தலைவர் ஒரு ரோபோடிக் விஞ்ஞானி. ரொம்ப கஷ்டப்பட்டு தெருவிளக்குல எல்லாம் படிச்சு, நாசாவில வேல செய்யறார். கூடவே தனியா ஒரு ஆராய்ச்சியும் செய்யறார். அதாவது காலச்சக்கரம் மாதிரி கால இயந்திரனை உருவாக்கி, அப்படியே பின்னாடி (அதாவது பழங்காலத்துக்குப் போய்) அப்போ நடக்குற குளறுபடிகளை மாத்தி வரலாற்றைத் திருத்தப்பார்க்குறார். இந்த கால இயந்திரனுக்குள்ள சிக்ஸ்த் சென்ஸ புகுத்திடறார். ஆனா அத இயக்குற பாஸ்வேர்ட் தலைவர் மட்டுமே ஞாபகம் வச்சிக்கிறார்.
இந்த மேட்டர் எப்படியோ லீக் ஆகி வில்லன் க்ரூப்புக்கு தெரிஞ்சிபோயிடுது. அவங்க இந்த ரோபோவை வச்சி அந்த காலத்துக்கு போய் புதையல்லாம் எங்க வச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சி இப்ப எடுத்துரலாம்னு ப்ளான் பண்றாங்க.
ரோபோவ தன்ன மாதிரியே வடிவமைச்சிடறார் தலைவர். ஒரு கட்டத்துல சிக்ஸ்த் சென்ஸ் ஆக்டிவேட் பண்ணிடறார் தலைவர். எது ரோபோ, எது தலைவர்னு தெரியாம போயிடுது. இங்கதான் இடைவேளை.
ஐஸ்வரியா ராய் வரலயேன்னுதானே கேக்கறீங்க. படம் ரொம்ப விறுவிறுப்பா போணும்கறதுக்காக முக்கா மணி நேரத்திலேயே இன்டர்வல் விட்டுர்றோம். பாக்கறவங்களும் அதுக்குள்ள இன்டர்வல் வந்துருச்சே, கத சூப்பர் போலன்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க.
இடைவேளைக்கப்பறம் ரோபோவையும், தலைவரையும் வில்லன் பிடிச்சிகிட்டு முதல்ல ராஜராஜன் காலத்துக்கு போவாங்க. அங்க பாத்தீங்கன்னா ராஜராஜனோட பொண்ணா இருப்பாங்க ஐஸ். அங்க இருக்குற ரகசியங்களைத் தெரிஞ்சிக்கிட்டு மலேயாவுல இருக்குற ஒரு குட்டித் தீவுல பெரிய புதையல் இருக்குன்னு கண்டுபிடிப்பாங்க.
மறுபடியும் இங்க வந்து அந்த தீவுக்கு போவாங்க. அப்ப ரோபோ வில்லனோட சேந்துகிட்டு தலைவர கடல்ல தள்ளிவிட்டுடும். தலைவர் நீந்தி நீந்தியே மலேயாதீவுக்குப் போய் சேந்துடறார். அங்கே தலைவர காப்பாத்தறாங்க ஒரு பொண்ணு. கரெக்ட் அவங்கதான் ஐஸ்.
அந்த ஐஸோட அப்பாவைப்பாத்தா அப்படியே ராஜராஜன் மாதிரியே இருக்கு. அவங்கதான் ஒரு கோவில பாத்துக்குறாங்க. அங்கதான் அந்தப் புதையல் இருக்கு. அதத் தேடி வில்லனும் ரோபோவும் வர்றாங்க. இந்தப்பக்கம் தலைவரும் ஐசும் ராஜராஜனும்.
ரோபோ சிக்ஸ்த் சென்ஸ் எஃபெக்டால வில்லனா மாறி, ஐஸ லவ் பண்றாரு. தலைவர் ஒரு வழியா ரோபோவோட சிஸ்டத்துல டகால்டி வேல செஞ்சி ரோபோவ நல்லவனா மாத்திடறாரு.
புதையல கண்டுபிடிச்சாங்களா? யாருக்குக் கெடச்சதுன்றது கதை.
கடைசி ட்விஸ்டா. ரோபோவுக்கு ஒரு ஐஸ் ரோபோவை பரிசா குடுக்குறாரு தலைவர். அந்த தீவிலேயே ரெண்டு ரோபோக்களையும் விட்டுட்டு நாட்டுக்கு திரும்புறாங்க தலைவரும் ஐசும்.
நடுவுல பாட்டு, ஃபைட்டு, சென்டிமென்டுன்னு நெறய ஐட்டங்கள் இருக்கு. காமெடிக்கு விவேக், வடிவேலு, கவுண்டமணி கூட்டணி, சென்டிமென்டுக்கு விஜயகுமார், சுஜாதா கூட்டணி. வில்லனா அறிமுகமாறார் ஒரு வேற்றுமொழி பிரபல கதா நாயகர்.
