக்கணும்னு தோணுச்சா. அதனால பிளாக் டைட்டில் காஞ்சித்தலைவன்னு வச்சனா. அதுக்கு சமமா யோசிச்சனா. இளையபல்லவன் மாட்டிச்சா. இப்படித்தான் வந்தது என் பட்டப்பெயர்.

நாம செலக்ட் பண்ணது நமக்கே பிடிக்காமப் போகுமா. ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லா அமஞ்சுதுன்னு தோணுது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அவ்வ்வ்வ்னு கமென்ட் போட்டா அழுதா மாதிரின்னா இன்னிக்கி கூட அப்படியாச்சு.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எந்த கையெழுத்து. சிக்னேசர்னு சொல்லுவாங்களே அதுவா அல்லது பொதுவா எழுதறதா? அப்படி எழுதறதுன்னா எந்த மொழியில? தமிழா, இங்கிலிபீசா, இந்தியா, கன்னடமா, மலையாளமா, துளுவா, கொண்கணியா, ஹனலுலுவா, மடகாஸ்கரா, ஐஸ்லாண்டா, அலஸ்காவான்னு கேக்கலாமுன்னுபாத்தா பதில் சொல்லத்தான் இந்தப் பதிவுங்கறாங்க.

சரி எதுனாலும் என் கையெழுத்து ரொம்ப நல்லாவே இருக்கும்.


4.பிடித்த மதிய உணவு என்ன?

பசி ருசியறியாது. ஆனாலும் சாய்ஸ்னு பாத்தா நுனி வாழையிலையில் பரிமாறப்படும் ஃபுல் மீல்ஸ்தான் ஃபர்ஸ்ட் பிரிஃபெரென்ஸ்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என்னாங்க இது. வேற யாரோட வச்சிக்காம என்னோடயேவா நட்பை வச்சிக்கிறது. நல்லா கேக்கறாங்கப்பா. நாங்களே (பட்டயக் கணக்கர்களே) தேவலாம் போல இருக்கே!.
உடனே நட்ப வச்சிக்குவேன். கொஞ்சம் காலம் போன பிறகுதான் தொடர்வதா வேணாமான்னு தெரியும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் உவ்வே. அருவியில் ஊலலல்லா..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரைத்தான்!

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விசயம் பிடிக்காது. பிடிக்காத விசயம் பிடிச்சதுன்னு கடிக்கலாம்னு பாத்தா முடிய மாட்டேங்குதே.

பிடித்தது விடா முயற்சி. பிடிக்காதது அதன் காரணம் பற்றி எழும் கூடுதல் சுமை.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என்னங்க இது என் சரிபாதியும் என்னில்தானேங்க இருக்குது. அப்படின்னா எந்த சரிபாதி? வலதா இடதா, மேலேயா, கீழேயான்னு வெவரமா கேளுங்கன்னு கேக்கலாம். சரிபாதிங்கறது வாழ்க்கைத் துணைன்ற பொருள் கொண்டு பதில் சொல்றேன்.

பிடித்தது: வேறுபட்ட ரசனைகள்

பிடிக்காதது: எல்லாவற்றையும் தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்து என்னை சோம்பேறியாக்குவது.


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

புதசெவி.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை வேட்டி. சென்னை வெயிலுக்கு இதுவே சாஸ்தி...

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மானிடரைப் பார்த்துக் கொண்டு, கீபோர்ட் ஒலியையும் மின் விசிறியின் ஒலியையும் மற்றும் பரவியுள்ள நிசப்தத்தின் ஒலியையும் கேட்டுக்கொண்டு.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மல்டிகலர்னு சொன்னா கோச்சுப்பீங்களான்னு தெரியல. ஆனா பிடித்த வர்ணம் நீலம். ஆகவே நீல வர்ண பேனான்னு வச்சுக்கலாம்.

14.பிடித்த மணம்?

