பணவீக்கம் என்பது விலையேற்றத்தில் ஏற்படும் மாற்றம் என்று முன்னர் பார்த்தோம். இதன் இன்னொரு பரிமாணம் பணத்தின் மதிப்பு வீழ்வது.
உங்களிடம் ரூ.100 உள்ளது. அதை வைத்து ரூ.100 மதிப்புள்ள பொருட்கள் வாங்கலாம். அடுத்த வருடம் 8% பணவீக்கம் காரணமாக அதே பொருட்களை வாங்க உங்களுக்கு ரூ.108 தேவைப்படும். அல்லது உங்களிடம் இருக்கும் ரூ.100க்கு குறைந்த பொருட்களே வாங்க முடியும். ஆக ஒரு வருடத்தில் உங்கள் ரூ.100-ன் மதிப்பு ரூ.92 ஆகக் குறைந்து விட்டது. இதற்குக் காரணம் பணவீக்கம் தான்.
ஒரு வேளை நீங்க்ள் இந்த ரூ.100-ஐ வங்கியில் 10%க்கு வைப்புத்தொகையாக வைத்திருந்தால் உங்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு ரூ.110 கிடைக்கும். இதில் பணவீக்கத்தின் தாக்கம் ரூ.8 போக மீதி ரூ.2 தான் உண்மையான வருமானம். இதை Inflation Adjusted Rate of Return என்பார்கள்.
உண்மையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும் தொகைக்கு இப்போது வட்டி 8 .5% வழங்கப் படுகிறது. இன்றைய பணவீக்க நிலையில் நிகர ஐ.ஏ.ஆர்.ஆர். பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். முன்பு 12% வட்டி வழங்கப் பட்டு வந்த போது பணவீக்கத்தின் தாக்கம் அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது.
அடுத்த முறை நீங்கள் ஏதாவது முதலீடோ சேமிப்போ செய்யும் போது இந்த ஐ.ஏ.ஆர்.ஆர்.-ஐ நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
===
சேமிப்பும் முதலீடும்
நிறைய பேருக்கு சேமிப்புக்கும் முதலீட்டிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு. அடுத்து வரும் மூன்று அடிப்படைத் தன்மைகளின் அளவைப் பொறுத்து அது சேமிப்பா, முதலீடா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
1. Liquidity - உடனடியாக அதே அளவு பணமாக மாற்றக் கூடிய தன்மை.
2. Safety - முதலுக்கே மோசமில்லாத நிலை.
3. Return - திரும்ப வரும் லாபம்.
பணமாக நீங்கள் உங்கள் வீட்டிலோ, லாக்கரிலோ வைத்திருந்தால் அதிக பட்ச லிக்விடிடி, சேஃப்டியும் ரிடர்னும் கிடையாது.
வங்கி வைப்புத் தொகையாக வைத்திருந்தால் - தேவையான போது மாற்றிக் கொள்ளலாம். நல்ல வங்கியாக இருந்தால் சேஃப்டி உண்டு. ரிடர்ன் குறைவுதான்.
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், லிக்விடிடியும் சேஃப்டியும் மிகக் குறைவு. ரிடர்ன் அதிகம். ரிஸ்கும் அதிகம். இதைத்தான் Risk Return Trade Off (Higher the Risk Higher the Return) என்று கூறுவார்கள்.
நிலமாக முதலீடு செய்தால் லிக்விடிடி மிகக் குறைவு. சேஃப்டி அதிகம். ரிடர்ன் உடனடியாகக் கிடைக்காது.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மட்டுமல்லாமல் அரசாங்கங்களும் விரும்பி முதலீடு செய்யும் பொருள் 'தங்கம்'. தங்கத்தைப் போல ஒன்று முதலீட்டிற்கும் சேமிக்கவும் ஏற்ற பொருள் இதுவரை ஏற்படவே இல்லை என்று கூறலாம்.
அடிப்படையாக நமக்கு லிக்விட் கேஷ் தேவைப்படும். அதற்கு, தங்கமாகவோ, வங்கி வைப்பு நிதியாகவோ ஒரு பகுதி கண்டிப்பாக இருக்க வேண்டும். இது நம்முடைய 6 மாத பணத்தேவையின் அளவில் இருப்பது நல்லது.
அடுத்து முதலீடு. நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம் அல்லது நிலமாக வாங்கிப் போடலாம். ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் நுழைய உங்களுக்கு அடிப்படைத் தேவை, முதலீடு முடிவுகளை நீங்களாக எடுப்பது. ஒரு கேள்வி பதில் ஃபோரத்தில் ஒரு ருசிகரமான கேள்வி பதில் கீழே.
கேள்வி: நான் ரிலையன்ஸ் இன்ஃபோவை ரூ.860க்கு வாங்கினேன். இப்போது ரூ.450ல் இருக்கிறது. இப்போது விற்கலாமா?
பதில்: நீங்கள் ரூ.860ல் ஏன் வாங்கினீர்கள்? இப்போது ரூ.450க்கு ஏன் விற்கப் பார்க்கிறீர்கள். இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை தெரியாவிட்டால் நீங்கள் ஷேர் மார்க்கெட் பக்கம் வழி தவறி வந்து விட்டீர்கள்.
இன்னும் தொடர்வோம்.
9 comments:
ஏதாவது முதலீடோ சேமிப்போ செய்யும் போது இந்த ஐ.ஏ.ஆர்.ஆர்.-ஐ நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்./////
நல்ல அறிவுரை
இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை தெரியாவிட்டால் நீங்கள் ஷேர் மார்க்கெட் பக்கம் வழி தவறி வந்து விட்டீர்கள்.
....................
புரிஞ்ச மாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு...
ஹி..ஹி..நாலைஞ்சு தடவைப் படிச்சு புரிஞ்சுகிறேன்
ஆமா சூடா என்ன இருக்கு? என்ன ஆச்சு? எடுத்திட்டீங்க போல...
வாங்க சுரேஷ்,
//....................//
இதுக்கு என்ன அர்த்தம். புதுசா இருக்கே
//நான் ஆதவன் சொன்னது… //
வாங்க ஆதவன். நாலைஞ்சு அதாவது இருவது தடவையா? ;-))
//ஆமா சூடா என்ன இருக்கு? என்ன ஆச்சு? எடுத்திட்டீங்க போல//
ஆஹா, சூப்பரா ஃபாலோ பண்றீங்களே. ஆமாம் ஆதவன். எனக்கே அந்தப் பதிவு பயங்கர மொக்கைக்கு எதிர் மொக்கையாத் தெரிஞ்சுது. நமக்கு மொக்கை எழுதும் கலை இன்னும் வரலைனு எடுத்துட்டேன்.
மொக்கை எழுதும் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
//ஆஹா, சூப்பரா ஃபாலோ பண்றீங்களே. ஆமாம் ஆதவன். எனக்கே அந்தப் பதிவு பயங்கர மொக்கைக்கு எதிர் மொக்கையாத் தெரிஞ்சுது. நமக்கு மொக்கை எழுதும் கலை இன்னும் வரலைனு எடுத்துட்டேன்.//
நமக்கு வேற என்ன வேலை. ஃபாலோ பண்றதுதானே....
மொக்கைக்கு எதிர் மொக்கையா????அப்ப நீங்க தான் பெரிய மொக்கை...
ஃபாலோ ஆன் ;-)))
Good One. Keep going
very informative post.
R.Rajkumar
http://moneymarketblog.blogspot.com/
Post a Comment