Monday, December 22, 2008

உலகக் காதலனின் உன்னதப் படங்கள்

சென்னையில் உலகத் திரைப்பட விழா நடக்கும் வேளையில் ஒரு மிகச் சிறந்த உலகத் திரைப்பட நாயகனைப் பற்றிய அறிமுகப் பதிவு இது. உலகத் திரைப்படங்களில் அமெரிக்கத் திரைப்படங்களுக்குப் பிறகு சிறப்பான இடம் ஐரோப்பியத் திரைப்படங்களுக்கு அதுவும் குறிப்பாக இத்தாலியத் திரைப்படங்களுக்கு உண்டு. அத்தகைய இத்தாலியத் திரைப்படத் துறையின் முக்கியமான நபரைப் பற்றிய சிறுகுறிப்புதான் இது.


மூன்று முறை 'சிறந்த நடிகருக்கான' ஆஸ்கார் நாமினேஷன். இரண்டு முறை கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 'சிறந்த நடிகருக்கான' பரிசு. இந்த இரண்டு சிறப்புகளுமே இதுவரை இருவருக்குத்தான் உள்ளது. இரண்டு சிறப்புகளும் இவருக்கு மட்டுமே உள்ளது.பாஃப்டா அவார்ட். கோல்டன் க்ளோப் அவார்ட். இன்னும் பல. தற்போது இவர் பெயரில் ஒரு சிறந்த அறிமுக நடிகருக்கான அவார்ட். இவ்வளவுக்கும் சொந்தக்காரர் 'மார்செல்லோ வின்சென்சோ டோமினிகோ மாஸ்ட்ரோயன்னி'. சுருக்கமாக மார்செல்லோ மாஸ்ட்ரோயன்னி அல்லது மார்செல்லோ. லத்தீன் லவர் என்றால் மிகப் பிரபலம். அந்தக் காலத்தில் உலகக் காதல் மன்னனாக அறியப் பட்டவர்.

இத்தாலியின் ஃபோன்டானா லிரி என்ற இடத்தில் 1924ல் பிறந்து, டூரின், ரோம் ஆகிய இடங்களில் வளர்ந்தார். நாஜிப் படையால் கைது செய்யப்பட்டு பின் தப்பித்தவர். முதலில் நாடக நடிகராக வாழ்க்கையைத் துவக்கியவர். 1996ல் கணையப் புற்றுநோயினால் அவதிப்பட்டு இறந்தார்.

இவரது பெரும்பாலான படங்கள் காதல், காமம், கசமுசா கலந்த காமெடி கலாட்டாக்கள்தான் (எத்தனை 'க'!). அனைடா ஏக்பெர்க், சோஃபியா லாரென், கேதரின் (பின்னர் இவரது துணைவி) மற்றும் பலர் இவருடன் நடித்ததால் பிரபலமானவர்கள். இவரது மனைவி ஃப்ளோராவும் ஒரு நடிகைதான்.

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய டைரக்டர் ஃபெடரிகோ ஃபெல்லினியுடன் அருமையான கெமிஸ்டிரி. இருவரும் இணைந்த படங்கள் நிச்சயம் ஏதாவது ஒரு பரிசைத் தட்டிக் கொண்டு போய்விடும்.

இவரது சகோதரர் ரக்கெரோ மாஸ்ட்ரயோன்னி ஒரு எடிட்டர்.

இவரது பிரபலமான சில படங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

லா டோல்ஸ் வீடா - La Dolce Vita - A Sweet Life (1960)
டைரக்ஷன்: ஃபெடரிகோ ஃபெல்லினிமார்செல்லோ இதில் ஒரு ரிப்போர்ட்டர். ஒரு ரிப்போர்ட்டரின் வாழ்க்கையில் ஏழு பகல் ஏழு இரவுகள் நடக்கும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஃபெல்லினி. இதில் திரை நட்சத்திரங்கள், கடவுள் நம்பிக்கைகள், அரசாங்க உயர் வர்க்கத்தினர் ஆகியவற்றைப் பற்றி ரிப்போர்ட் செய்வதுதான் இந்தப் படக் காட்சிகளாக அமைந்திருக்கின்றன.

