இணையத்துடனான பரிச்சயம் ஏற்பட்டது சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு. முதலில் மின்னஞ்சல் கணக்கைத் துவக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து கொள்வதற்கே பல மாதங்களானது. ஒரு வலையகத்தில் (நெட் கஃபே) இந்தக் கணக்கைத் துவக்கினேன்.
என் மின்னஞ்சல்களைப் பார்க்க அந்த வலையகத்திற்குத்தான் செல்வேன். அதுவும் எந்த கணினியில் கணக்கைத் துவக்கினேனோ அந்தக் கணினிதான் வேண்டுமென்று கேட்பேன். என் புரிதல் மின்னஞ்சல் அந்தக் கணினியில்தான் வந்து சேருமென்பதாகவும் அதில் தான் சேமிக்கப் பட்டிருக்குமென்பதுமாகவும் இருந்தது.
பிறகு வலையின் அடிப்படை புரிபட அதன் பயன் பாடு அதிகரித்தது. ஆயினும் தொடர்ந்து ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. வலையில் தமிழைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான் அது. ஒரு சுபயோக சுப நாளில் கூகுளாண்டவரிடம் தமிழ் என்று கேட்க கோவி.கண்ணன் சுட்டிக்காட்டிய சுட்டிகளோடு தமிழ்மணம் என்ற சுட்டியையும் கொடுத்தார்.
அங்கு சென்றால் ஜாம்பவான்களெல்லாம் சிம்மாசனமிட்டுக் கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் டுபுக்குவைப் படிப்பதற்காகவே திரும்பத்திரும்ப சென்று கொண்டிருந்தேன். விடாது கருப்பு, விட்டுது சிகப்பு, மாயவரத்தான், டோன்டு என்று ஒரு கலவரமாகத்தான் இருந்தது தமிழ்மணம். ஒரு நாள் என் அருகில் அமர்ந்திருந்த என் 'பாஸ்' ஒரே வாசனை வீசுதே என்று கேட்டார். புரியாமல் விழிக்க, எப்பவும் தமிழ் மணமே பாத்துக்கிட்டிருக்கீங்களே என்று கேட்டார். அந்த அளவிற்கு தமிழ்மணம் என்னை ஆக்கிரமித்திருந்தது.
அன்று பிடித்த இந்தப் பைத்தியம், ஒவ்வொரு வலைப் பூவாக மேய்ந்து, சண்டைகளை வேடிக்கை பார்த்து, காமெடிகளை ரசித்து, கவிதைகளை ருசித்து வளர்பிறை நிலவைப் போல் வளர்ந்தது. பரிணாம விதிப்படி (உங்களின் விதிப்படி?)மீண்டும் ஒரு சுப யோக சுப நாளில் (யாருக்கு என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. யாருக்கோ என்று நான் பதில் சொல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்), இளையபல்லவன் என்ற பெயருடன் நானும் இந்தக் கோட்டைக்குள் புகுந்து விட்டேன்.
ஆம், வலையுலகம் அதுவும் தமிழ்ப் பதிவுலகம் 'காதல் கோட்டை' போல் ஒரு 'நட்புக் கோட்டை'தானே. முகமறியா முன்பின் பழகியிராத ஆயிரக் கணக்கான நண்பர்கள் உலாவும் இடமல்லவா? எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராது (கும்மியடிப்போர் வேறு) நம் படைப்புகளைப் பற்றிய நேரிய கருத்துகளைச் சொல்லி நம்மை ஊக்கப் படுத்தி, செம்மை செய்வோர் நண்பரல்லாது வேறு யாராக இருக்க முடியும்.
'முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு' என்றார் வள்ளுவப் பெருந்தகை. நேரில் பார்க்கும் போது மட்டும் சிரித்துப் பேசி நட்பு பாராட்டாமல், உள்ளத்தால் பிணைவதே நட்பாகும். அவ்வாறு உள்ளத்தால் நாம் எல்லோரும் நட்புடன் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.
