ஒரு வாரம் ஓடிப்போனதே தெரியவில்லை என்று சொல்ல ஆசைதான். ஆனால் ஒரு வாரத்தில் பதிவுகள் இட மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக ஒப்பேற்றிவிட்டேன் என்பதுதான் உண்மை. அழுத்தும் பணிகளுக்கிடையே பதிவுகள் எழுதுவது ஒரு சவாலாகவே அமைந்தது.
முதலில் கூறியது போல், மேலும் புதிய நண்பர்களின் அறிமுகத்தை எதிர்பார்த்து இந்த நட்சத்திரப் பதிவராக வந்தேன். இது நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
முதல் நாள் அனுபவம்
முதல் நாளன்று, பழமை பேசிக்குப் பிறகு என் பதிவு தெரியவில்லை வேறு ஏதோ ஒரு பதிவரின் லிங்க் வெளியானது. உடனே தமிழ்மணத்திற்குத் தொடர்பு கொண்ட போது, டெக்னிக்கல் கோளாறு என்று தெரிவித்தார்கள். பிறகு, இரவு வரை அந்தக் கோளாறு இருந்தது. இடையே, என் ப்ரொஃபைல் குறிப்புகள் மட்டும் '+' குறியை அழுத்தும் போது தெரிந்தது. ஆகவே நான் தான் நட்சத்திரப் பதிவர் என்று உறுதி செய்து கொண்டேன். இரவிலிருந்து எல்லாம் சரியானது.
நட்சத்திரத்தினிடையே ஐம்பதாவது பதிவு இடும் நிகழ்ச்சியும் அரங்கேறியது.
ஒரு சில ஸ்டேடிஸ்டிக்ஸ்
இந்த வாரத்தில் இந்தப் பதிவையும் சேர்த்து பதினான்கு பதிவுகள். இது நான் சென்ற மாதம் மொத்தமாக எழுதிய பதிவுகளுக்குச் சமமானது. சென்றமாதம் தான் அதிகமான பதிவுகள் எழுதப்பட்டது.
இந்த வாரத்தில் மட்டும் பேஜ் 2000த்தைத் தாண்டியுள்ளது. கடந்த நாங்கு மாதங்களில் பேஜ் 6000 தான். ஆகவே நல்ல ரீச் கிடைத்துள்ளது. இதுவும் ஒரு ஆப்ஜெக்டிவ் ஆக இருந்தது.
மற்ற பதிவுகளுக்கு வந்து படித்து பின்னூட்டமிடுவதை முடிந்த வரையில் செய்திருக்கிறேன்.
இந்த வாரத்தில் இடப்பட்ட பதிவுகள் அனைத்துமே பயனுள்ளவையாகவும் சுவையுள்ளவையாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
ஆக இந்த நட்சத்திர வாரம் முடிந்தாலும் தொடர்வது நம் தொடர்புகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மிக்க நன்றிகளுடனும் அன்புடனும்,
என்றும் உங்கள்
இளைய பல்லவன்.
9 comments:
நல்ல வாரமாக இருந்துச்சுங்க.
மனமார்ந்த பாராட்டுகள்.
(சந்துலே சிந்துன்னு அப்படியே ஒரு விளம்பரமும் காஞ்சிபுரத்துலே போட்டுட்டேன்)
அப்ப எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுல....பேக் to கும்மி பல்லவன்
இசை ஆரம்பமாகட்டும்..(ஸ்டார்ட் மீயூஸிக்) நீங்க சொன்னதுதான் :-)
வாழ்த்துகள் இளையபல்லவன்...
//
நல்ல வாரமாக இருந்துச்சுங்க.
மனமார்ந்த பாராட்டுகள்.
//
ரொம்ப ரொம்ப நன்றி மேடம்.
//
(சந்துலே சிந்துன்னு அப்படியே ஒரு விளம்பரமும் காஞ்சிபுரத்துலே போட்டுட்டேன்)
//
ஹி.ஹி. இதுல என்ன இருக்கு. இது உங்க இடம் :)))
// நான் ஆதவன் கூறியது... //
நானா... கும்மியா....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))
//
இசை ஆரம்பமாகட்டும்..(ஸ்டார்ட் மீயூஸிக்) நீங்க சொன்னதுதான் :-)
//
ஆஹா.. சூப்பரா ஃபாலோ பண்றீங்களே..
இதையும் உங்களுக்காகத்தான் முன்னாடி சொல்லியிருந்தேன்.
இப்ப ரிப்பீட்டிக்கிறேன்.:)))
//
சதீசு குமார் கூறியது...
வாழ்த்துகள் இளையபல்லவன்...
//
மிக்க நன்றி சதீசு குமார்.
அருமையான வாரம் இளைய பல்லவன்.
நட்சத்திரமாக இருந்து கொண்டு என்னை வாசிப்பனுபவ தொடர் எழுத அழைத்து என்க்கும் ஒரு வழி கொடுத்தீர்கள்.
உள்ளம் குமுற,
கண்கள் பனிக்க
இதயம் மகிழ
நன்றிகள்
//
SUREஷ் கூறியது...
//
நன்றி சுரேஷ்,
இதயம் இனிக்க வேண்டும். மகிழக் கூடாது:)))
//இதையும் உங்களுக்காகத்தான் முன்னாடி சொல்லியிருந்தேன்.
இப்ப ரிப்பீட்டிக்கிறேன்.:)))//
இத முன்னாடியே ஒரு சின்ன ஹிண்ட்டோட சொல்லியிருந்தீங்கன்னா அப்பவே ஜோதியில ஐக்கியமாகியிருக்கலாம் :-)
Post a Comment