சற்றேறக்குறைய நான்கு மாதங்கள். நாற்பது சொச்சப் பதிவுகள். எட்டு பின் தொடர்வோர். வழக்கமாக தளத்திற்கு வருவோர் அதைப்போல் இரண்டு மூன்று மடங்கு. பெயர் சொல்ல ஒரு சரித்திரத் தொடர். இவ்வளவுதான் பதிவுலகில் என் பின்புலம். இதற்குத்தான் தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவராக அழைப்பு. ஆகவே பதிவுலகில் நான் ஒரு குழந்தை. இது எனக்குத் தமிழால் கிடைத்த பெருமையே அன்றி வேறில்லை.
என்றேனும் ஒரு நாள் நட்சத்திரப் பதிவராவோம் என்ற எண்ணம் அனைத்துப் பதிவர்களைப் போல் எனக்கும் உண்டு. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இது நடைபெறும் என்பது எதிர்பாராதது. ஆகவே தற்போது நடப்பது நான் எதிர் பார்த்தது. ஆனால் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்பது எதிர் பாராதது :).
இந்த நட்சத்திர வாரத்தில் வழக்கமான சக்கர வியூகத்துடன் பல்வேறு விஷயங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
இந்த நட்சத்திர வாரத்தின் மூலம் நான் அடைய விரும்புவது, அதிக அளவிலான 'ரீச்'. மேலும் பல நண்பர்கள். அதன் மூலம் எனது எழுத்தில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம். உங்கள் ஒத்துழைப்பு. இவை நிச்சயம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.
இடையிடையே என் எழுத்தில் ஏற்பட்ட தொய்வினைச் சரிகட்டியும் என்னுடைய பதிவிற்குத் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டும் என்னை ஊக்கப் படுத்தி வரும் அணிமா, சதீசு குமார், சுரேஷ், குடுகுடுப்பை, ஆதவன் மற்றும் பலருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேல் இந்தப் பெருமையை எனக்களித்த தமிழுக்கு நன்றி.
தங்கள் மேலாதரவான ஆதரவை எப்போதும் போல் எதிர்பார்க்கும்,
உங்கள்
இளைய பல்லவன்.
பின் குறிப்பு:- இந்தப் பதிவை நேற்று ட்ராஃப்டாக வைத்திருந்து இன்று பப்ளிஷ் செய்தேன். ஆனால் நேற்றைய தேதியிலேயே இது வெளி வந்துவிட்டது. ஆகவே தமிழ்மண முகப்பில் தெரியவில்லை போலிருக்கிறது. ஆகவே, ரீ பப்ளிஷ் செய்யப் படுகிறது.
37 comments:
நட்சத்திர வாழ்த்துக்கள் இளைய பல்லவன்!
வாழ்த்துக்கள்.இந்த கூத்துக்கு முன்னால் நடந்ததைத்தான் கும்மியிருக்கேன் பாருங்க
நன்றி தமிழ் பிரியன்
நன்றி கண்மணி,
கும்மியிருக்கீங்களா, எங்க?
வாழ்த்துக்கள் இளைய பல்லவன்
நன்றி கிரி !
வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா
//
அன்புடன் அருணா கூறியது...
வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா
//
நன்றி அருணா
நட்சத்திர வாழ்த்துக்கள் இளைய பல்லவன்!
நட்சத்திர வாழ்த்துக்கள் !
நிறைய சுவையான விசயங்களோடு துறை சார்ந்தும் தகவல்களை பரிமாறுங்கள்! :)))
நட்சத்திர வாழ்த்துக்கள் இளைய பல்லவன்!
நன்றி தங்கராசா ஜீவராஜ்
//
நன்றி ஆயில்யன், நிச்சயமாக துறைசார் பதிவுகள் இடம் பெறும்.
//
நன்றி பழமைபேசி. உங்களுக்குப் பிறகு மேடையேறுகிறேன்.
உங்கள் அளவுக்கு இருக்கிறேனா என்று பார்க்கலாம்:-)
வாழ்த்துக்கள் இளைய பல்லவன்!!!
நன்றி கபீஷ்
வாழ்த்துக்கள் இளைய பல்லவன்
குறுகிய காலத்திலேயே நட்சத்திர பதிவர் என தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும். என்னுடைய வாழ்த்துகள் அன்பரே.. :)
வாழ்த்துக்களுக்கு நன்றி நசரேயன்.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி சதீசுகுமார்.
நட்சத்திரமே...
இனிய வாழ்த்து(க்)கள்.
'சக்கரவியூகம்' னு ஒரு படம் முந்தாநாள் பார்த்தபோது, உங்கள் தொடர் நினைவுக்கு வந்தது.
இன்னிக்கு கணினி திறந்தால் நீங்க நட்சத்திரமா வந்து ஜொலிக்கிறீங்க!
வாழ்த்துகள் !
// துளசி கோபால் கூறியது...
நட்சத்திரமே...
இனிய வாழ்த்து(க்)கள்.
//
வாங்க மேடம்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
//
'சக்கரவியூகம்' னு ஒரு படம் முந்தாநாள் பார்த்தபோது, உங்கள் தொடர் நினைவுக்கு வந்தது.
//
இதை எனக்குக் கிடைத்த பெரும் ஊக்கமாக நினைக்கிறேன்.:)
நன்றி கோவி.கண்ணன்.
மீண்டும் நன்றி திகழ்மிளிர்.
அட இவ்வளவு சீக்கரம் நீங்க நட்சத்திரமா...சூப்பர் பல்லவன்.
வாழ்த்துக்கள் பல்லவன்.
ஆமா ஆதவன். எனக்கே எப்படின்னு தெரியல.
வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கல்லாம் தொடர்ந்து வரலன்னா நான் எப்பவோ கடைய கட்டியிருப்பேன்.
வாழ்த்துக்கள் இளைய பல்லவன்!
நன்றி நம்பி
நட்சத்திர வாழ்த்துக்கள் இளைய பல்லவன்!
நன்றி தேவன் மயம் அவர்களே!
வாழ்த்துக்கள் இளையபல்லவன்....நான் தற்பொழுது கடல் புறா மூன்றாம் பாகத்தை முடிக்கும் தருவாயில் உள்ளேன்....இளையபல்லவன் எல்லோரையும் நன்கு கவர்ந்த பாத்திரம். தாங்களும் அவ்வாறே அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி தீரன். எனக்கும் கடல்புறா இளையபல்லவன் மிகவும் பிடிக்கும்.
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே ...
நன்றாக நினைவில் இருக்கிறது உங்களின் 25 பதிவு !!!!!!!!!!!!
கண்டிப்பாக இது தமிழ் அன்னையின் பார்வையை தவிர வேறு என்ன??
உங்களுக்கு பதிவிலேயே நன்றி தெரிவித்து விட்டேன் அணிமா:)))
சுபா கூறியது,
நட்சத்திர வாழ்த்துக்கள் ,பல்லவன்.
தாங்கள் பல வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சுபா
ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க.
மத்த பதிவுலயும் கருத்து சொல்லிட்டுப் போங்க.
Post a Comment