இதாங்க ரோபோ கதை. படிச்சிட்டு ஒரு கருத்தையும் சொல்லிட்டு போங்க.
29 comments:
ஏன்...ஏன்... இந்த கொலைவெறி...
:-)
உங்கள் வரலாற்று அறிவையும் கதையில் புகுத்தியாச்சா..? :-)
//
நாஞ்சில் பிரதாப் கூறியது...
ஏன்...ஏன்... இந்த கொலைவெறி...
//
ஏதோ நம்ம பங்குக்கு நமக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் :((
//
’டொன்’ லீ கூறியது...
:-)
உங்கள் வரலாற்று அறிவையும் கதையில் புகுத்தியாச்சா..? :-)
//
அதானே.. செக்கு மாடு சுத்திசுத்திதான் வரும்.
ஆனா இதுவரைக்கும் வந்த ரோபோ கதைகள்லயே யாரும் இந்த டேஸ்ட் தராததால இப்படி கொடுத்துருக்கேன்.
நன்றி 'டொன்'லீ
இளைய பல்லவன் நடிக்க விரும்பிய கதை
இளைய பல்லவன் நடிக்க விருப்பம் தெரிவிக்காத கதை
//ரோபோவுக்கு ஒரு ஐஸ் ரோபோவை பரிசா குடுக்குறாரு தலைவர்.//
சூப்பர் வில்லு,
இந்த கதையில் "கதை" இருப்பதால் இதில் எங்கள் தலிவர் ரஜினி நடித்தால் அது அவருக்கு இழுக்கு ஏற்படும் என்பதை இமயமலை பாபாஜியின் அருளால் அறியப்பெற்று இந்த பதிவின் முதல் கண்டணத்தை என் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
(சோடா ப்ளீஸ்....)
இளைய பல்லவன்,
“மலைக்கு போற சாமி சொல்றது “ஐயப்போ”
“எந்திரன் ரஜனி சொன்னா எதுவும் கேட்காம “ஓரம் போ”
இளைய பல்லவன் கத வுட்டா “அம்போ”
எந்த பன்ச்யயும் கேட்காம நீ பாட்டுக்கு ”போ”
இது ஹாலிவுட் கதை
நல்லா உடுறாங்கப்பூ கத ...
///
SUREஷ் கூறியது...
//ரோபோவுக்கு ஒரு ஐஸ் ரோபோவை பரிசா குடுக்குறாரு தலைவர்.//
சூப்பர் வில்லு,
///
வில்லா? அப்படின்னா இதுமாதிரி வில்லு படத்துல வருதா??
சுரேஷ் அந்த ரெண்டாவது கதைய எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். ரொம்ப சூப்பரா இருக்கு.
இதுல கதை இருக்குன்னு சொல்லி மனச தேத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆதவன். ஆனா தலைவர் இதுல நடிக்கமாட்டாருன்டீங்களே :((.
அவருக்காக இன்னொரு ரோபோ எழுதட்டுமா??
//
கே.ரவிஷங்கர் கூறியது...
இளைய பல்லவன்,
“மலைக்கு போற சாமி சொல்றது “ஐயப்போ”
“எந்திரன் ரஜனி சொன்னா எதுவும் கேட்காம “ஓரம் போ”
இளைய பல்லவன் கத வுட்டா “அம்போ”
எந்த பன்ச்யயும் கேட்காம நீ பாட்டுக்கு ”போ”
//
இப்படியெல்லாம் இருக்கே, சிவ சம்"போ" !!!!
//
நசரேயன் கூறியது...
இது ஹாலிவுட் கதை
//
நசரேயன்,
இது ஹாலிவுட்ல எடுக்க வேண்டிய கதைன்னு தானே சொல்ல வர்றீங்க. யாராவது நான் ஹாலிவுட் கதைய திருடிட்டேன்னு சொல்லப் போறாங்க.
//
நட்புடன் ஜமால் கூறியது...
நல்லா உடுறாங்கப்பூ கத ...
//
வாங்க ஜமால்..
இதுக்குப் பேர்தான் கதையா?? ஹைய்யோ ஹைய்யோ
adadadadadadadada......... nallllla oooothuraangaiya
adadadadadadadada......... nallllla oooothuraangaiya
tension agathingane less tension m,ore work more work less tension
thalaivarukku yetha kadhai thaan. audience thaan paavam.
thalaivarukku yetha kadhai thaan. audience thaan paavam.
Story is nice. waiting to see how the screen play is?
Hello super story
v.good
indha padam pakkaravanga kandipa keelpakam pokanum
indha padam pakkaravanga kandipa keelpakam pokanum
ரோபோ கதை இப்படி தான் இருக்கும்னு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல !!!!!! ஐயோ ஐயோ ..........................
ரோபோ கதை இப்படி தான் இருக்கும்னு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல !!!!!! ஐயோ ஐயோ ..........................
rajini in endhiran
Post a Comment