அனைடா ஏக்பெர்க் இதில் அமெரிக்க நடிகையாக நடித்துள்ளார். ரோம் நகரின் 'ட்ரெவி ஃபவுன்டனில்' குளிக்கும் காட்சி இந்தப் படத்தின் ஹை-லைட். (தற்போதைய தமிழ் படங்களை எடுத்துக் கொண்டால் இதற்கு 'யு' சர்டிஃபிகேட் கிடைக்கும்)பாப்பராசி (paparazzi) என்ற வார்த்தை உலகிற்குக் கிடைத்தது இந்தப் படத்திலிருந்துதான்.இதில் மார்செல்லோவுடன் வரும் போட்டோகிராஃபரின் பெயர் பாபராசோ.

நியூ யார்க் டைம்ஸ் '1960களின் அதிகமாகப் பார்க்கப் பட்ட ஐரோப்பியப் படங்களில் ஒன்று' என்று வர்ணித்திருக்கிறது. நான்கு ஆஸ்கார் நாமினேஷன், ஒரு ஆஸ்கார், கேன்ஸில் கோல்டன் பாம். இதற்குப் பரிசுகள்.

இந்தப் படம் மார்செல்லோவின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது என்றால் மிகையாகாது.டிவோர்ஸ் - இடாலியன் ஸ்டைல் (1962)
டைரக்ஷன்: பெட்ரோ ஜெர்மி

இது ஒரு சூப்பர் காமெடி படம். ஒரு இளமுதிய இத்தாலிய டான். அவரது மனைவியை பிடிக்க வில்லை. அவரது இத்தாலியில் டைவர்ஸ் அந்தக் காலத்தில் சட்டவிரோதமானது. ஆனால் மனைவிக்கு கள்ளத் தொடர்பிருப்பதாக நிரூபித்து கொன்றுவிட்டால் கருணைக் கொலையாக எடுத்துக் கொண்டு மூன்றாண்டுகள் மட்டுமே தண்டனை கிடைக்கும்.எனவே படாத பாடு பட்டு, மனைவிக்கு முன்னாள் காதலனுடன் கள்ளத் தொடர்பிருப்பதாக எப்படியோ நிரூபித்து கொன்று விடுகிறார். ஜெயிலுக்குப் போய் வந்து தனக்குப் பிடித்தவளை மணந்து கொள்கிறார்.

ஆனால் கடைசி காட்சியில் இருவரும் தழுவிக்கொண்டிருக்கும் போது, புது மனைவியின் கால்கள் படகோட்டியை தடவிக் கொண்டிருப்பதாக முடித்திருப்பார்கள்.

இதற்கு மார்செல்லோவிற்கு சிறந்த நடிகர் உட்பட மூன்றுஆஸ்கார் நாமினேஷன்கள். ஆனால் சிறந்த கதை, திரைக்கதைக்கான ஆஸ்கார் அவார்ட் தான் கிடைத்தது.


மேரேஜ் - இடாலியன் ஸ்டைல் (1964)
டைரக்ஷன்: விட்டாரியோ டி சிகா

இதை டிவோர்ஸின் சீக்வல் என்று கொள்ளலாம். ஒரு தொழிலதிபர் (மார்செல்லோ) பலகாலமாக ஒரு பெண்ணை மணக்காமல் துணைவியாக வைத்திருக்கிறார். இவள் அலுத்துவிட வேறொரு பெண்ணை மணக்கத் திட்டமிடுகிறார். இதைத் தெரிந்து கொண்ட அந்த துணைவியார் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடித்து தொழிலதிபரை மணந்து கொள்கிறார்.