அத்தகைய நட்புக் கோட்டையாக விளங்கி என்னை நூறு பதிவுகள் போட வைத்து மேலும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை(வெறியை?)த்தூண்டும் இந்தப் பதிவுலகிற்கு நன்றி செலுத்தி இந்த நூறாவது பதிவைக் காணிக்கையாக்குவதில் பெருமைப் படுகிறேன்.
சட்ட பூர்வ எச்சரிக்கை: உங்கள் மேலான ஆதரவோடு இவ்வாறான காணிக்கைகள் மேலும் தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.
55 comments:
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் பதிவிட எல்லாம் வல்ல ஆண்டவன் அருளுவாராக.
// அன்று பிடித்த இந்தப் பைத்தியம், ஒவ்வொரு வலைப் பூவாக மேய்ந்து, சண்டைகளை வேடிக்கை பார்த்து, காமெடிகளை ரசித்து, கவிதைகளை ருசித்து வளர்பிறை நிலவைப் போல் வளர்ந்தது. //
இன்னும் வளர்ந்துகிட்டு இருக்கா...
// ஆம், வலையுலகம் அதுவும் தமிழ்ப் பதிவுலகம் 'காதல் கோட்டை' போல் ஒரு 'நட்புக் கோட்டை'தானே. //
மிகச்சரியாக சொன்னீர்கள். சரியான நட்பு கோட்டைதான் வலைப்பூ.
// எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராது (கும்மியடிப்போர் வேறு) நம் படைப்புகளைப் பற்றிய நேரிய கருத்துகளைச் சொல்லி நம்மை ஊக்கப் படுத்தி, செம்மை செய்வோர் நண்பரல்லாது வேறு யாராக இருக்க முடியும்.//
என்னோட பாலிசி...
கும்மி அடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் தொழுதுண்டு அவர் பின் செல்பவர்.
// அத்தகைய நட்புக் கோட்டையாக விளங்கி என்னை நூறு பதிவுகள் போட வைத்து மேலும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை(வெறியை?)த்தூண்டும் இந்தப் பதிவுலகிற்கு நன்றி செலுத்தி இந்த நூறாவது பதிவைக் காணிக்கையாக்குவதில் பெருமைப் படுகிறேன்.//
தங்கள் நன்றிக்கு நன்றி.
// சட்ட பூர்வ எச்சரிக்கை: உங்கள் மேலான ஆதரவோடு இவ்வாறான காணிக்கைகள் மேலும் தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.//
தங்கள் எச்சரிக்கைக்கு மிக்க நன்றி.
உங்கள் கணக்கு வழக்கு வலைப்பூவின் டீம் மெம்பர் ஆவது எப்படி என்று தெரிவியுங்கள். நான் ஃபாலோயராக இருக்கின்றேன்.
என்னுடைய மெயில் - raghavannigeria@gmail.com
வாழ்த்துகள்...பல்லவன்...:-)
100வது பதிவுக்கு வாழ்த்துகள்
\\ஆம், வலையுலகம் அதுவும் தமிழ்ப் பதிவுலகம் 'காதல் கோட்டை' போல் ஒரு 'நட்புக் கோட்டை'தானே\\
மிக(ச்) சரியே
காதல் கோட்டை போலவே நாம் பார்த்து கொள்ளாமலே நட்பு கொண்டோம்
// நட்புடன் ஜமால் கூறியது...
\\ஆம், வலையுலகம் அதுவும் தமிழ்ப் பதிவுலகம் 'காதல் கோட்டை' போல் ஒரு 'நட்புக் கோட்டை'தானே\\
மிக(ச்) சரியே
காதல் கோட்டை போலவே நாம் பார்த்து கொள்ளாமலே நட்பு கொண்டோம் //
அப்ப இது காதல் கோட்டையை விட உசந்ததா?
வியூகம் அமைத்து கதைகளை கொண்டு சென்றவர் ...
