Wednesday, December 17, 2008

உங்களையெல்லாம் திருத்தவே முடியாது . . .

இன்றைய பதிவுலகின் சீரியஸ் (சீரிய அல்ல) நிலை பற்றிய சீரிய (சீரியஸ் அல்ல) கருத்துப் பரிமாற்றத்தின் வெளிப்பாட்டை உங்களுடன் பகர்வதில் நட்சத்திரப் பதிவரானதினும் மெத்த மகிழ்ச்சியுறுகிறேன்.


நான்: சார் நான் சரித்திரத் தொடர்கதை எழுதறேன்.

நலம் விரும்பி: ப்ராஜக்ட் ரிப்போர்டெல்லாம் தயார் பண்றீங்க. சரித்திரத் தொடர் எழுத முடியாதா?

===

நான்: ஒருவாரம் தமிழ்மணத்தில நட்சத்திரமா போட்டிருக்காங்க.

நலம் விரும்பி: அப்ப சீக்கிரம் ரிடையராயிடுவீங்க !

===

நான்: எப்படியாவது புகழ்பெற்ற பதிவராயிடணும்..

நலம் விரும்பி: அப்ப உங்க குழந்தை பேர 'புகழ்' - னு மாத்திடுங்க !

===

நான்: எனக்கு ஹிட் நெறைய வரணும்...

நலம் விரும்பி: ஹைவே-ல போய் நிக்கலாமே !!

===

நான்: என்னோட பதிவு எதுவும் சூடான இடுகை ஆக மாட்டேங்குதே

நலம் விரும்பி: தோசக்கல்லுல வச்சு இடுகையப் போடுங்க !

===

நான்: யாரும் தம்ஸ் அப்ல குத்தவே மாட்டேங்கிறாங்க போலருக்கே. பரிந்துரையே இல்ல.

நலம் விரும்பி: யாருடைய பரிந்துரையும் ஏற்கக்கூடாதுன்னு, அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் சொல்லியிருக்கார்ல!!

===

நான்: ஏதாவது உருப்படியா ஒண்ணு சொல்லுங்க..

நலம் விரும்பி: டி.வி., ஃப்ரிட்ஜ், டேபிள், சேர்னு நெறைய உருப்படிகள் இருக்கே. உங்களுக்கு என்ன வேணும் ? !

===

நான்: இப்ப என்ன பண்ணலாம்?

நலம் விரும்பி: இத பதிவா போடுங்க ! !

===

நான்: அப்ப ஹிட்டு, புகழ், சூடு, பரிந்துரை எல்லாம் கிடைக்குமா?

நலம் விரும்பி:உங்களையெல்லாம் திருத்த்த்த்த்த்தவேஏஏஏஏஏஏ முடியாது :(((

===

பி.கு.:
1. (நலம் விரும்பியின் பதிலுக்குப் பிறகு... நான்: (மனதிற்குள்) அடக்கடவுளே!! என்பதைச் சேர்த்துக் கொள்ளவும்)

2.பதிவர் ஆயில்யன் என்னுடைய 'தல' பதிவுல கொஞ்சம் 'டெரரா' யோசிச்சு தலைப்பு வைங்கன்னு சொன்னார். மொதல்ல நான் வச்ச தலைப்பு ' நானும் நலம் விரும்பியும்'. கொஞ்சம் 'டெரரா' யோசிச்ச பிறகு வச்ச தலைப்பு தான் இது. இதுக்கு மேல 'டெரரா' யோசிக்க முடியலைங்க.

25 comments:

பழமைபேசி said...

சூட்சுமம் புரிஞ்சுடுத்து! இஃகிஃகி!!

ஜே.கே.ஆர் ரசிகர்கள் said...
This comment has been removed by the author.
கார்க்கி said...

இன்னும் எளிதாக சூடாக, த்+கொடு என்று முன்னால் சேர்த்துக் கொள்ளவும்.. அல்லது சாரு ஒரு பிரம்மஞானி என்று தலைப்பிடுங்கள். (உள்லே உங்க ஸ்கூல் சார்(ரு)ன்னு போட்டு எஸ்கேப் ஆகலாம்.

அத விடுங்க, நிஜமா பதிவு கலக்கல்.. சுப்பர்

Shakthiprabha said...

ரசித்தேன் :)

நல்ல கருத்துள்ள (அல்லது இதுபோல் நல்ல ஹாஸ்ய) பதிவா போட்டுட்டு பலனை எதிர்பார்க்காம போய்ட்டே இருங்க.


அடுத்த மாசமே கூட நீங்க ஸ்டார் பதிவாளர் ஆகலாம். அடுத்த இடுகையே கூட பயங்கர சூடு பிடிக்கலாம் :)

வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

சூடாயுருமா.பாப்போம்.

இளைய பல்லவன் said...

//
பழமைபேசி கூறியது...
சூட்சுமம் புரிஞ்சுடுத்து! இஃகிஃகி!!
//

நன்றி. அஃகஃக ! ! !

இளைய பல்லவன் said...

//
கார்க்கி கூறியது...
//

கோனார் நோட்ஸ் உதவிக்கு நன்றி கார்க்கி.. ஞாபகம் வெச்சிக்கிறேன்

இளைய பல்லவன் said...

//
Shakthiprabha கூறியது...
ரசித்தேன் :)
//

நன்றிங்க..

