இது ஒரு சீரியஸ் பதிவு. எதிர் பதிவு, காமெடி, மொக்கைன்னு எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா, முனியாண்டி விலாஸ்ல ரவா தோசை கேட்ட கதையாயிடும். காதலில் விழுவது தப்பா? அப்படி விழுந்தால் அது மாட்டிக்கொள்வதாகுமா? ரெண்டுமே சரிதான். அதாவது காதலில் விழுவதும் சரிதான். விழுந்து மாட்டிக்கொள்வதும் சரிதான்.
காதலில் விழுந்து மாட்டிக் கொள்வது எப்படின்னு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரியப்படுத்தும் பதிவுத்தொண்டுதான் இது. இது ஸ்டிரிக்டா 21 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான். சின்ன பசங்களுக்கெல்லாம் இல்ல. ஆகவே 21வயசுக்குக் கீழ இருக்கறவங்க எல்லாம் அபீட்டாயிக்குங்க. அதே மாதிரி, கடல, டைம்பாஸ், டெம்பரரி மாதிரியெல்லாம்கூட எஸ் ஆகிருங்க.
முதல்ல காதலோட சிறப்ப எல்லாரும் தெரிஞ்சிக்கணும்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கின்னு ஒருத்தர் தேவாரம் பாடியிருக்காரே. காதலில் விழுந்தேன்ன்னு ஒரு படமே வந்திருக்கே. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று ஒரு கவிஞர் எழுதியிருந்தாரே. இவங்கல்லாம் காதல் காதல்னு அடிச்சிக்கும் போது காதல் செய்யாம இருக்கலாமா? இல்லன்னா காதல்ல விழாம தப்பிச்சுக்கலாமா? ஆகவே கலியுகத்துக்கு ஏத்தது காதல் கல்யாணம்தான் !
காதல்னா என்ன?
கண்டதும் வந்தா அது காதல் இல்ல. கண்டதைப் பாத்ததும் வந்தா அதுவும் காதல் இல்ல. அடிச்சா வர்றது காதல் இல்ல. உடனே வர்றதுக்கு காதல் இன்ஸ்டன்ட் காபியும் இல்ல. ஆகவே இதெல்லாம் இன்ஃபாச்சுவேஷன்னு தெரிஞ்சுக்குங்க மக்களே.
காதலும் நட்பும் வளர்பிறை நிலவு போல இருக்கணும். அதாவது மொதல்ல ஒண்ணுமில்லாம ஸ்டார்ட் பண்ணி கடைசில எதுவுமே மிச்சமில்லாம முடியணும். ஸ்டார்டிங்கிலயே வெளிச்சமா இருந்துச்சின்னா அப்பறம் சீக்கிறத்திலேயே ஃப்யூஸ் தான்.
காதலுக்கு பேசிக் குவாலிஃபிகேஷன் என்ன?
நீங்க சொந்தக்கால்ல நிக்கறவங்களா இருக்கணும் (நான் வாடகைக்கால்ல நிக்கலன்னு யாரும் பின்னூட்டம் போட்றாதீங்க!). அதாவது ஃபினான்ஷியல்லி இன்டிபெண்டன்டா இருக்கணும். கமிட்மென்ட்ஸ் இருக்கலாம். ஆனா அத சமாளிப்பதற்கான விஷன் இருக்கணும்.
முக்கியமா கட்டிலைத்தாண்டி யோசிக்கறவங்களா இருக்கணும்.
காதல எப்படி ஸ்டார்ட் பண்றது?
நீங்க யாரையாவது பாக்கறீங்க. உடனே பிடிச்சிடுதா. அப்படியே பாராட்டிட்டு உட்டுடுங்க. அப்படியில்லாம ஒரு அபிப்ராயமேயில்லாம இருக்கா. ஆனா தொடர்ந்து ரெண்டு மூணு தடவ மீட் பண்றாமாதிரியாயிடுதா? அப்ப கை கொடுங்க. இதுதான் உங்க பார்ட்டி. அப்படியே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க. ஆனா ரொம்ப தள்ளி போயிடாதீங்க. ஞாபகம் வெச்சுக்குங்க காதல் இன்ஸ்டன்ட் காபி இல்ல, ஸ்ட்ராங் ஃபில்டர் காபி!