இவள் இறப்பதற்காக காத்திருக்கும் தொழிலதிபர் இடையில் புதுக் காதலியுடன் தொடர்பு கொள்கிறார். கடைசியில் துணைவியாருடனேயே தொடர வேண்டியதாகிறது. துணைவியாராக சோஃபியா லாரென்.

கடைசியில் மார்செல்லோ தன் காதலியுடன் தொலைபேசியில் கடலை போட்டுக்கொண்டிருப்பார். கடலையின் மணத்தைக் கண்டுபிடித்து வரும் சோஃபியா, காதலியிடம் விரைவில் மறைந்துவிடுவேன் என்று கூறிவிட்டு, கணவனிடம், நான் இனிமேல் இங்குதான் இருப்பேன் என்று முடிப்பாள்.

இது ஃபிலோமினா மார்ச்சுரானோ என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம்.

இதற்கு இரண்டு ஆஸ்கார் நாமினேஷன்கள்.


8 1/2 (1963)
டைரக்ஷன்: ஃபெடரிகோ ஃபெல்லினி

இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற படம். பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டின் 'ஆல் டைம் பெஸ்ட் ஃபிலிம்' வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்த படம். ஃபெல்லினியின் டைரக்ஷனில் ஒரு மைல் கல். இது அவரைப் பற்றிய ஒரு சுய சரிதை என்பார்கள்.

ஒரு டைரக்டர். ஒருவிதமான மன நோயினால் அவதியுறுகிறார். அவர் இயக்கும் படம் குப்பைதான் என்றாலும் எல்லோராலும் அறிவியல் சார்ந்த படம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. திருமண உறவில் ஏற்பட்ட பிரச்சனைகள், கலையுலகில் ஏற்படும் பிரச்சனைகள் அவரை வாட்டுகிறது. இடையிடையே வரும் பழைய நினைவுகளும், புதிய நிகழ்வுகளும் பின்னிப் பிணைகின்றன.

இது முழுக்க முழுக்க ஃபெல்லினியின் வாழ்க்கையைப் பற்றிய படம்தான் என்று அவரும் கூறியிருக்கிறார். எட்டரை என்பது அவர் அதுவரை இயக்கிய படங்களின் எண்ணிக்கை. ஆறு முழுப் படங்கள். இரண்டு குறும்படங்கள். ஒரு படம் மற்றொரு டைரக்டருடன் இணைந்து பணியாற்றியது.

மாஸ்கோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இந்தப் படத்தை எட்டாயிரம் பேருக்குத் திரையிட்ட போது படத்தின் முடிவில் அனைவரும் சேர்ந்து செய்த கரகோஷம், 'சுதந்திரத்திற்கான அழுகுரல்' என்று வர்ணிக்கப் பட்டது.

இது ஃபெல்லினியின் படமென்றாலும், இந்தப் படம் வெல்ல மார்செல்லோவின் பங்களிப்பு மிக முக்கியமானது.


பிஸ்ஸா ட்ரையாங்கிள் (1970)
டைரக்ஷன்: எட்டோரி ஸ்கோலா

மார்செல்லோவிற்கு சிறந்த நடிகருக்கான விருதை கேன்ஸில் பெற்றுத்தந்த படம். ஒரு முக்கோணக் காதல் கதை. ஒரு பெண், மணமான ஒரு கட்டிடத் தொழிலாளியை(மார்செல்லோ) விரும்புகிறாள். இடையில் ஒரு பிஸ்ஸா குக்கும் இவளைக் காதலிக்கிறான். நடக்கும் சண்டையில் அந்தப் பெண் காயமுறுகிறாள். பிறகு மூவரும் ஒன்றாக வசிக்கின்றனர். ஆனாலும் மீண்டும் மோதல். அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது அவள் இன்னொருவனுடன் காதலில் விழுகிறாள். மார்செல்லோ மீண்டும் குறுக்கிடுகிறான். இறுதியில் அந்தப் பெண் இறந்து போகிறாள்.

