Thursday, December 11, 2008

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

வணக்கம். என் பெயர் சரவண முத்துக் குமார். சுருக்கமாக சரவணன். எம்.காம் வரை படித்து விட்டு, ஒரு ஆட்டோமொபைல் ஒ.இ.எம். கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் ஆபீசராகக் கடந்த 6 வருடங்களாகப் பணிபுரிகிறேன். இடையே ஐ.சி.டபள்யூ.ஏ. வுக்கும் படித்துத் தேர்வெழுதி வருகிறேன். இது முடித்தால் மேனேஜராகப் பதவி உயர்வு கிடைக்கும்.

நான் இதுவரை ஃபெயிலானதில்லை. இதை வைத்து என் வயதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமில்லையல்லவா?. வீட்டில் நான் இரண்டாவது பிள்ளை. அக்காவுக்குத் திருமணமாகி விட்டது. தந்தை அரசாங்க அதிகாரி. தாய் ஹோம் மேக்கர். எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லை. தற்போது இந்த விவரங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

என் நிறுவனம் ஒரு வெளி நாட்டுக் கார் கம்பெனிக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கிறது. இந்த பாகங்கள் ஃபாக்டரிக்கு சப்ளை செய்வதுடன், இந்தியா முழுவதிலும் உள்ள சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.

ஆனால் நாங்கள் பில்லிங் செய்வது அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் விங்கிற்குத்தான். இது போக வெளி நாட்டிலுள்ள இந்தக் கம்பெனியின் ஃபாக்டரிகளுக்கும் சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த கம்பெனிப் பொருட்களில் கடந்த மூன்று மாதங்களாக குவாலிடி பிரச்சனைகள் அதிகரித்து விட்டன. ரிஜக்ஷன், ரீ-வொர்க் என வேலைப்பளு அதிகமாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இது நான் பணிபுரியும் நிறுவனத்தின் இமேஜையே பாதித்து விட்டது.

நான் காஸ்ட் அக்கவுண்டன்சி படித்து வருவதால், ஒரு பெரிய அனலசிஸ் செய்து குவாலிடி பிரச்சனையால் லாபம் 35% வரை குறையும் என்று ஒரு விரிவான அறிக்கை அளித்திருந்தேன். இந்த அறிக்கை என் வாழ்வின் போக்கையே மாற்றும் என்று தெரிந்திருந்தால் இதை தயாரித்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.

=====

வணக்கம். என் பெயர் சுவேதா. படித்தது பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன். எனது ஃபேவரிட் கல்லூரியில் ட்ரிபிள் ஈ யோ, சி.எஸ்-சோ. கிடைக்காததால் கிடைத்த இன்ஸ் ட்ருமென்டேஷனில் சேர்ந்து விட்டேன். என்னுடன் கல்லூரியில் ட்ரிபிள் ஈ, சி.எஸ் சேர்ந்தவர்களுக்கு மூன்றாமாண்டே கேம்பசில் ப்ளேஸ்மென்ட் ஆகிவிட, அப்போதுதான் ஏண்டா இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தோம் என்று வேதனைப் பட்டேன்.

நல்ல வேளையாக படித்து முடித்தவுடன், உலகின் மிகப் பெரிய இன்ஸ் ட்ருமென்டேஷன் கம்பெனியில் பூனாவில் வேலை கிடைத்தது. எல்லோருக்கும் ட்ரீம் ஜாப்-ஆக இருக்கும் இந்தக் கம்பெனியில் வேலை கிடைத்தது மிகப் பெரிய சந்தோஷத்தை அளித்தது. இப்போது வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடம் முடிந்து விட்டது.

சேர்ந்தது முதல் டூர் தான். இந்தியா, ஜெர்மனி, யு.எஸ்., சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என கோபால் பல்பொடி கணக்காக உலகம் சுற்றும் வாலிபி ஆகிவிட்டேன். இதுதான் பிரச்சனையாக முடிந்திருக்கிறது.

வீட்டில் நான் தான் முதல் பெண். தங்கை ஐ.டி. ஃபைனல் இயர் படிக்கிறாள். எனக்குத் திருமணம் செய்து விட வேண்டும் என்பது அப்பாவின் எண்ணம். இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் எங்கே பெண் பார்ப்பது?

ஆகவே, சென்னைக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து விடு என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இங்கே அனுப்பமாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்தக் கம்பெனிக்கு சென்னையில் மிகப் பெரிய கிளை உள்ளது.

நான் வராமல் போகவே, அப்பாவே சென்னையில் அவருடைய நண்பர் ஜி.எம்.ஆக இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்து விட்டார்.உடனே ஜாயின் செய்ய வேண்டுமாம். நேரில் தகவல் சொல்கிறாராம். இங்கே, பேப்பர் போட்டுவிட்டு, உடனே ஃப்ளைட் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். வேலையைப் பற்றி விசாரித்தேன்.

