திரு. சிவராஜ் பாட்டீல் இராஜினாமா செய்ததை அடுத்து திரு.ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் சற்று முன்னர்தான் கிடைத்தது. திரு. மன்மோகன் சிங் நிதித் துறையை கவனித்துக் கொள்வார் என்பது கூடுதல் செய்தி.
இந்தத் தகவல் கிடைத்த போது எனக்குத் தோன்றியது தான் தலைப்பாக வைக்கப் பட்டுள்ளது.
திரு. சிவராஜ் பாட்டீல் உள்துறையில் செய்த குளறுபடிகள் அல்லது செய்யாத நல்ல விஷயங்கள் எவ்வளவோ அதை விட மிக மிக அதிகம் திரு.ப.சிதம்பரம் அவர்கள் நிதித் துறையில் செய்த குளறுபடிகள்.
அவரது கடந்த நான்காண்டு நிதித் துறை நிர்வாகத்தில் நாட்டின் நிதித்துறை மிக மோசமாக மாறியது என்பதை மறுப்பதற்கில்லை. சந்தையோ, பணவீக்கமோ, அன்னியச் செலாவணி கையிருப்போ, எண்ணை விலையோ, இன்னும் எதுவெல்லாமோ மிக அதிக அளவில் ஏற்ற இறக்கங்கள் கண்ட போதெல்லாம் வெறும் கமெண்டுகளுடன் தன் வேலை முடிந்ததென்று நினைத்துக் கொண்டு கருத்து கந்தசாமியாகத் திகழ்ந்தவர்.
ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையும் மேலுக்குத் தேன் தடவினாற்போல் இருந்தாலும் உண்மையில் ஒரு பொருளாதார மேதையின் திறத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத வகையில் அமைந்திருந்ததை அனைவரும் அறிவர்.
இந்த நிலையில் திரு. சிவராஜ் பாட்டீலுக்கு மாற்றாக அவர் உள்துறையில் நியமிக்கப் பட்டிருப்பது, நிதித் துறையை ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பலரது நிம்மதிப் பெருமூச்சிற்கு வழி வகுத்திருக்கும்.
இனி இந்திய அரசின் உள்துறை மட்டுமல்ல, நிதித் துறையும் சீரடையும் என்று நம்புவோம். இந்த முடிவிற்கு சந்தையின் ரியாக்ஷன் என்ன என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
திரு. ப. சிதம்பரம் அவர்களின் புதிய பொறுப்பிற்கு நல் வாழ்த்துக்கள்.
8 comments:
Today market has rebound
thanks
//திரு. ப. சிதம்பரம் அவர்களின் புதிய பொறுப்பிற்கு நல் வாழ்த்துக்கள். //
என்னவோ நமக்கு (இந்தியாவுக்கு) பட்டது போதாதுன்னு நினைக்கிறேன்
ஆதவன்,
குருப் பெயர்ச்சி நேரத்தில் நல்லதே நினைப்போம். நன்மையே நடக்கும்.:-)))
//திரு. சிவராஜ் பாட்டீல் உள்துறையில் செய்த குளறுபடிகள் அல்லது செய்யாத நல்ல விஷயங்கள் எவ்வளவோ அதை விட மிக மிக அதிகம் திரு.ப.சிதம்பரம் அவர்கள் நிதித் துறையில் செய்த குளறுபடிகள்.//you are correct...piratchanai adhikam aahum bodu makkalai pazhakka paduthikka solvar.... is it nt?
நானும் இதை நினைத்தேன். ஆனாலும் நிதித்துறை ப.சி மட்டுமே பொறுப்பல்ல. உலகப்பொருளாதாரம் அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருப்பது தான் காரணம்.இது அமெரிக்காவிற்கும் நல்லது அல்ல, மற்றையோர்க்கும் நல்லதல்ல.
//yavana rani சொன்னது… //
Almost similar. He tried to satisfy all sections of people, which is not possible.
//குடுகுடுப்பை சொன்னது… //
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி குடுகுடுப்பை.
ப.சி. போன்றவர்கள்அத்தகைய சூழலிலிருந்து நம்மை இன்சுலேட் செய்வார்கள் என்றுதானே எதிர்பார்க்கிறோம்.
Post a Comment