கேன்ஸில் மார்செல்லோவிற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுத் தந்த படம்.


காசனோவா 70 (1970)
டைரக்ஷன்: மரியோ மோனிசெல்லி

ஒரு இத்தாலிய மேஜர் பாரிசில் உள்ள நேடோ தலைமையகத்துக்கு மாற்றலாகிச் செல்கிறார். மிகவும் ஆபத்தான வேளைகளில் தான் அவருக்கு காதல் தாகம் மேலோங்கும். அப்படிப்பட்ட ஆபத்தான நிலையில் இருக்கும் காதல் காட்சிகள் காமெடிக் காட்சிகளாக மாறுகின்றன. மேஜராக மார்செல்லோ.இதற்கும் ஒரு ஆஸ்கார் நாமினேஷன்.


எ ஸ்பெஷல் டே (1977)
டைரக்ஷன்: எட்டோரி ஸ்கோலா

மார்செல்லோவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்த மற்றொரு படம். சோஃபியா லாரனுடன் நடித்திருப்பார். ஹிட்லர், முசோலினி காலத்திய கதை. ஹிட்லர் ரோமிற்கு வரும் நாளில் ஒரு ஃபாசிஸ்டு தன் மனைவியை(சோஃபியா லாரென்) வீட்டில் விட்டுவிட்டு ஹிட்லரை பார்க்கச் செல்கிறான். வீட்டில் சோஃபியா தனியாக இருக்கும் போது உள்ளே வருகிறார் மார்செல்லோ. பேசிக் கொண்டிருக்கும் போது பாசிச கருத்துக்களுக்கு எதிரானவர் என்று தெரிகிறது. இதனால் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் இறுதியில் காதல் செய்கிறார்கள் (என்ன கொடுமைடா சாமி). கடைசியில் போலீஸ் அவரை பிடித்துச் செல்கிறது.

இதற்கு கோல்டன் க்ளோப் விருது. ஆஸ்கருக்கு இரண்டு நாமினேஷன்கள்(சிறந்த நடிகர், சிறந்த அயல் நாட்டு படம்). ஃப்ரான்சிலும் ஒரு அவார்டு.


டார்க் ஐஸ் (1987)
டைரக்ஷன்: நிகிதா மிகால்கோவ்

இது ரஷ்ய, இத்தாலிய கூட்டுத் தயாரிப்பு. ஒரு மணமான ரஷ்யப் பெண்மணிக்கும் ஒரு மணமான இத்தாலிய ஆண்மகனுக்கும் இடையே நடக்கும் காதல் போராட்டம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னணியில் எடுக்கப் பட்டது.

இதற்கும் மார்செல்லோவிற்கு ஒரு ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்தது. கேன்ஸிலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
இவற்றில் நான் பார்த்த ஒரே படம் 'லா டோல்ஸ் வீடா'. மற்றவையும் கூடிய விரைவில் பார்க்கவேண்டும் என்று ஆவல்.

4 comments:

Previous Post Comments said...

பழமைபேசி சொன்னது…
அப்பிடிப் போடுங்க.... உபரித் தகவல்கள் நல்லா இருக்கு.

December 19, 2008 8:37 PM
இளைய பல்லவன் சொன்னது…
உடனே வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி பழமைபேசி ! ! !

December 19, 2008 8:54 PM
SUREஷ் சொன்னது…
தமிழ் டப் செய்து வந்தால் சொல்லுங்க பாஸ்

December 19, 2008 9:39 PM
SUREஷ் சொன்னது…
//ரோம் நகரின் 'ட்ரெவி ஃபவுன்டனில்' குளிக்கும் காட்சி இந்தப் படத்தின் ஹை-லைட்.//


இதைவிட சூப்பர் குளியல் காட்சிகள் கர்ண்னின் உதவியால் 40 வருடங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டது சார்

December 19, 2008 9:41 PM
இளைய பல்லவன் சொன்னது…
தமிழ்ல வருமான்னு தெரியல..

