இந்தக் காலத்தில் பெண்கள் நிறையப் படித்து நல்ல வேலைக்குச் சென்று விடுகிறார்கள். இஞ்சினியரிங்கோ, ஜர்னலிசமோ, அக்கவுன்டன்சியோ, மேனேஜ்மென்டோ எந்த ப்ரொஃபெஷனிலும் மிக்ச் சிறந்த நிலையை எய்திவிடுகிறார்கள். டிகிரி முடித்தவர்கள் கூட பி.பி.ஓ போன்ற துறைகளில் சக்கைப் போடு போடுகிறார்கள். இவர்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருப்பதோடு பாராட்டத்தக்கதாகவும் பெருமைப்படத்தக்கதாகவும் இருக்கிறது. இது முற்றிலும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று.
இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சற்றுப் பொறுங்கள். இது சூடான இடுகையை எதிர்பார்த்து வைக்கப்பட்ட தலைப்பல்ல. பதிவின் முடிவில் இதன் அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்கும். பதிவை முழுமையாகத் தொடர்ந்து படியுங்கள்
சரி பெண்கள் இவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கிறார்களே, அவர்களைப் பெற்றவர்கள் என்ன ஆனார்கள்?. இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே அல்லவா இருந்து கொண்டிருக்கிறார்கள்!. ஆட்டோவின் பின்னால் பெண்ணின் திருமண வயது 21 என்று எழுதியதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததால் (ஆட்டோவில்தான் இவர்கள் ஏற மாட்டார்களே! ஏக்கத்தோடு ஆட்டோ போன பின்பு ஆட்டோவைப் பார்க்கும் போது இது கண்ணில் தவறாமல் பட்டுவிடுகிறது) பெண்ணிற்கு 21வயதில் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்து விடுகிறார்கள்.
எனவே, பெண் என்னதான் படித்திருந்தாலும், நல்ல வேலைக்குச் சென்றாலும் திருமணம்தான் முக்கியம் என்று 21-22 வயதிலேயே கல்யாணத்தை முடித்து விடுகிறார்கள். அதிகபட்சமாக 25ஐப் பெரும்பாலோர் தாண்டுவதில்லை.
அது வரை பெண்கள் எவ்வாறு வளர்ந்திருக்கிறார்கள். பையன்களாவது கடைக்குப் போவது, வண்டி துடைப்பது என்று குறைந்த பட்ச வேலைகளைச் செய்வார்கள். பெண்களுக்கோ சமையலறை எந்தப் பக்கம் என்பது கூடத் தெரிந்திருக்காது. கடைசியாகத் திருமணத்திற்கு முன் இதுதான் சமையலறை என்று ஒரு டூர் அடித்து விட்டு வென்னீர் போட (அடுப்பு பற்றவைக்க என்று புரிந்து கொள்ளவும்!) கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.
ஆக இந்த வகையில் ஒன்றும் தெரியாத பாப்பாவாகத் தான் ரங்கமணிகளின் தலையில் கட்டப்படுகிறார்கள். இப்படி பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளின் கையில் அகப்பட்ட பொம்மையாக இருக்கிறார்கள் ரங்கமணிகள் (பொறுங்கள் பொறுங்கள். இது பெண்களுக்கு எதிரான பதிவல்ல.. தொடர்ந்து படியுங்கள்..).
இதுவாவது பரவாயில்லை. திருமணமானபின் நடை, உடை பாவனைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல், குழந்தை போலவே (அதாவது தி.மு. எப்படி இருந்தார்களோ அதைப் போலவே ) இருப்பதுதான் இவர்களின் விசேஷம். எனவேதான் இவர்களை திருமணமான பெண் குழந்தைகள் என்கிறோம்.
