அப்போதுதான் சி.ஏ.வில் சேர்ந்திருந்தேன். கோச்சிங்க் கிளாசில் காஸ்டிங்க் வகுப்பில் ஆசிரியர் எங்கள் எல்லோரையும் பார்த்துக் கேட்டார். மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்பு எது? What is the most significant invention of Man Kind?
நாம்தான் பொது அறிவுக் களஞ்சியம் ஆயிற்றே. உடனே, சக்கரம் என்று பதில் சொன்னேன். ஒரு லுக் விட்ட அவர், 'நாம் படிப்பது இஞ்சினியரிங் இல்லை, சி.ஏ. எனவே சம்பந்தா சம்பந்தமில்லாமல் யோசிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு விடையையும் கூறினார்.
'மனித இனத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு 'பணம்'. Money.'
நான் மனதிற்குள் 'இரண்டும் வட்டவடிவமானதுதானே. இரண்டிற்கும் ஒற்றுமை உண்டல்லவா? என்று நினைத்துக் கொண்டேன்.
கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்ச்சி பசுமரத்தாணி போல் பதிந்திருப்பதற்குக் காரணம் பணம் தான்.
பணம் வட்ட வடிவில் இருப்பதால் தான் 'ஓரிடந்தனிலே, நிலையில்லாதுலகினிலே, உருண்டோடிடும் பணம் காசென்னும் பொருத்தமான பொருளே' என்று ஒரு பழைய சினிமா பாடல் உண்டு.
முத்துவில் கூட தலைவர் ' கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு முதலாளி, கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு முதலாளி' என்று பாடியிருப்பார்.
அந்தப் பணத்தைப் பற்றியும் அதன் பல்வேறு அவதாரங்களான வெள்ளை, கருப்பு, ஹவாலா, வெளி நாடு முதலியவற்றையும், அதன் குணாதிசயங்களைப் பற்றியும் விரிவாக அலசும் முயற்சிதான் இந்தத் தொடர்.
பணம் எப்போது தோன்றியது?
பண்டமாற்று முறையில் இருந்த முறைகேடுகளைக் களையும் பொருட்டு தோன்றியதுதான் இந்தப் பணம். பணத்தைப் பற்றி சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆயினும் பணப் புழக்கம் மக்களிடத்தில் அதிகரித்தது பிரிட்டிஷார் வந்த பிறகுதான்.
பணத்தைப் பற்றி விரிவாக அலசுவோம் இனி வரும் நாட்களில். அதற்கு முன் கருப்புப் பணம் பற்றிய ஒரு 'டிட் பிட்'
அமெரிக்காவில் வீட்டுக் கடன் வாங்கியோர் திருப்பிச் செலுத்தாமல் வீட்டை விட்டு காலி செய்து விட்டு காரில் வாழ்கின்றனர் என்பது செய்தி. இது போல் இந்தியாவில் ஏன் நடைபெறுவதில்லை?
உதாரணமாக அமெரிக்காவில் ஒரு ஃப்ளாட்டின் விலை 2 லட்சம் டாலர் என்று வைத்துக் கொள்வோம். அங்கு எல்லாமே வெள்ளைதான். அவருக்கு வங்கி 85 முதல் 90 % வரை வீட்டுக் கடன் அளிக்கிறது. மீதமுள்ள 10 முதல் 15% விலைக்கும் பெர்சனல் லோன் முதலியவற்றை வாங்கி ஒருவர் மொத்தமாகக் கடனிலேயே வீட்டை வாங்கி விடுகிறார். கடன் தவணை கட்டமுடியாமல் போனால் வீட்டையே காலி செய்து விட்டு வெளியேறி விடுகிறார். இதுவரை கட்டிய தவணையை வாடகையாக நினைத்துக் கொள்கிறார். சொந்தப் பணம் அதில் ஒன்றுமில்லையே. இருந்தால் வீடு. இல்லாவிட்டால் ரோடு. இதுதான் அமெரிக்காவில் நடப்பது.