//
அடுத்த மாசமே கூட நீங்க ஸ்டார் பதிவாளர் ஆகலாம்.
//

போனவார ஸ்டார் பதிவர் நான் தானுங்க... அவ்வ்வ்வ்வ்....

இளைய பல்லவன் said...

//
குடுகுடுப்பை கூறியது...
சூடாயுருமா.பாப்போம்.

//

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம்..:0(((

Anonymous said...

:)))

நசரேயன் said...

பதிவு சோரா இருக்கு

SUREஷ் said...

நம்ம நண்பர்கள்ட்ட கெஞ்சி கூத்தாடி அவரவர் அலுவலக கணினியில் வாசகர் பரிந்துரையில் க்ளிக் செய்ய சொல்லலாம்.

சதீசு குமார் said...

@Shakthiprabha சொன்னது…

//அடுத்த மாசமே கூட நீங்க ஸ்டார் பதிவாளர் ஆகலாம். அடுத்த இடுகையே கூட பயங்கர சூடு பிடிக்கலாம் :)//

:))))))

Shakthiprabha said...

//போனவார ஸ்டார் பதிவர் நான் தானுங்க... அவ்வ்வ்வ்வ்....//

:embarassed:

ஹையோ சாரிங்க. சாரி. நான் வலைப்பதிவுக்கும் தமிழ்மணத்துக்கும் புதுசு. மூணு நாளா தான் இந்தப்பக்கம் வரேன். எனக்குத் தெரியாது. இதற்கு முன் படித்ததில்லை.

சதீஷ்குமார்ன்னு இன்னொரு பதிவர் வேற சிரிச்சிருக்காரு.

குப்புற விழுந்தும் துப்பட்டாவில் மண் ஒட்டாத கொறை.

:embarassed:

நான் ஆதவன் said...

சூப்பர்
நான் கொஞ்சம் லேட்டு..பதிவு சூடாச்சா இல்லையா?
ம்ம்ம்ம் இப்ப தான் மொக்கை லைட்டா எட்டி பாக்குது. தொடரட்டும் உங்கள் மொக்கை பணி

துளசி கோபால் said...

:-))))))))))))))))))

இளைய பல்லவன் said...

சிரிச்சா மட்டும் போதுமா பெயரில்லா.. கருத்து சொல்லுங்க:))

இளைய பல்லவன் said...

வாங்க நசரேயன்

சோரா இருக்கா?

கையதட்டுனீங்களா (ஓட்டு போட்டீங்களா?) ! ! !

இளைய பல்லவன் said...

//

SUREஷ் கூறியது...
நம்ம நண்பர்கள்ட்ட கெஞ்சி கூத்தாடி அவரவர் அலுவலக கணினியில் வாசகர் பரிந்துரையில் க்ளிக் செய்ய சொல்லலாம்.
//

இப்படியெல்லாம் செஞ்சாதான் ஆகும்கிறீங்க. :((

ஓக்கே ஓக்கே

இளைய பல்லவன் said...

//
சதீசு குமார் கூறியது...
@Shakthiprabha சொன்னது…

//அடுத்த மாசமே கூட நீங்க ஸ்டார் பதிவாளர் ஆகலாம். அடுத்த இடுகையே கூட பயங்கர சூடு பிடிக்கலாம் :)//

:))))))
//

வாங்க சதீசு குமார்,

இப்படி ஆயிடிச்சு பாத்தீங்களா? :((

இளைய பல்லவன் said...

//
Shakthiprabha கூறியது...
:embarassed:

ஹையோ சாரிங்க. சாரி. நான் வலைப்பதிவுக்கும் தமிழ்மணத்துக்கும் புதுசு. மூணு நாளா தான் இந்தப்பக்கம் வரேன். எனக்குத் தெரியாது. இதற்கு முன் படித்ததில்லை.

சதீஷ்குமார்ன்னு இன்னொரு பதிவர் வேற சிரிச்சிருக்காரு.
:embarassed:
//

நீங்க இவ்ளோ சொல்லும் போது நம்பாமயா இருக்கப் போறோம்..

பரவால்லங்க.. :((, :)).

//
குப்புற விழுந்தும் துப்பட்டாவில் மண் ஒட்டாத கொறை.
//

இது புதுசா இருக்கே:)))

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் கூறியது...
//

வாங்க ஆதவன்,

எங்க நாங்க ரொம்ப குளிர்ச்சி:)))

என்ன ஜோதில ஐக்கியமாக்காம உட மாட்டீங்க போல இருக்கே.;-0))

இளைய பல்லவன் said...

//
துளசி கோபால் கூறியது...
:-))))))))))))))))))
//

இவ்ளோ பெருசா சிரிச்சதுக்கு சந்தோஷம் மேடம்..

thamilselvi said...

ஹையோ சாரிங்க. சாரி. நான் வலைப்பதிவுக்கும் தமிழ்மணத்துக்கும் புதுசு. மூணு நாளா தான் இந்தப்பக்கம் வரேன். எனக்குத் தெரியாது.it ok .ennai pola reply kooda ezhuthamal than irukka kooodu..u r good better than me...

இளைய பல்லவன் said...

நன்றி தமிழ்செல்வி.

இனிமே கருத்து சொல்வீங்கதானே:)))