ஆம் என்ற பதிலுடன் நிறைவுறுகிறது இந்தப் பதிவு.
கடவுள் படைப்பில் பெண்களை 'மாஸ்டர் பீஸ்' என்றும் ஆண்களை 'டிராஃப்ட்' என்றும் கூறுவர். ஏனெனில் முதலில் ஆணைப் படைத்ததாகவும் அதில் உள்ள குறைகளை நீக்கி முழுமையான படைப்பாக பெண்ணைப் படைத்தான் இறைவன் என்பது இதன் சாரம்.
சரி மென்மையானது முழுமையானதா. பெண்களை பூவிற்கும் தென்றலிற்கும் ஒப்பிடுவது கவிஞர்களின், காதலர்களின் வழக்கம். இது ஆணீயத்தின் வெளிப்பாடே ஒழிய பெண்களை ஏற்றிப் போற்றும் செயலல்ல.
உண்மையில் மென்மை என்பது உளவியல் சார்புடையதன்றி, உடலியல் சார்ந்ததன்று.
பெரும்பாலான ஆண்களுக்கு வரும் மாரடைப்பு பெண்களுக்கு ஏன் வருவதில்லை?. ஆண்கள் இளவயதிலேயே மூப்பெய்த பெண்கள் வயதான பின்பும் திடமாக இருப்பது எதனால்? இந்தியக் குடும்பச் சூழலோ அயல் நாட்டுக் குடும்பச் சூழலோ பெண்கள் ஆண்களைச் சார்ந்தே பெரும்பாலும் இருக்கிறார்கள். ஆயினும் கணவன் மறைவிற்குப் பின் பெண்கள் தனியாக குடும்பத்தைப் பேணுவதைப் போல் மனைவியின் மறைவிற்குப் பிறகு ஆண்களால் முடிவதில்லையே ஏன்?
ஆக மென்மை என்பது அவர்கள் உலகியலை நோக்கும் பாங்கிலும் அதை எதிர்கொள்ளும் வகையிலும் இருக்கிறது. ஆண்கள் அனைத்தையும் ஒருவித உறுதியுடன் அதாவது செய்து முடித்துவிட வேண்டும், இது தன்மானம் சார்ந்த செயல் என்ற நினைப்பில் செய்யும் போது 'டென்ஷனும்' 'வெறியும்' சேர்ந்து கொள்கிறது. ஆகவே, மனம் கல்லாகி விடுகிறது. அதாவது மென்மைத் தன்மையை இழந்து விடுகிறது.
பெண்கள் அவ்வாறல்ல. செயல்களை ஒரு வித கடமையாகச் செய்கிறார்கள். ஒரு செயலை அணுகும் முறையும் வேறுபட்டு இருக்கிறது. ஆகவே அவர்கள் மென்மையானவர்களாக இருக்கிறார்கள்.
நமது பதிவுலகையே எடுத்துக் கொள்ளுங்கள். எத்துணைப் பெண் பதிவர்கள் 'கான்ட்ரவர்சியலாக' எழுதுகிறார்கள். இங்கு 'கான்ட்ரவர்சியலாக' என்பது விவகாரமான, காரசாரமான, முரண்பட்ட போன்ற பதிவுகள் எனலாம். அவர்களது பதிவுகளில் வாழ்க்கையின் இனிமையான நிகழ்வுகளும் நகைச்சுவையும் இழையக் காணலாம்.
இவற்றை எல்லாம் எழுதக் கூடாது என்பதோ, எழுதுவது தவறு என்பதோ அல்ல என்னுடைய கருத்து.
வாழ்க்கை என்பது எப்போதுமே 'ஹால்ஃப் ஃபில்ட் க்ளாஸ்' தான். பாதி நிரம்பிய கிண்ணம். அதில் எந்தப் பாதியைப் பார்க்கிறோம் என்பதில் தான் நாம் மென்மையானவர்களா, வன்மையானவர்களா என்பது அடங்கி உள்ளது.
ஆகவே, பெண்கள் மென்மையானவர்கள். ஆனால் உறுதியானவர்கள்.
டிஸ்கி (அ) பின் குறிப்பு:- இன்று காலை வெளியே செல்லும்போது, பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவன் அல்லது தன்னுடன் வரும் ஆணின் கையைப் பிடித்தவாறு செல்வதைப் பார்க்க நேர்ந்தது. அப்போது தோன்றிய கேள்விதான் தலைப்பு. அதற்கு என் மனம் பகன்ற பதில்தான் இந்தப் பதிவு.
6 comments:
//ஆகவே, பெண்கள் மென்மையானவர்கள். ஆனால் உறுதியானவர்கள்.//
வழிமொழிகிறேன்..
// சதீசு குமார் கூறியது... //
Thanks Sathish Kumar
பெண்கள் பற்றிய பதிவு,பெண்களே கூட்டமா ஒடி வாங்க.பல்லவர பல்லக்குல தூக்கி வெச்சு ஆ(சா)டுங்க
//
குடுகுடுப்பை கூறியது...
பெண்கள் பற்றிய பதிவு,பெண்களே கூட்டமா ஒடி வாங்க.பல்லவர பல்லக்குல தூக்கி வெச்சு ஆ(சா)டுங்க
//
ஏற்கனவே ஒரு முடிவோட இருக்காங்க. நீங்க வேற ஏத்திவிடறீங்களா:((
நல்லா இருங்க.
/*பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவன் அல்லது தன்னுடன் வரும் ஆணின் கையைப் பிடித்தவாறு செல்வதைப் பார்க்க நேர்ந்தது*/
பெண்கள் ஒட்டு நிச்சயம் உண்டு
நன்றி நசரேயன்.
அவங்க ஆதரவோடுதானே புரட்சித் தலைவர் ஆட்சியப் பிடிச்சார்.
Post a Comment