குழந்தையின் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எல்லாரையும் எல்லாரும் அழைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நான் அழைக்கலாம் என்று நினைப்பது வாத்தியார் அவர்களை. முன்னமே சினிமா தொடருக்கு அழைத்திருக்கிறேன். அப்போது ரொம்ப பிசின்னு சொன்னார். இப்போ என்னன்னு தெரியல பாப்பம்.

அவரைப் பத்தி தெரிஞ்சிக்கலாமேன்னுதான்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

எதைத் தள்ள எதை அள்ள அப்படின்னு ஒரு சொலவடை உண்டு. நண்பர் சுரேஷ் (பழனியிலிருந்த்) அவர்களுடைய கனவுகளே வலைப்பூவில் உள்ள அனைத்து மலர்களுமே வாசம் வீசும் செண்டு. அதன் மகரந்தத்தில் மயங்கிய நான் ஒரு வண்டு. அவரது எழுத்தில் எல்லா சுவைகளும் உண்டு. எப்பொழுதும் அவர் எழுத்தில் களிப்பேன் கண்டு (கவித கவித).
இதன்னியில் அவர் மருத்துவம் சார்ந்து எழுதிய கேன்சர் பற்றிய தகவல் மிக மிக உபயோகமானதாக இருந்தது.


17. பிடித்த விளையாட்டு?

அ அ விளையாட்டு.

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நல்ல படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்

21.பிடித்த பருவ காலம் எது?

யாருக்குன்னு நெறய பேர் கேட்டுட்டாங்க. ரெண்டு மூணு படிச்சிருக்கேன். நல்லா இருந்தா மாதிரிதான் இருந்தது.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

போன வாரம் வரை கம்பெனி செக்ரடரி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன். இப்போது சிவகாமியின் சபதம் (ந்த் டைம்) படித்துக் கொண்டிருக்கிறேன்.

இது தவிர டாக்டர் மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தாரின் தமிழ் நாட்டு வரலாறு (சோழப் பெருவேந்தர் காலம்) ஆகியவை.

ஆங்கிலப் புத்தகங்கள் மிக அரிதாகத்தான் படிப்பது வழக்கம். நீண்ட காலத்திற்கு முன் ஜான் கிரிஷாம் எழுதிய தி ஃபர்ம் மற்றும் தி ரெயின் மேக்கர் மறக்க முடியாதவை.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதும் இல்லை.


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தவை குழந்தைகளின் மழலை மற்றும் சிரிப்பு. பறவைகளின் சத்தம். இளையராஜாவின் இன்னிசைப் பாடல்கள். நிசப்தம்.

பிடிக்காதது எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

வேலை விஷயமாக லூதியானா சென்ற போது வாகா பார்டர் சென்றிருக்கிறேன். இதுவரை இந்திய எல்லையைத் தாண்டியதில்லை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஆஹா, இதைப் பத்தி ஒரு தொடரே போடலாமே. ஆனாலும் அவையடக்கம் பற்றி 'ஏகசந்தாக்ரஹி' என்று கல்கி அவர்கள் ஒரு வார்த்தையாடல் செய்வார். அதைப் போன்று எந்த ஒன்றைப் பற்றியும் உடனடியாக புரிந்து கொள்வது எனது தனித் திறமை என்று கருதுகிறேன். பிறகு.... (இப்போதைக்கு இது போதும்)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏமாற்றுதல்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எல்லா மலைவாசஸ்தலங்களும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இருந்தா இப்படி இருக்கணும்னு எல்லாரும் சொல்றா மாதிரி இருக்கணும்னு ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பதிவு போடுவதுதான்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரி எப்படிங்க. வருமான வரி, வணிக வரி, சுங்கவரி, சேவை வரி, சாலை வரி, கல்விவரி, உற்பத்தி வரி, நுழைவு வரின்னு வரிவரியா வருதுங்களே.

ஆக்சுவலா இதை சொல்லலாம்னு நினைக்கிறேன்.

"முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை வெல்லாது" ஆகவே, முயன்று வாழ்க்கையை 'வாழ்வோம்'.


அப்பாடா ஒரு வழியா எழுதி முடித்து விட்டேனுங்க. இனி உங்க பொன்னான கருத்துக்களை கண்டிப்பா சொல்லிட்டு போங்க.