சப்டைட்டிலோட இங்கிலீஷ்ல வந்தா கூட பாக்கலாம். நிச்சயம் இன்டரஸ்டிங்கா இருக்கும்.

என்ன ஜம்பு வந்து 40 வருஷம் ஆயிடுச்சா?

December 19, 2008 11:03 PM
குடுகுடுப்பை சொன்னது…
வடிவேலத்தாண்டாத எனக்கு இதெல்லாம் பிரியுமா?

ஆனா ஒன்னு மட்டும் உறுதி சில விசயங்களை செய்யத்தூண்டுது சிலரின் பதிவுகள், உங்களுடையதும் ஒன்னு

December 20, 2008 12:12 AM
குடுகுடுப்பை சொன்னது…
SUREஷ் கூறியது...

//ரோம் நகரின் 'ட்ரெவி ஃபவுன்டனில்' குளிக்கும் காட்சி இந்தப் படத்தின் ஹை-லைட்.//


இதைவிட சூப்பர் குளியல் காட்சிகள் கர்ண்னின் உதவியால் 40 வருடங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டது சார்//

டாக்டரய்யா உஙக வயசு இன்னா?

December 20, 2008 12:12 AM
இளைய பல்லவன் சொன்னது…
//
குடுகுடுப்பை கூறியது...
வடிவேலத்தாண்டாத எனக்கு இதெல்லாம் பிரியுமா?
//

உங்க வடிவேலு கமல் பேட்டிய நெனச்சா இப்பவும் சிரிப்பு வருது. அதனால தான் அவ்வளவு பெரிய ஸ்மைலி போட்டேன். மத்தபடி வடிவேலுவும், மார்செல்லோவும் நம்ம பதிவுலக நண்பர்களுக்கு நிறையதேவை.

//
ஆனா ஒன்னு மட்டும் உறுதி சில விசயங்களை செய்யத்தூண்டுது சிலரின் பதிவுகள், உங்களுடையதும் ஒன்னு
//

என்ன செய்யத் தூண்டுது?

December 20, 2008 9:13 AM
இளைய பல்லவன் சொன்னது…
சபாஷ் சரியான கேள்வி. சொல்லுங்க டாக்டர் சார். என்னுடைய சந்தேகத்தையும் தீர்த்து வைங்க.

December 20, 2008 9:14 AM
நான் ஆதவன் சொன்னது…
இதெல்லாம் டிவிடி கிடைக்குமான்னு தெரியல...டவுண்லோட் செய்ய முயற்சி பண்றேன் பல்லவன்

December 20, 2008 9:32 AM
இளைய பல்லவன் சொன்னது…
கரெக்ட். டவுன்லோட் லிங்க் இருந்தா நமக்கும் குடுங்க.

புண்ணியமா போவும்.

December 20, 2008 10:52 AM
Venkatesh சொன்னது…
Thanks for the nice update

December 20, 2008 12:02 PM
இளைய பல்லவன் சொன்னது…
Thanks Venkatesh

December 22, 2008 2:55 PM

நான் ஆதவன் said...

என்னாச்சு???? மீள் பதிவா? :-)

இளைய பல்லவன் said...

ஆமா ஆதவன். முதல்ல மார்செல்லோ மாஸ்ட்ரோயன்னின்னு ஒரு தலைப்பு வெச்சேன். ரீச் ஆகல போல. அதான் இப்ப டெரரா 'உலகக் காதலனின் உன்னதப் படங்கள்'னு மாத்தி வச்சிருக்கேன். :)))

Anonymous said...

ஐயா,
தாங்கள் மார்செல்லோ- சோபியா லாரென் ந்டித்த ஒட் கப்புள்(odd couple) படத்தைப்பற்றி குறிப்பிட மறந்துவிட்டீர்களே.
மதி