ஸ்டெப் பை ஸ்டெப் விவரம் தெரிஞ்சுக்குங்க. தெரியப் படுத்துங்க. மொதல்ல பாயின்ட் ஆஃப் டிஃபரன்ஸஸ் அதாவது வேற்றுமைக் காரணிகளைக் கண்டுபிடிங்க. எவ்வளக்கெவ்வளவு ஒத்துப் போகாத பாயிண்ட் இருக்கோ அவ்வளக்கவ்வளவு காதல் ஸ்ட்ராங்கா இருக்கும். எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றனங்கறத ஞாபகம் வச்சுக்குங்க.
காதல எப்படி டெவலப் பண்றது?
பார்க்கு பீச்சுன்னு மட்டும் சுத்தாதீங்க. கோவில் சர்ச்சுன்னும் போங்க. தனியான எடத்துக்கு போகாதீங்க. ஆனா கூட்டமில்லாத எடத்துக்கு போங்க. உங்க மீட்டிங்ல அப்பப்ப ஃப்ரெண்ட்ஸ இன்வால்வ் பண்ணுங்க. ஆனா அதிகமாவோ, கம்மியாவோ இல்லாம மீடியமா இருக்கணும்.
டிஃபரன்ஸஸ் கொறைக்கறதுக்கு முயற்சி பண்ணுங்க. அதுக்காக உங்க தனித்தன்மைய விட்டுத்தராதீங்க. நீங்க நீங்களா இருக்கறதாலதான் அடுத்தவங்க உங்கள விரும்பறாங்கன்னு தெரிஞ்சுக்குங்க.
காதல எப்ப எப்படி ப்ரபோஸ் பண்றது?
காதல் ப்ரபோஸ் பண்றதுக்கு ஒரு மாசம் ரெண்டு மாசம்னு டைம் இல்ல. ஆனா மினிமம் அண்டர்ஸ்டாண்டிங்க் வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க. இதுவரைக்கும் நீங்களும் உங்க வருங்காலமும் ஒரு வேவ் லெங்துக்கு வந்திருப்பீங்க. ஆகவே ஒரு நல்ல நாளா பாத்து சொல்லிடுங்க. லெட்டர், மெயில், தூது எல்லாம் வேலைக்காவாது. ஸ்ட்ரெயிட் அப்ப்ரோச்தான் ஒர்க் அவுட் ஆகும். எக்ஸ்பெக்டேஷன் கொறச்சலா இருந்தா பெட்டர். ஆனா, நிச்சயமா ஆப்போசிட் பார்ட்டி அக்செப்ட் பண்ணிடுவாங்க.
அப்பப்ப ட்ரெயிலர் பார்த்துக்கலாம். ஃபுல் மூவியெல்லாம் லைசென்சுக்கு அப்புறம்தான்!
காதல ஃபேமலிக்கு எப்படி தெரியப்படுத்தறது?
இது ஒரு முக்கியமான விஷயம். ஒரு ஜெனரேஷனுக்கு முன்ன இருக்கிறவங்க எந்த அளவுக்கு காதல ஏத்துக்குவாங்கங்கறது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனா உங்களால ஃபேமலிக்கு எந்த ப்ரச்சனையும் வரக்கூடாதுன்ற மாதிரி இருக்கணும். அப்பப்ப சக்சஸ் லவ்வர்ஸ் பத்தி வீட்டுல பேசுங்க. கொஞ்சம் கொஞ்சம் லவ்னு பீலா வுட்டு ரியாக்ஷன் டெஸ்ட் பண்ணுங்க.