\\சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\\
வாழ்த்துகள்
// நட்புடன் ஜமால் கூறியது...
வியூகம் அமைத்து கதைகளை கொண்டு சென்றவர் ... //
அதுவும் சக்கர வியூகம் அமைத்து கொண்டு
\\அப்ப இது காதல் கோட்டையை விட உசந்ததா?\\
நிச்சியமா அண்ணா ...
// நட்புடன் ஜமால் கூறியது...
\\சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\\
வாழ்த்துகள் //
வாழ்த்துக்கள்... மேன் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.
தம்பி ஜமால் இங்கத்தான் இருக்கீயளா...
சீரியஸா காமெடி பன்னுவார்
இங்க பாருங்க
இவரும் ஒரு
எந்திரன்
சதம் கண்ட தானைத்தலைவன் இளைய பல்லவன் (ர்)..
எங்கள் அன்பு நண்பர் இளைய பல்லவன் (ர்)...
வாழ்க.. வாழ்க
வாழ்க
வாழ்க
வாழ்த்துக்கள்...
ஆகா வாழ்த்தலாம்ன்னு வந்தா கும்மி நடக்குதா....நடக்கட்டும் நடக்கட்டும்
100ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வாழ்த்துக்கள் பல்லவன்
ராகவன் சார், ஜமால், டொன் 'லீ', எட்வின் மற்றும் ஆதவன்,
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பலப்பல. உங்க எல்லாருக்கும் தனித்தனியா நன்றி சொல்றேன்.
(பின் பின்னூட்டம்: நூறாவது பதிவின் பின்னூட்டமாவது நூறை எட்டுதான்னு பாப்போம்.[என் கவலை எனக்கு:((])
வாழ்த்துக்கள்
(ஜமால் உங்கள் இனைப்பை எனக்கு அனுப்பினார்)
மற்ற பதிவுகளை படித்துவிட்டு கருத்துரைக்கிறேன்
உங்கள் நூறாவது பதிவுக்கு வந்து வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்.
வாழ்த்துக்கள் தோழரே !!!
//'முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு' என்றார் வள்ளுவப் பெருந்தகை//
அழகான மேற்கோள்.. வலைப்பூ நட்புக்கு உகந்த வரிகள்.
உங்கள் நூறாவது பதிவுக்கு வந்து வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்.
வாழ்த்துக்கள் தோழரே !!!
//'முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு' என்றார் வள்ளுவப் பெருந்தகை//
அழகான மேற்கோள்.. வலைப்பூ நட்புக்கு உகந்த வரிகள்.
வாழ்க.............
மன்னா.................
நின கொற்றம் வளர்க...........
// இளைய பல்லவன் சொன்னது…
ராகவன் சார், ஜமால், டொன் 'லீ', எட்வின் மற்றும் ஆதவன்,
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பலப்பல. உங்க எல்லாருக்கும் தனித்தனியா நன்றி சொல்றேன்.
(பின் பின்னூட்டம்: நூறாவது பதிவின் பின்னூட்டமாவது நூறை எட்டுதான்னு பாப்போம்.[என் கவலை எனக்கு:((])//
என்னாது இது... தம்பிகள் ஜமால், அபு, செய்யது, தங்கச்சி ரம்யா எல்லோரும் இருக்கும் போது விட்டுவிடுவோமா...
காஞ்சித் தலைவன் பல நூறுகள் கொண்டாடிட வாழ்த்துகள்.
நாங்களும் காஞ்சி வரம்தான்.
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் முதல் பட்திவிட்ட நாள் Tuesday, August 19, 2008
நான் முதல் பதிவிட்ட நாள்
August 2, 2008
இதுவரை நானிட்ட பதிவுகள் - 33
நீங்கள் - 100
நீங்க அடிச்சு ஆடுறீங்களா ?!?!?
நான் மெதுவா ஆடுறேனா??!?!?
