Sunday, November 9, 2008

எதை எழுதுவது ?

என்னாடா இது, 25 பதிவுகள் எழுதுவதற்குள்ளாகவே எனக்கு இந்தக் கேள்வி தோன்றி விட்டதே.

நானும் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாய் இந்தப் பதிவுலகம் பக்கம் வந்து போய்க் கொண்டிருக்கிறேன்.

சிலருடைய பதிவுகளில் இது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
சிலர் என்ன எழுதுவது என்று பதிவு போட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் கூட பதிவு போட முடியுமா என்று நினைத்ததுண்டு.

ஆனால் என்னுடைய கேள்வி வேறு விதமானது.

எனக்கு வந்திருக்கும் ப்ராப்ளம் என்னவென்றால், என்னிடம் பதிவெழுதுவதற்கு நிறைய ஸ்கூப் களும், கான்செப்ட் களும் இருக்கின்றன.

தமிழ் சினிமாக்களைப் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

சமீப காலமாக பல்வேறு உலகத் திரைப் படங்களைப் பார்த்து வருகிறேன். அவற்றைப் பற்றி பதிவெழுதலாம்.

நம் துறை சார்ந்த பதிவுகளாக நடப்புப் பொருளாதார நிலையும் இந்தியப் பொருளாதாரமும் என்று நிறைய எழுதலாம்.

தினசரி நாம் சந்திக்கும் பல்வேறு நபர்களைப் பற்றி சிறுகதைகள் எழுதலாம்.

அரசியலரங்கின் நிகழ்வுகளைப் பற்றிய நமது கண்ணோட்டத்தைப் பதிவு செய்யலாம்.

ஏதாவது எதிர் பதிவு போடலாம்.

இது போல நிறைய யோசித்து வைத்திருக்கிறேன்.

இவற்றில் எதை முதலில் எழுதுவது என்பது தான் என்னுடைய குழப்பம்.

சே.. எதையாவது எழுதணும் என்று எண்ணிக்கொண்டே ஒரு சில நாட்கள் எதுவும் எழுத முடியாமல் போய் விடுகிறது.

சக்கர வியூகம் மட்டும், ஒவ்வொரு புதன் கிழமையும் வெளி வர வேண்டுமென்பதால் அது மட்டும் முடிந்து விடுகிறது.

எழுத எழுதத்தான் எழுத்தும் எண்ணமும் மெருகேறும் என்று எங்கேயோ படித்திருக்கிறேன். நல்ல எழுத்தாளனாக வர தொடர்ந்து எழுத வேண்டும் என்பது பால பாடம்.

தினமும் ஒரு பதிவாவது எழுதிவிட வேண்டும் என்ற உறுதியோடு இந்தப் பதிவை முடிவு செய்கிறேன்.

14 comments:

Vinitha said...

There are enough topics to write!

Write your days observations!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நிறைய எழுத அன்பான வாழ்த்துக்கள்

:)

☀நான் ஆதவன்☀ said...

என்ன எழுதுறதுன்னு தெரியாம ஒரு பதிவ போட்டு சீனியர் அந்தஸ்துக்கு போய்ட்டீங்க பல்லவன்..

சரக்கு கைவசம் நிறைய இருக்கு போல. தினமும் பதிவ போட்டு கலக்குங்க.

துளசி கோபால் said...

சீட்டுக் குலுக்கிப்போட்டு எது வருதோ
அதை எழுதுங்க:-)

Sathis Kumar said...

வணக்கம்,

எவ்வளவு எழுதுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, எதைப்பற்றி எழுதுகிறீர்கள், அதனுள் அடங்கியுள்ள கருத்துகள் பிறருக்கு எவ்வளவு நன்மையை அளிக்கிறது என்பதை பொறுத்தே நல்ல எழுத்தாளர்களை வாசகர்கள் அடையாளம் காண்கிறார்கள்.

குறைவாகவே எழுதினாலும் சீரான நடையில் பல நல்ல கருத்துகளைத் தாங்கி வரும் கட்டுரைகளையே உங்களிடமிருந்து ஒரு வாசகனாக நான் எதிர்ப்பாக்கிறேன்.

வாழ்த்துகள் அன்பரே..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எழுதரத எழுதாம இருக்காதீங்க;; எழுதாம் இருக்கறத எழுதாதிங்க...

CA Venkatesh Krishnan said...

//
Vinitha கூறியது...
There are enough topics to write!

Write your days observations!
//

நன்றி வினிதா

முதல் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து வாங்க.

நிச்சயமாக எழுதுகிறேன்.

CA Venkatesh Krishnan said...

//
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) கூறியது...
நிறைய எழுத அன்பான வாழ்த்துக்கள்

:)
//
நன்றி சுடர்மணி :)

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
என்ன எழுதுறதுன்னு தெரியாம ஒரு பதிவ போட்டு சீனியர் அந்தஸ்துக்கு போய்ட்டீங்க பல்லவன்..
//

அய்யய்யோ, இது வேற,

நான் என்ன எழுதுறதுன்னு தெரியாம இந்த பதிவ போடல. எத எழுதறதுன்னு தெரியாமத்தான் இந்த பதிவப் போட்டேன்.

ஆனாலும் என்ன சீனியர்னு சொல்லும் போது ஒரு இதுவாத்தான் இருக்கு ;-) ;-)

//
சரக்கு கைவசம் நிறைய இருக்கு போல. தினமும் பதிவ போட்டு கலக்குங்க.
//
ஆமாங்க அந்த முடிவோடுதான் இப்ப இருக்கேன். பாக்கலாம்.

CA Venkatesh Krishnan said...

//
துளசி கோபால் கூறியது...
சீட்டுக் குலுக்கிப்போட்டு எது வருதோ
அதை எழுதுங்க:-)
//
வாங்க துளசி மேடம்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அது மாதிரியும் செஞ்சிரலாம். தொடர்ந்து வாங்க.

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் கூறியது...
//

வருகைக்கு மிக்க நன்றி சதீசு குமார் அவர்களே,

மிகத் தெளிவாக உள்ளன உங்கள் கருத்துக்கள்.

எழுத எழுதத்தான் எழுத்து சீர் படும் என்ற எண்ணத்தினாலும், எழுதுவதற்கு நிறைய கருப்பொருள்கள் இருப்பதனாலும், இவை அனைத்திற்கும் மேல் எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறக்க வேண்டும் என்பதனாலுமே இந்த முடிவு.

தரமாகவும் கருத்துள்ளதாகவும் தரவேண்டுமென்பதே என் எண்ணமும்.

CA Venkatesh Krishnan said...

// SUREஷ் கூறியது...
எழுதரத எழுதாம இருக்காதீங்க;; எழுதாம் இருக்கறத எழுதாதிங்க...
//

வாங்க சுரேஷ்,

எப்படிங்க இதெல்லாம்...? ;-)

தானா வரணும் போல. :(

முயற்சிக்கிறேன்.

பரணி said...

write...write...write more,
keep on writing

CA Venkatesh Krishnan said...

//
Barani கூறியது...
write...write...write more,
keep on writing
//

Thanks Barani.