ஆனா மசியலன்னு வச்சிக்குங்க, நீங்கதான் டிசிஷன் எடுக்கணும். 99.99% காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க ஒரு வாரிசு உருவானதுக்கு அப்பறமா ஃபேமிலியோட சேந்துற்ராங்க. அதுவரைக்கும் ஸ்ட்ராங்கா இருக்க முடியுமான்னு யோசிச்சுக்குங்க.
காதல் கல்யாணம் எப்படி பண்றது?
வீட்ல ஒத்துக்கிட்டாங்கன்னா ப்ரச்சனை இல்ல. ஆனாலும் கோவில்ல தாலி, ஹோட்டல்ல விருந்துதான் பெட்டர்.
வீட்ல ஒத்துக்கலன்னா, கோவில் கல்யாணம்தான். ரெண்டிலயும் ரெஜிஸ்டர் மேரேஜ் மிக மிக மிக மிக முக்கியம். இது கல்யாணம் செஞ்சிக்கிறவங்களுக்காக மட்டுமில்ல அவங்கள சுத்தியிருக்கிறவங்களுக்காகவும்தான்.
கல்யாணத்துக்கப்புறம்?
க.முல எப்படி இருந்தீங்களோ, க.பி.லயும் அப்படியே இருக்கணும். கிவ் ரெஸ்பெக்ட் அண்டு டேக் ரெஸ்பெக்ட். கண்டிப்பா டெய்லி ஒரு தடவ சண்ட போடுங்க!. ஊடுதல்..... இன்பம்!!.
மொத்தத்துல காதல்ங்கறது ஒரு லாங் டெர்ம் ஸ்ட்ராடஜி. இங்க சொல்லியிருக்கறதெல்லாம் சக்சஸ்ஃபுல் லவ்வர்ஸ் அதாவது கல்யாணம் ஆகி நல்லா செட்டிலானவங்களோட ஃபார்முலா.
ஆ த லி னா ல் கா த ல் செ ய் வீ ர் உ ல க த் தீ ரே ! ! !
35 comments:
காலம் கடந்து விட்டது எனக்கு
\\"காதலில் விழுந்து மாட்டிக்கொள்வது எப்படி?"\\
மாட்டிக்கிறதா, ஏங்க காதல் வெறுப்பான விஷயம் இல்லை தானே
சரி சரி உள்ளே போய் பார்க்கிறேன் ...
\\ஆகவே கலியுகத்துக்கு ஏத்தது காதல் கல்யாணம்தான் !\\
ஆஹா அருமையான கருத்து.
\\காதல்னா என்ன?\\
எத்தனையோ விளக்கங்கள் ...
பற்பலரின் கருத்துக்கள் ...
உணரக்கூடய ஒன்று
\\முக்கியமா கட்டிலைத்தாண்டி யோசிக்கறவங்களா இருக்கணும்.\\
உடன்படுகிறேன் இக்கருத்துடன் ...
\\அப்பப்ப ட்ரெயிலர் பார்த்துக்கலாம். ஃபுல் மூவியெல்லாம் லைசென்சுக்கு அப்புறம்தான்!\\
ஆஹா ஆஹா
அண்ணேன்
காஞ்சித் தலைவரா அல்லது
காதல் தலைவரா ...
\\99.99% காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க ஒரு வாரிசு உருவானதுக்கு அப்பறமா ஃபேமிலியோட சேந்துற்ராங்க. \\
.01% நானும் ஒருவன்.
\\க.முல எப்படி இருந்தீங்களோ, க.பி.லயும் அப்படியே இருக்கணும். கிவ் ரெஸ்பெக்ட் அண்டு டேக் ரெஸ்பெக்ட். கண்டிப்பா டெய்லி ஒரு தடவ சண்ட போடுங்க!. ஊடுதல்..... இன்பம்!!.\\
மிக அருமை நண்பரே ...
நன்றி நசரேயன்,
எனக்கும்தான் :(((
கருத்துரைகளுக்கு நன்றி ஜமால்,
நீங்க .01% ல இருக்கீங்க. சீக்கிரமாவே 99.99%க்கு மாற வாழ்த்துக்கள்.