நான் ட்ராவிட் , நீங்க சேவக்
வரிக்கு வரி ஆராய்ச்சி செஞ்சதுக்கு நன்றி ராகவன் சார்.
கணக்கு வழக்கு பற்றி உங்களுக்கு தனியா மெயில் அனுப்பறேன்.
நன்றி 'டொன்'லீ !
நன்றி ஜமால்,
உங்களது அறிமுகம் பலபேரை இந்தப் பக்கம் வர வெச்சிருக்கு !
ஜமால், அ.மு.செய்யது, நீங்கல்லாம் அடிக்கடி வந்து போனீங்கன்னா 'கல கல' ன்னு ('லக லக இல்ல !) இருக்கும்.
வாழ்த்துகளுக்கு நன்றி எட்வின் !
//
நான் ஆதவன் கூறியது...
100ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வாழ்த்துக்கள் பல்லவன்
//
அலைபேசியிலும் அழைத்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஆதவன்,
100 'ஆ' போடுவீங்கன்னு பாத்தேன், 34 'ஆ'தான் இருக்கு. நீங்க 34 ஆ போட்டா 100 போட்டா மாதிரியா?
நன்றி செய்யது அப்துல் காதர் (எ) அ.மு.செய்யது அவர்களே!!
//
SUREஷ் கூறியது...
வாழ்க.............
மன்னா.................
நின கொற்றம் வளர்க...........
//
சுரேஷ்,
100வது பதிவுக்கு வாழ்த்த வேண்டியதுதான். ஆனா இது ரொம்ப ஓவராப் படுதே.
இருந்தாலும் ரொம்ப நன்றி !!
//
பிரபு கூறியது...
வாழ்த்துக்கள்
(ஜமால் உங்கள் இனைப்பை எனக்கு அனுப்பினார்)
மற்ற பதிவுகளை படித்துவிட்டு கருத்துரைக்கிறேன்
//
வாழ்த்துக்களுக்கு நன்றி பிரபு,
உங்கள் மேலான கருத்துரைகளை எதிர் பார்க்கிறேன்.
நன்றி பாலராஜன்கீதா,
காஞ்சிபுரத்துக்காரங்கன்னாலே கொஞ்சம் ஸ்பெஷல்தான். தொடர்ந்து வாங்க.
//
இராகவன் நைஜிரியா கூறியது...
என்னாது இது... தம்பிகள் ஜமால், அபு, செய்யது, தங்கச்சி ரம்யா எல்லோரும் இருக்கும் போது விட்டுவிடுவோமா...
//
நடத்துங்க நடத்துங்க. வழக்கம் போல பின்னூட்டப் பெட்டி திறந்துதான் இருக்கு!
நன்றி நிஜமா நல்லவன் அவர்களே!
வருகைக்கு நன்றி பிரியமுடன் பிரபு,
எவ்வளவு எழுதினோம்னு இல்ல, என்ன எழுதினோம்னுதான் பாக்கணும்.
நிறையவும் நிறைவாகவும் எழுதுங்கன்னு என்னை ஒருவர் வாழ்த்தினார். அதையே உங்களுக்கும் வழிமொழிகிறேன்.
50 !
நானே நூறுல அம்பதும் போட்டுக்குறேன்.
சுபா கூறியது,
தாங்கள் 100 பதிவு போட்டதற்கு வாழ்த்துகள்.
முக நக நட்பது நட்பன்று நெஞ்ச்த்து
அக நக நட்பது நட்பு.
மிக அருமையான குறள்.
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவற்கள் உலவரும் ம்னிதர்கள் உள்ள உலகில் வ்லைபதிவு
நட்பு ஒரு ஆறுதல், it is a great gift எனபதில் சிறிதும் ஐயமில்லை.
ரொம்ப நன்றி சுபா.
அட பின்னூட்டம் 52ந்னு காட்டுது. அப்ப இது 53வது.
வாழ்த்துக்கள்.
நன்றி வெங்கடேஷ், தொடர்ந்து வாங்க.
Post a Comment