அடக் கடவுளே, ஒரு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஓ.இ.எம். கம்பெனியில் குவாலிடி பிரச்சனையாம். ஆகவே என்னை குவாலிடி மேனேஜராகப் போட்டிருக்கிறார்களாம். என்ன கொடுமை சரவணன் இது, என்று கேட்டேன் அப்பாவிடம். அவர் பெயர் சரவணன் இல்லை. ஆனால் இதே பெயரை தினமும் உச்சரிப்பேன் என்று எனக்கு அப்போது தெரியாது.

===

எனது அறிக்கை நன்றாக வேலை செய்தது. குவாலிடியில் எப்படி பாகங்கள் க்ளியர் ஆகிறது என்று யாருக்கும் புரிய வில்லை. குவாலிடி மேனேஜர் ஒரு பெருசு (பெரியவர்கள் மன்னிப்பார்களாக). அவர் முதலில் ஒரு பட்டறையில் டீ வாங்கிக் கொடுத்து தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.

படிப்படியாக முன்னேறி தற்போது குவாலிடி மேனேஜராக உள்ளார். வண்டியைப் பற்றி நல்ல அனுபவம் உண்டு. ஒரு வண்டியை பிரித்து மீண்டும் கட்டி விடுவார். ஆனால் குவாலிடி என்பது அவருடைய சிலபசில் இல்லை. ஆனாலும் ஜி.எம். சொல்லைத் தட்டாமல் குவாலிடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இந்தப் பிரச்சனைக்கு என்ன காரணம் என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆட்டோ குவாலிடி மிஷின் சரியாக வேலை செய்யவில்லை என்று ரிப்போர்ட் கொடுத்தார். அந்த மிஷினின் விலை 150 லட்ச ரூபாய். அந்த மெஷினைத் தயாரித்த கம்பெனியிடம் கேட்ட போது அவர்களும் இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

உடனே மிஷினை மாற்ற விரும்பவில்லை நிர்வாகம். எனவே, குவாலிடிக்கு ஒரு புது ஆளைப் போட்டிருக்கிறார்களாம். அதுவும் ஒரு பெண்ணாம். ஃபாக்டரி ஹெட்டிற்கு ப்ரொடக்ஷன் ப்ரச்சனையைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை. மேலும் இன்னொரு ஃபாக்டரியையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

நான் குவாலிடி பற்றி ஒரு ரிப்போர்ட் கொடுத்ததால் அந்தப் பெண்ணை எனக்கு ரிப்போர்ட் செய்யச் சொல்லிவிட்டார். அவள் குவாலிடி மேனேஜரிடமிருந்து இன்டிபென்டன்டாக இருக்க வேண்டுமாம். என்ன கொடுமை சரவணா இது என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.

===

அந்தக் கம்பெனி நகரத்திலிருந்து மிகத் தள்ளி இருந்தது. கம்பெனி வாகனம் குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் வரும். வேலை அப்படியில்லையே. ஒரு எம்.என்.சி.யில் வேலை செய்துவிட்டு இங்கு எதுவுமே பிடிக்க வில்லை. போதாதற்கு ஒரு அக்கவுன்ட்ஸ் ஆபீசருக்கு ரிப்போர்ட் செய்யவேண்டுமாம். அவனுக்கு என்ன தெரியும் நான் அவனிடம் ரிப்போர்ட் செய்ய. என்ன செய்வது. எல்லாம் நேரம் என்று அவனிடம் சென்றேன்.

===

பழைய குவாலிடி மேனேஜர் மெஷினை மாற்ற வேண்டும் என்று சொன்னதால், முதலில் மெஷினை செக் செய்யுமாறு சுவேதாவிடம் சொன்னேன். ஏதாவது உள்ளே பழுதடைந்து இருக்கலாம் என்ற என் சந்தேகத்தையும் சொன்னேன். அவள் சரியாகக் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

இவன் என்ன சொல்வது, நாம் எஞ்சினியர் என்ன கேட்பது என்ற நிலையில் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். இதெல்லாம் நடக்காதுமா என்று நினைத்துக் கொண்டு, மாலை ரிவியூ செய்யலாம் என்று சொல்லி வெளியில் சென்றுவிட்டேன்.

===

முதலில் வேறு விதமாக ட்ரை செய்து பார்த்தேன். சென்சார், ப்ரோக்ராம் என்று எல்லாவற்றையும் செக் செய்தும் பேக் டு ஸ்கொயர் ஒன் தான். சரி சரவணன் சொன்னதை ட்ரை செய்து பார்க்கலாம் என்று மிஷினை ஆராய்ந்தேன். என்னுடைய பழைய கம்பெனியின் இன்ஸ்ட்ருமென்டேஷன் பாகங்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன.