காதல் என்பது கல்யாணம் வரை மட்டுமல்லங்கறதுதான் சக்சஸ்ஃபுல் லவ்வர்ஸோட வாழ்க்கையிலிருந்து நான் தெரிஞ்சிக்கிட்டது.
மிகவும் ரசித்தேன். ஆனால் என் காதல் தேல்வியில் முடிந்தது. காரணம், என்னுடைய காதலை அவளிடம் கூறும்போது என் நண்பன் என்னருகிலும், அவளது நண்பி அவளருகிலும் :-( ஸோ, கவனம் தேவை. சுமார் 8 வருடக் காதல். இந்த ஆண்டுடன் 22 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் அவளை என்னால் மறக்க முடியவில்லை. இன்னும் தினமும் அவளை பலமுறை நினைக்கிறேன் (கனவில் கூட, அதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா?) உண்மையாக காதல் செய்தால் கண்டிப்பாக காதலித்தவளையே (தவளை அல்ல) கல்யாணம் பண்னுங்க.. இல்லாவிடில் பின்நாளில் கவலைப்பட வேண்டிவரும்.
Heart Broken,
-Ganesh.
//முக்கியமா கட்டிலைத்தாண்டி யோசிக்கறவங்களா இருக்கணும்.//
சிங்கள் காட்டா? இல்ல டபுள் காட்டா? சிங்கள்ன்னா தாண்டிடலாம் டபுள்ன்னா கொஞ்சம் கஷ்டம்
//லெட்டர், மெயில், தூது எல்லாம் வேலைக்காவாது. ஸ்ட்ரெயிட் அப்ப்ரோச்தான் ஒர்க் அவுட் ஆகும்//
எதுக்கு செருப்படி வாங்கி கொடுக்குறதுக்கா???
//99.99% காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க ஒரு வாரிசு உருவானதுக்கு அப்பறமா ஃபேமிலியோட சேந்துற்ராங்க//
பேசாம வாரிசு பொறந்ததுக்கு அப்புறமா வீட்ல லவ் சொன்னா என்ன?
(பேசாம எப்படி சொல்ல முடியும்ன்னு எதிர் கேள்வியெல்லாம் கேக்கப்படாது)
//தனியான எடத்துக்கு போகாதீங்க. ஆனா கூட்டமில்லாத எடத்துக்கு போங்க. உங்க மீட்டிங்ல அப்பப்ப ஃப்ரெண்ட்ஸ இன்வால்வ் பண்ணுங்க. ஆனா அதிகமாவோ, கம்மியாவோ இல்லாம மீடியமா இருக்கணும்.
டிஃபரன்ஸஸ் கொறைக்கறதுக்கு முயற்சி பண்ணுங்க. அதுக்காக உங்க தனித்தன்மைய விட்டுத்தராதீங்க//
இது என்ன ச்சின்னபுள்ளயாட்டம்???? செய்யாத ஆனா செய்ன்னு...
//ரு ஜெனரேஷனுக்கு முன்ன இருக்கிறவங்க எந்த அளவுக்கு காதல ஏத்துக்குவாங்கங்கறது கொஞ்சம் சந்தேகம்தான்//
நானே காதலுக்கு அப்புறம் கல்யாணத்தை ஏத்துப்பேனான்றது சந்தேகம்... இதுல வீட்டுல ஏத்துகறத பத்தி அப்புறம் பாக்கலாம்
//இங்க சொல்லியிருக்கறதெல்லாம் சக்சஸ்ஃபுல் லவ்வர்ஸ் அதாவது கல்யாணம் ஆகி நல்லா செட்டிலானவங்களோட ஃபார்முலா.//
உங்க பார்முலான்னு சொல்லுங்க..
