Tuesday, December 2, 2008

தீதும் நன்றும் பிறர் தர வாரா

தமிழில் தற்போது படிப்பவர்கள் எத்துணை பேர்? தமிழ் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தற்போது ஆத்திச் சூடியும், கொன்றை வேந்தனும் கற்றுத் தரப் படுகிறதா? அப்படிக் கற்றுத் தரப்பட்டால் நெட்டுருவுக்காக மட்டுமின்றி அதன் பொருளும் சொல்லித் தரப் படுகிறதா?

நான் பார்த்தது வரை, தமிழகத்தில் தற்போது இரு வகையான பள்ளிகள் உள்ளன. தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள். அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகள்.

இதில் முதல் பிரிவில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மட்டும் தமிழ் என்று ஒரு பாடம் உண்டு. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் இதில் பாஸ் மார்க் தான் வாங்குகிறார்கள். அல்லது அந்த அளவுக்குத்தான் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள். சி.பி.எஸ்.இ.யில் தமிழ் கட்டாயம் அல்லவென்று நினைக்கிறேன்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தரம் சொல்லத்தரமற்றதாக இருக்கிறது. ஒன்றிரண்டு விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஆசிரியர்களைத் தவிர யாரும் மாணவர்களுக்கு நல்ல தமிழைக் கற்றுத் தருவதாகத் தெரியவில்லை.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளுடன் போட்டியிட வேண்டிய சூழலில் இருக்கின்றன. அங்கும் தமிழ் வளர்வதற்கான சூழல் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் சின்னத் திரையில் தமிழ் படும் பாடு தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு படிக்க வேண்டிய நிலையிலேயே தமிழை மக்கள் படிக்காவிட்டால் என்ன ஆவது?தமிழைப் பேசினால் மட்டும் போதுமா? இப்போதே நிறைய ஊடகங்களில் வழக்குத் தமிழ் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. உரை நடைத் தமிழும், இயற்தமிழும் இல்லாத நிலை இருந்து வருகிறது.

இது தொடர்ந்தால் . . . . . .

ஆகவேதான் , 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'.

5 comments:

Sathis Kumar said...

செரிவான கருத்து..!

செம்மொழி எனும் அங்கீகாரம் மட்டும் போதாது, கல்வி முறையில் மாற்றமும், பெற்றோர்களின் ஊக்குவிப்பும், மாணவர்களின் ஆர்வமுமே மொழியைக் காத்திடும் அரண்களாகத் திகழ முடியும்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்போதே நிறைய ஊடகங்களில் வழக்குத் தமிழ் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது//




எல்லா.............

CA Venkatesh Krishnan said...

நன்றி சதீசு குமார்,

தமிழ் அனைத்து வழிகளிலும் வளர வேண்டும். அதற்குத் தேவை தமிழ் இலக்கியங்களின் பயன்பாடு.

தமிழின் பயன்பாடு அதிகரிக்கத் தமிழ்த்தாயை வேண்டுவோம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சினிமாவைப் பார்த்துதான் சென்னைத்தமிழை பேசுகிறார்கள்..



கேலி பேச்சுக்கு கோவைத்தமிழையும் நெல்லைத் தமிழையும் எல்லா மக்களும் பேசுகிறார்கள்..




ஊடகங்கள் நல்ல தமிழை உபயோகப் படுத்தினால் அனைவருமே ஒழுங்கான தமிழுக்கு மாறியிருப்பார்கள். '
இயற்கையாக என்று கூறி தமிழை சிதைத்து விட்டார்கள்.

CA Venkatesh Krishnan said...

//எல்லா.............//

சரியாகச் சொன்னீர்கள் சுரேஷ்,