Monday, January 5, 2009

கார்பன் க்ரெடிட் - ஏதாவது செய்யணும் பாஸ்

ஜூன் 5ஐ உலக சுற்றுச்சூழல் தினமாக அனைவரும் கடைப்பிடித்து வருகிறோம். அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் போஸ்டர் காம்படீஷன், ஸ்லோகன் காம்படீஷன், கட்டுரை, ட்ராயிங், இன்னும் சில இடத்தில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளுதல் என்று சுற்றுச்சூழலுக்கு திதி கொடுப்பது போல் முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு அதைப்பற்றி நினைவு வருவது அடுத்த வருடம் தான்.

இதன்னியில், கொஞ்சம் லேட்டாக விழித்துக் கொண்ட உலக நாடுகள், சுற்றுச்சூழல் மேம்பட மேற்கொண்ட நடவடிக்கைதான் க்யோடோ ப்ரோடோகால். அதன் ஆஃப்ஷூட் தான் கார்பன் க்ரெடிட்.

காற்று மாசுபடுதலும் ஓசோன் ஓட்டையும்

க்ரீன் ஹவுஸ் கேஸஸ் எனப்படும் கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஹைட் ரோஃப்ளூரோ கார்பன்ஸ் ஆகியவை வெளியேறுவதால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது. இதனால் அகச்சிவப்புக் கதிர்கள் நேரடியாக வளிமண்டலத்திற்குள் வந்து வெப்ப நிலை அதிகமாவதுடன் கடல்மட்டம் உயர்தல், வெள்ளம், பனிப்பாறை நொறுங்குதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தடுக்கவேண்டும் என்று முதலில் 'ரியோ'வில் எர்த் சம்மிட் நடத்தினார்கள். பிறகு க்யோடோ வில் நடந்த மாநாட்டில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது அதுதான் க்யோடோ ப்ரோடோகால். இதன் படி அனைத்து உலக நாடுகளும் 2011 முதல் தங்கள் க்ரீன் கேஸ் எமிஷன் அளவை 1990ஆம் ஆண்டின் அளவுக்கு படிப்படியாகக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத நாடுகள் பெனால்டி கட்டவேண்டும். மேலும் இது வளரும் நாடுகளுக்கு எதிராக இருப்பதால் அவர்களுக்குச் சில சலுகைகள் உண்டு.

இந்த நாடுகள் டார்கெட் அசீவ் செய்ய முடியாத பட்சத்தில், அவர்கள் மற்ற நாடுகளிலிருந்தோ, நிறுவனங்களிலிருந்தோ கார்பன் க்ரெடிட் பெறலாம்.

கார்பன் க்ரெடிட் என்றால் என்ன?

ஒரு கார்பன் க்ரெடிட்டிற்கு ஒரு டன் கார்பன் டைஆக்சைட் வாயு தேவைப் படுகிறது. ஒரு நிறுவனம் அல்லது நாடு ஒரு லட்சம் டன் கார்பன்டையாக்சைட் எமிஷன் அதிகமாக இருந்தால் அதற்கு ஒரு லட்சம் கார்பன் க்ரெடிட் தேவைப் படுகிறது.

இதை விற்கும் நிறுவனங்கள், அவர்கள் சாதாரணமாக வெளியேற்ற வேண்டிய சி.ஓ.2 அளவை விட குறைவாக வெளியேற்றியிருந்தால் அதற்கு அவர்களுக்குக் க்ரெடிட் கிடைக்கும். இது இப்போது ஒரு பெரிய பிசினசாக ஆகிக் கொண்டிருக்கிறது. இதை நிர்ணயிக்க நிறுவனங்களெல்லாம் இருக்கின்றன.

நாம் எங்கே இதில் வருகிறோம்?

நாமும் கார்பன் க்ரெடிட் பெறலாம். எப்படி? நாம் வெளியேற்றும் சி.ஓ.2 மற்றும் க்ரீன் ஹவுஸ் கேஸஸை குறைப்பதன் மூலம்.

ஏ.சி. ஃப்ரிட்ஜ் ஆகியவற்றின் பயன் பாட்டை முடிந்த வரை குறைக்கலாம். கார் எடுப்பதைத் தவிர்க்கலாம். டூவீலருக்கு பதில் சைக்கிள் அல்லது நடராஜா சர்வீஸ் பயன் படுத்தலாம்.

எங்கெல்லாம் அனாவசியமாக லைட் எரிகிறதோ அது நம் வீடோ, அலுவலகமோ, பொது இடமோ அணைத்துவிடலாம்.

இதனால் எரிபொருள் / மின்சாரம் சேமிப்பது மட்டுமல்லாது க்ரீன் கேஸஸ் எமிஷனும் குறைகிறது.

நமக்கென்ன லாபம் என்கிறீர்களா? எப்போதோ படித்த ஒரு வாசகம்தான் ஞாபகம் வருகிறது.

I have not bequeathed this Nature from my Parents. I have Borrowed it from my Children.

நமக்குக் கிடைத்த சூழலை நம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அது மட்டுமில்லாமல், நமக்கு இயற்கை அளித்த பல நல்ல விஷயங்களுக்கான பிரதியுபகாரமாக இயற்கைக்கே இந்த க்ரெடிட்டை அளித்துவிடலாமே.

சிந்தித்து செயல்படுவோம்.

இதை எழுதத்தூண்டிய 'நர்சிம்' அவர்களுக்கு நன்றி.

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கார்பன் பேப்பர் உபயோகப் படுத்தலாமா.. சார்..

CA Venkatesh Krishnan said...

பயன் படுத்தலாம் சார். ஆனா குறைவா பயன் படுத்தணும். அதுதான்.

நெறைய பேர் தங்களோட இ.மெயில் சிக்னேச்சர் ல 'ப்ளீஸ் கன்சிடர் என்விரான்மென்ட் பிஃபோர் ப்ரின்டிங்' என்று எழுதியிருப்பார்கள்.

ப்ளாஸ்டிக்குக்கு பதில் பேப்பர் பேக் / கப் யூஸ் பண்ணுங்கன்னு சொல்வாங்க. ஆனா ப்ளாஸ்டிக்கை விட பேப்பர் சுற்றுச்சூழலை அதிக அளவு மாசுபடுத்தறதா சொல்றாங்க.

TamilBloggersUnit said...

i know lot of details from your site

☀நான் ஆதவன்☀ said...

//இதை எழுதத்தூண்டிய 'நர்சிம்' அவர்களுக்கு நன்றி.//

அதுக்காக இவ்வளவு லேட்டாவா??????

முகவை மைந்தன் said...

கார்பன் வணிகம் குறித்து அருமையாக விளக்கி இருக்கிறீர்கள். உங்களுக்கும், இப்படி ஒரு திரியைத் துவக்கிய நர்சிமுக்கும் வாழ்த்துகள்.

CA Venkatesh Krishnan said...

Thanks tamil bloggers unit !

CA Venkatesh Krishnan said...

பெட்டர் லேட் தேன் நெவர் !

(நாங்க இப்படிதான் சொல்லிக்குவோம். சாக்கு போக்கு, சால்ஜாப்பு சொல்ல இங்கே அணுகவும்.)

CA Venkatesh Krishnan said...

மிக்க நன்றி முகவை மைந்தன்.