//க.முல எப்படி இருந்தீங்களோ, க.பி.லயும் அப்படியே இருக்கணும். கிவ் ரெஸ்பெக்ட் அண்டு டேக் ரெஸ்பெக்ட்.//
ஒருநால் வீட்டுக்கு வந்து அண்ணிகிட்ட நீங்க பேசுறத பார்த்து தெரிஞ்சுகிறேன்..கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்டா இல்ல ஒன்லி கிவ் ரெஸ்பெக்ட்டான்னு
வருகைக்கும் கருத்துகளுக்கும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி வீணாப்போனவன் அவர்களே !
//
நான் ஆதவன் கூறியது...
எதுக்கு செருப்படி வாங்கி கொடுக்குறதுக்கா???
//
இப்படி ஆரம்பத்திலயே நெகடிவ்வா திங்க் பண்ணக்கூடாதுங்க.
//
நான் ஆதவன் கூறியது...
நானே காதலுக்கு அப்புறம் கல்யாணத்தை ஏத்துப்பேனான்றது சந்தேகம்... இதுல வீட்டுல ஏத்துகறத பத்தி அப்புறம் பாக்கலாம்
///
சரியாப் போச்சு, கதையையே மாத்திட்டீங்களே!
///
நான் ஆதவன் கூறியது...
//இங்க சொல்லியிருக்கறதெல்லாம் சக்சஸ்ஃபுல் லவ்வர்ஸ் அதாவது கல்யாணம் ஆகி நல்லா செட்டிலானவங்களோட ஃபார்முலா.//
உங்க பார்முலான்னு சொல்லுங்க..
///
இதத்தேய்ன் போட்டு வாங்கறதுன்னுவாய்ங்க... (உங்க ஊரு ஸ்லாங்க் வருதா)
////
நான் ஆதவன் கூறியது...
//க.முல எப்படி இருந்தீங்களோ, க.பி.லயும் அப்படியே இருக்கணும். கிவ் ரெஸ்பெக்ட் அண்டு டேக் ரெஸ்பெக்ட்.//
ஒருநால் வீட்டுக்கு வந்து அண்ணிகிட்ட நீங்க பேசுறத பார்த்து தெரிஞ்சுகிறேன்..கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்டா இல்ல ஒன்லி கிவ் ரெஸ்பெக்ட்டான்னு
////
நம்மளப் பொறுத்தவரை கெடைக்கறதெல்லாமே ரெஸ்பெக்ட்தான் (இது எப்படி இருக்கு!!!)
பின்னூட்ட டெஸ்டிங்..
ஹலோ, ஹலோ 1, 2, 3.....
ஹலோ, ஹலோ 4, 5, 6.....
//இதத்தேய்ன் போட்டு வாங்கறதுன்னுவாய்ங்க... (உங்க ஊரு ஸ்லாங்க் வருதா)//
லைட்டா...
ஓகே ஓகே.. பின்னூட்டப்பெட்டி வேலை செய்யிது:)))
///
நான் ஆதவன் கூறியது...
//இதத்தேய்ன் போட்டு வாங்கறதுன்னுவாய்ங்க... (உங்க ஊரு ஸ்லாங்க் வருதா)//
லைட்டா...
///
லைட்டாவா????
அருமையான கருத்து
தமிழ்மணம் விருதுக்காக சக்கர வியூகம் தொடருக்கு வாக்களித்திருக்கிறேன்.. :)
வாங்க சதீசுகுமார்,
சக்கர வியூகத்தை வரலாறு பிரிவில் பரிந்துரைத்திருக்கிறேன்.!
test
//இது ஒரு சீரியஸ் பதிவு. எதிர் பதிவு, காமெடி, மொக்கைன்னு எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா, முனியாண்டி விலாஸ்ல ரவா தோசை கேட்ட கதையாயிடும்.
:))))))) முடியல சார் முடியல......
நன்றி ஸ்ரீதர்கண்ணன் !!!
க மு .தெரியவில்லை .க .பி 90 % ஆண்களும் சிடுமுஞ்சி சிதப்பர்களாக தான் இருக்கிறார்கள் ரெஸ்பெக்ட் யார் சார் தாராங்க.
Post a Comment