இவற்றையெல்லாம் விடுங்கள். மிக முக்கியமான ஒன்று. குழந்தைகள் என்ன செய்யும்?. எல்லாம் செய்யும் அல்லவா? மிகச் சரியான விடை. ஆனால் ஒன்றை மட்டும் செய்யாது. அதுதான் ஹோம் வொர்க். (அடிக்க வராதீர்கள்..). குழந்தைகளின் ஹோம் வொர்க்கை யார் செய்வார்கள்?. பெரும்பாலும் குழந்தைகளின் அம்மாக்கள் தானே. அதுதானே நடக்கிறது.
இவர்களெல்லாம் குழந்தையாக இருந்து குழந்தை பெற்றுக் கொண்ட பிறகும் அந்தக் குழந்தையின் குழந்தையைப் பார்த்துக்கொள்வது குழந்தையின் அம்மாவின் அம்மாதானே (இது எப்படி இருக்கு!). இந்த ஹோம் வொர்க் தவிர மற்ற ஹோம் வொர்க்குகளுக்கு இருக்கவே இருக்கிறார்கள் பாவப்பட்ட ரங்க மணிகள். ஆக இந்தத் திருமணமான பெண் குழந்தைகளுக்கு ஹோம் வொர்க் பற்றிய கவலையே இல்லாமல் ஜாலியாக இருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்தப் பதிவின் மூலம் திருமணமான பெண்கள் குழந்தைகள்தான் என்பது உறுதி பட வெளிப்படுகிறதல்லவா? குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது ஆன்றோர் வாக்கு. ஆகவே திருமணமான பெண் குழந்தைகளையும் கொண்டாடுங்கள். (அப்பாடா.. பார்த்தீர்களா. எப்படி உங்களையெல்லாம் கொண்டாட வைத்துவிட்டேன்.)
இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும் எல்லாப் பெருமையையும் ஒரு பதிவிலேயே கொண்டுவருதல் இயலாக் காரியமல்லவா? எனவேதான் இத்துடன் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். பின்னூட்டத்தில் இந்தக் குழந்தைகளின் பெருமையை குழந்தைகளும் அவர்களின் காப்பாளர்களும் தெரியப் படுத்தலாம்.
மேலும் தம்ஸ் அப்பில் குத்தினால் இதை அனேகம் பேர் வாசிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மேலும் பல சிறப்புகள் வெளிப்படக் கூடிய சாத்தியங்களும் இருக்கின்றன. ஆகவே மறக்காமல் தம்ஸ் அப்பில் குத்துங்கள்.
8 comments:
vote pottaachu
ஏமாந்த ரங்கமணிகளின் சார்பாக வாழ்த்துக்கள்...
எனக்கு என்னமோ, இது வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரியுதே.
நன்றி பாபு
நன்றி ஈர வெங்காயம்
நன்றி வெங்கட்ராமன்
10 வருடமாக தான் அதிகமாக பெண்கள் வேலைக்கு அதிகமாக செல்கிறார்கள் .
என்ன சார் பெண்களுக்கு அடுகளைய ஆண்கள் எழுதியா கொடுத்து இருக்கிறீர்கள் .
ஒரு நாள் வீட்டு பொறுப்பு எடுத்து செய்து பாருங்கள் புரியும்.
ஆமா !உங்க வீட்டுகரம்மா இந்த பதிவ பார்கல்லியா ?படிக்க சொலுங்க ..அல்லது பதிவே
அவங்கள பார்த்து தான் போட்டேங்களா?
உங்கள் பதிவை படித்து எனக்கும் ஒரு பதிவு எழுத தோன்றியது படித்து பாருங்கள் .
:-)))))))))))))))))))
இந்த பதிவு திருமணமான பெண் குழந்தைகளூக்கான பதிவாக இருந்தாலும்...பதில் பதிவுகள், நிச்சியமாக திருமணமான பெண்மணீகளிடமிருந்து வர வாய்ப்புகள் அதிகம்....!!! பதிவாளர் எவ்வளவு பம்மி, பம்மி எழுதினாலும்....!!!! ம்ம்ம்ம்....பார்ப்போம்....!!!!
Post a Comment