16 comments:

இராகவன் நைஜிரியா said...

பட்டயக் கணக்கருக்கு முதல்ல ஓட்டு போட்டாச்சு.. தமிழிழ், தமிழ் மணம் இரண்டிலும்.

இராகவன் நைஜிரியா said...

// அதாவது ஆடிட்டர். திருவிளையாடல் தருமி போன்று எனக்கு கேக்கதான் தெரியும். //

ஆடிட்டர் என்றாலே கேள்வி கேட்பதற்குத்தானோ என்ற சந்தேகம் ரொம்ப நாளாக இருந்தது. நிவர்த்தி செய்த உங்களுக்கு நன்றிகள் பல.

இராகவன் நைஜிரியா said...

// ஆஹா யாராவது நம்மை அழைக்க மாட்டார்களா என்று நினைத்துக் கொண்டிருந்தால்..//

அழகா மாத்தி சொல்றீங்க...

ஏங்கிக் கொண்டு இருந்தால் என்று எழுதணும்...

இராகவன் நைஜிரியா said...

// 2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அவ்வ்வ்வ்னு கமென்ட் போட்டா அழுதா மாதிரின்னா இன்னிக்கி கூட அப்படியாச்சு. //

அவ்....அவ்....அவ்...

இராகவன் நைஜிரியா said...

// 7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரைத்தான்!//

ஆஹா... என்னே ஒரு பதில். டிபிக்கல் ஆடிட்டர் பதில்... !! :)

இராகவன் நைஜிரியா said...

// வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரி எப்படிங்க. வருமான வரி, வணிக வரி, சுங்கவரி, சேவை வரி, சாலை வரி, கல்விவரி, உற்பத்தி வரி, நுழைவு வரின்னு வரிவரியா வருதுங்களே.
//

ஒன் மோர் டைம் ஆடிட்டர் என்பதை நிருபித்து விட்டீங்க...

நட்புடன் ஜமால் said...

// 7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரைத்தான்!//

ஆஹா... என்னே ஒரு பதில். டிபிக்கல் ஆடிட்டர் பதில்... !! :)\\

நானும் கூவிக்கிறேன்

நட்புடன் ஜமால் said...

"முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை வெல்லாது" ஆகவே, முயன்று வாழ்க்கையை 'வாழ்வோம்'.\\

நல்ல கருத்து ...

☀நான் ஆதவன்☀ said...

//7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரைத்தான்!//

நாங்கெல்லாம் பக்கத்துவூட்டுகாரைதான் பார்ப்போம்

☀நான் ஆதவன்☀ said...

//10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

புதசெவி//

புதசெவி

☀நான் ஆதவன்☀ said...

//பிடிக்காதது: எல்லாவற்றையும் தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்து என்னை சோம்பேறியாக்குவது.
//

அவ்வ்வ்வ்வ்வ்.... "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"

☀நான் ஆதவன்☀ said...

//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எல்லா மலைவாசஸ்தலங்களும்.//

பரங்கிமலை கூடவா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//யவனராணி//

கூட பூவழகி கூட உண்டு..,

அதுதான் நிஜமான காரணம்னா சூப்பர்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பதிவு போடுவதுதான்.//

சேம் ப்ளட்

Rajasubramanian S said...

உங்கள் வலைக்கு முதல் முறையாக வந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக் உள்ளது.பதில்கள் எல்லாம் கச்சிதம்.கொஞ்சம் லொள்ளும் இருக்கிறது.கோயமுத்தூரா?
அன்புடன்
ராஜசுப்ரமண்யன் S

CA Venkatesh Krishnan said...

ராஜசுப்ரமணியன்..

லொள்ளுக்கு மொத்தக் குத்தகை கோயம்புத்தூர் காரங்களுக்குத் தானா?

காஞ்சிபுரத்தானுங்களுக்கு இல்லையா?!

நான் காஞ்சிபுரத்தான். முதல் கேள்வியிலேயே சொல்லியிருக்கிறேன்.!