Tuesday, November 18, 2008

2605/06 பல்லவன் சூப்பர் பாஸஞ்சர்

பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் என்பது பெயர். திருச்சிக் காரர்களுக்கு பல்லவன் என்றாலே ஒரு கெத்து. ஆரம்பிக்கும் போது நாலே நிறுத்தங்கள். படிப்படியாக உயர்ந்து இப்போது வெற்றிகரமாக 10 நிறுத்தங்களைக் கொண்டு மெதுவாக / லேட்டாகச் செல்கிறது பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ்


தற்போது இந்தவண்டி நின்று செல்லும் நிறுத்தங்கள்.

1.தாம்பரம்
2. செங்கல்பட்டு
3. மேல்மருவத்தூர்
4.விழுப்புரம்
5.விருத்தாசலம்
6.அரியலூர்
7.லால்குடி
8.ஸ்ரீரங்கம்
9.கோல்டன் ராக் (சென்னையிலிருந்து வரும்போது), மாம்பலம் (திருச்சியிலிருந்து செல்லும்ப் போது)
10. திருச்சி சந்திப்பு.

தின்டிவனம் கூடிய விரைவில் சேர்ந்துவிடக்கூடும். பெண்ணாடம், கல்லக்குடி பழங்காநத்தம் (டால்மியாபுரம்) ஆகியவையும் காலப் போக்கில் சேரலாம்.இவை இல்லாமல் ஒருவழிப் பாதை என்பதால் க்ராசிங்கிற்காக பல இடங்களிலும் நிறுத்தப்படுகிறது.

அட்டவணைப்படி ஐந்தரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றுவிடும் என்று போடப்படுகிறது. பெரும்பாலும் 6 முதல் ஆறரை மணி நேரம் ஆகி விடுகிறது.

எனவே, இரயில்வே துறைக்கு இப்படி ஒரு லெட்டர் அனுப்பலாமா என்று யோசிக்கிறேன்.

அன்புள்ள இரயில்வேத்துறைக்கு,

இப்பவும் பல்லவன் எக்ஸ்ப்ரசின் நிறுத்தங்கள் அதிகரித்துள்ளது தாங்கள் அறிந்ததே:(. இது பயணியர் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவாக இருக்கலாம். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் இதை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் என்று கூறிக்கொண்டு கூடுதலாக சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் வசூலிப்பது சரியில்லை.

தயவு செய்து பல்லவன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரசை சாதா எக்ஸ்ப்ரசாக மாற்றி, சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் (ரூ 10 ஐ) எங்களுக்குத் திருப்பிக் கொடுத்தால், உங்கள் பெயரைச் சொல்லி ஒரு பொண்டா டி (BONDA & TEA) ஐ.ஆர்.சி.டி.சி. கேன்டீனிலேயே சாப்பிடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் கொடுத்து
பல்லவன் பாசஞ்சரில் பயணிப்போர் சங்கம்:(((

இதில் ஏதாவது சேர்க்க வேண்டுமா, நீக்க வேண்டுமா? சொன்னா பண்ணிடலாம்.;-)

10 comments:

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1962-ல் திருவனந்தபுரம் ஃபாஸ்ட் பாசஞ்சர் என்ற பெயரில் வண்டி இருந்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

☀நான் ஆதவன்☀ said...

இந்த மாதிரி எல்லாத்துக்கும் கடிதம் எழுதுனா ஒரு நாளைக்கு ஆயிரமாவது எழுதனும்..

CA Venkatesh Krishnan said...

//dondu(#11168674346665545885) சொன்னது…
சமீபத்தில் 1962-ல் திருவனந்தபுரம் ஃபாஸ்ட் பாசஞ்சர் என்ற பெயரில் வண்டி இருந்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//
தகவலுக்கு நன்றி டோண்டு சார்.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் சொன்னது…
இந்த மாதிரி எல்லாத்துக்கும் கடிதம் எழுதுனா ஒரு நாளைக்கு ஆயிரமாவது எழுதனும்..
//
:0))))),

:0(((((

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆகியவையும் காலப் போக்கில் சேரலாம்//


இந்தியாவின் எதிர்காலம் கிராமங்களில் இருப்பதால் அனைத்து கிராமங்களிலும் வண்டிகள் நின்று செல்ல வேண்டும்

CA Venkatesh Krishnan said...

SUREஷ் சொன்னது…
ஆகியவையும் காலப் போக்கில் சேரலாம்//


இந்தியாவின் எதிர்காலம் கிராமங்களில் இருப்பதால் அனைத்து கிராமங்களிலும் வண்டிகள் நின்று செல்ல வேண்டும்
//

ஆஹா! ரொம்ப சூப்பர். அப்போ, சென்னை டூ திருச்சி இன் 15 அவர்ஸ்.

நசரேயன் said...

கருத்து சொன்னவங்களுக்கு கமிசன் ஏதும் இருக்க அந்த 10 ரூபாயிலே

CA Venkatesh Krishnan said...

//
நசரேயன் சொன்னது…
கருத்து சொன்னவங்களுக்கு கமிசன் ஏதும் இருக்க அந்த 10 ரூபாயிலே
//

அடி ங்கறதுக்கு ஆளக்காணோம். அதுக்குள்ள எத்தனை புள்ளைங்கன்னு கேள்வியான்னு ஒரு சொலவடை உண்டு.

ஏங்க இன்னும் லெட்டரே போகல அதுக்குள்ள கமிஷனப் பத்தி பேசறீங்களே. இது நியாயமா?

சரி ட்ரெயின்ல வந்தீங்கன்னா போண்டால ஒரு பகுதி உங்களுக்கு. ஓக்கேவா ;-)

Ŝ₤Ω..™ said...

கண்டிப்பா எழுதனுங்க.. அதே மாதிரி இருக்கை அமைப்பையும் மாற்ற சொல்ல வேண்டும்.. சதாப்தி எக்ஸ்பிரஸில் இருப்பது போல இருக்கைகள் ஒரே பக்கம் பார்ப்பது போல் இருந்தால் வசதியாக இருக்கும்.. இப்போது இருப்பதில் கால் நீட்ட முடிவதில்லை.. :-(

CA Venkatesh Krishnan said...

//
Ŝ₤Ω..™ சொன்னது…
கண்டிப்பா எழுதனுங்க.. அதே மாதிரி இருக்கை அமைப்பையும் மாற்ற சொல்ல வேண்டும்..
//

வருகைக்கு நன்றி சென்.

இது மாதிரி ஒரு கோச் பல்லவன்லயும் இருக்கு. எதிர் எதிரா ஒக்காந்துக்கறத விட ரொம்ப கஷ்டம். ஏ.சி. கோச்ல 70 சீட்தான். ஆனா பல்லவன்ல 108 சீட்.:(

இத விட கொடுமை சைட் மிடில் பர்த்:(

இங்க்லான்ட் டீம்ல சைடுபாட்ட்ம்னு ஒரு ப்ளேயர் இருக்கார். அவர் பெயரப் பாத்துதான் ரயில்வேக்காரங்களுக்கு இந்த சைட் மிடில் பர்த் தோணியிருக்கணும்னு நான் நெனைக்கிறேன்.