இப்போது இந்தியாவிற்கு வருவோம். ஒரு ஃப்ளாட்டின் விலை ரூ.50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் பத்திரத்தில் பதியும் விலை ரூ35 லட்சம் வரை இருக்கும். மீதி நெ.2ஆகத் தான் தரவேண்டுமென்பார்கள். வங்கிகள் இவற்றில் அதிக பட்சமாக 85% வரை கடன் அளிக்கின்றன. இதை 30 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். பெர்சனல் லோன் வகையில் மேலும் 3-4 லட்சம் வாங்கினாலும், ரூ.16 லட்சம் வரை தன் சொந்தக் காசை முதலீடு செய்கிறார் ஒருவர். ஆகவே ஒரு முறை கட்ட முடியாவிட்டாலும் எப்படியாவது சமாளித்துக் கட்டிவிட வேண்டுமென்ற எண்ணம்தான் இங்கு இருக்கும். ஏனென்றால் சொந்தப் பணம் 33% சதம் வரை அதில் இருக்கிறதே. மேலும் மானப் பிரச்சனை வேறு. இதனால் தான் இந்தியாவில் வீட்டுக்கடன் 'டிஃபால்ட்' மிகவும் குறைவு. இதற்கு இந்தக் கருப்புப் பணமும் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.
நீங்க என்ன சொல்றீங்க?
மீண்டும் சந்திப்போம்.
13 comments:
நல்ல பதிவு. ஆனால் எதிர்மறை கருத்து ங்கோ.
கருப்பு பணம் பத்தி எழுத போறிங்களா, படிக்க ஆவலா இருக்கேன்.
குப்பன்_யாஹூ
அமெரிக்காவில் வீட்டுக் கடன் வாங்கியோர் திருப்பிச் செலுத்தாமல் வீட்டை விட்டு காலி செய்து விட்டு காரில் வாழ்கின்றனர் என்பது செய்தி. இது போல் இந்தியாவில் ஏன் நடைபெறுவதில்லை?
இந்தியாவில் அத்தனை கார் இல்லையே
அங்க குடும்பத்துக்கு ரெண்டு பேர்தான்.இங்க அப்படியா......
இங்க எல்லாருக்கும் ரஜினி மாதிரி வீடு கட்டுவதுதானே லட்சியம்
ஒருவர் மொத்தமாகக் கடனிலேயே வீட்டை வாங்கி விடுகிறார்///
அப்படியா............
இப்போது இந்தியாவிற்கு வருவோம். ஒரு ஃப்ளாட்டின் விலை ரூ.50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ////
அப்படியே வைத்துக் கொள்ளலாம்
'நாம் படிப்பது இஞ்சினியரிங் இல்லை, சி.ஏ. எனவே சம்பந்தா சம்பந்தமில்லாமல் யோசிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு விடையையும் ////////
சரியான சிந்தனை
//நான் மனதிற்குள் 'இரண்டும் வட்டவடிவமானதுதானே. இரண்டிற்கும் ஒற்றுமை உண்டல்லவா? என்று நினைத்துக் கொண்டேன்.//
நோட்டு கூட பணம் தானுங்கன்னா..அது சதுரமா இருக்குமுங்க
நல்ல பதிவு..ஆனா உங்ககிட்ட இருந்து இன்னும் விளக்கமா எதிர்பார்க்கிறேன்..
சுபா,
ந்டப்பு விஷயம் . ந்ன்றாக இருக்கிற்து.
இது மாதிரி share market ப்ற்றியும் அலசவும்
//
குப்பன்_யாஹூ கூறியது...
நல்ல பதிவு. ஆனால் எதிர்மறை கருத்து ங்கோ.
கருப்பு பணம் பத்தி எழுத போறிங்களா, படிக்க ஆவலா இருக்கேன்.
குப்பன்_யாஹூ
//
வாங்க குப்பன்_யாஹூ
கருப்புப் பணத்தைப் பற்றியும் சொல்லப் படும்.
வருகைக்கு நன்றி
//
SUREஷ் கூறியது...
//
வாங்க சுரேஷ்,
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
இங்கே வீடு என்பது முதலீடு என்கிற அளவுகோலைத் தாண்டியதாக இருக்கிறது.
இது ஒரு கோணம்தான்.
//
நான் ஆதவன் கூறியது...
நோட்டு கூட பணம் தானுங்கன்னா..அது சதுரமா இருக்குமுங்க
//
கண்டுபிடிக்கும்போது சதுரமாக இருந்ததா?
(அப்பாடி. எப்படியோ சமாளிச்சாச்சி)
//
நான் ஆதவன் கூறியது...
நல்ல பதிவு..ஆனா உங்ககிட்ட இருந்து இன்னும் விளக்கமா எதிர்பார்க்கிறேன்..
//
நிச்சயமாக ஆதவன்.
இது ஒரு ஸ்டார்ட் அப் தான். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை உண்டு.
// பெயரில்லா கூறியது...
சுபா,
ந்டப்பு விஷயம் . ந்ன்றாக இருக்கிற்து.
இது மாதிரி share market ப்ற்றியும் அலசவும்
//
நன்றி சுபா. நிச்சயம் எழுதுகிறேன்.
Post a Comment