ஒவ்வொன்றாக ஆராய்ந்த போது, ஹுர்ரே!! டக்கென்று அந்த ஃப்ளா பிடிபட்டது. எர்ரர் வேல்யூ டிடெக்ட் செய்யும் சர்க்யூட் ஷார்ட் ஆகி பைபாஸ் ஆகி விட்டிருக்கிறது. எனவே, எர்ரர் வேல்யூ வந்தாலும் பைபாஸ் ஆகி விடுவதால் குவாலிடி ஓக்கே என்று வந்து விடுகிறது.

இதைக் கண்டு பிடித்து ரிப்போர்ட் கொடுத்தவுடன் நான் நோபல் பரிசுக்குத் தகுதியானவள் போல் எல்லோரும் என்னைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஓவர் நைட் என்னுடைய வேல்யூ எகிறிவிட்டது. என் அப்பாவிற்கே ஜி.எம் ஃபோன் செய்து, உன் பெண் ஒரு ஜீனியஸ் என்று சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார். சி.டி.சி.யில் 50% இன்சென்டிவும் கொடுத்து விட்டார்

இதற்கெல்லாம் காரணம் சரவணனின் சஜஷன் தான் என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. அவனுக்கு ஒரு பார்ட்டி கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

16 comments:

Unknown said...

இளைய பல்லவன்,

சிறு கதைன்னு label இருக்கு.ஆனா
தொடரும்னு போட்டிருக்கு.

தொடர்கதை மாறிதான் தெரிகிறது.

‘chaos theory" மாதிரி ஆரம்பிக்குது.

இது வரையிலும் ஒகே.

கார்க்கிபவா said...

நல்லாத்தான் போது..

வாழ்த்துகள்..

CA Venkatesh Krishnan said...

வாங்க ரவிஷங்கர்.

சிறுகதைதான். சற்று பெரிய சிறுகதை. அடுத்த பகுதியில் முடிந்து விடும். அடுத்த பகுதி நாளைக்கே.

CA Venkatesh Krishnan said...

//
கார்க்கி கூறியது...
நல்லாத்தான் போது..

வாழ்த்துகள்..
//

நன்றி கார்க்கி

☀நான் ஆதவன்☀ said...

//‘chaos theory" மாதிரி ஆரம்பிக்குது.//

நான் சொல்ல வந்தான் அவர் சொல்லிட்டாரு...

நல்லாத்தான் போகுது..சட்டுபுட்டுன்னு ரெண்டு பேருக்கும் கல்யாணத்த பண்ணி குழந்த குட்டின்னு சந்தோஷமா வைக்க பாருங்க ஆமா சொல்லிபுட்டேன்...

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
//‘chaos theory" மாதிரி ஆரம்பிக்குது.//

நான் சொல்ல வந்தான் அவர் சொல்லிட்டாரு...

நல்லாத்தான் போகுது..சட்டுபுட்டுன்னு ரெண்டு பேருக்கும் கல்யாணத்த பண்ணி குழந்த குட்டின்னு சந்தோஷமா வைக்க பாருங்க ஆமா சொல்லிபுட்டேன்...

//

:-)

Sathis Kumar said...

உண்மைக் கதையா இருக்கும்போல இருக்கே... :))

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் கூறியது...
உண்மைக் கதையா இருக்கும்போல இருக்கே... :))

//

இருக்கும்போல இருக்கே... :))

Anonymous said...

சுபா கூறியது,
நன்றாக உள்ளது.ஆனால் இது என்ன மிக..... நீள சிறுகதையா?
தங்கள் சக்கரவியுகம் என்னஆயிற்று

வெங்கட்ராமன் said...

கதை நன்றாக இருக்கிறது
சொன்ன விதம் அருமை

கணேஷ் said...

கலக்கல் கதை!! சீக்கிரம் அப்டேட் செய்யவும்..

CA Venkatesh Krishnan said...

நன்றி சுபா,

கொஞ்சம் பெரிய கதை. ஒரே பதிவில் போட்டால் படிப்பது சிரமமாகிவிடும் என்றுதான் இரண்டு பதிவுகளாக வருகிறது.

சக்கரவியூகம் வந்து விட்டது. படித்துவிட்டு கமெண்டுங்கள்.

CA Venkatesh Krishnan said...

நன்றி வெங்கட்ராமன்.

நன்றி ராம்சுரேஷ். அப்டேட் நாளைக் காலைக்குள்

http://urupudaathathu.blogspot.com/ said...

present sir

சுரேகா.. said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்!

கதை சுவாரஸ்யமா போகுது சார்!
அடுத்த பாகம் எப்போ?

CA Venkatesh Krishnan said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
present sir
//

வாங்க அணிமா,

கதையப் படிச்சீங்களா?

//
சுரேகா.. கூறியது...
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்!

கதை சுவாரஸ்யமா போகுது சார்!
அடுத்த பாகம் எப்போ?
//


வாழ்த்துக்களுக்கு நன்றி சுரேகா.

அடுத்த மற்றும் முடிவுப் பகுதி நாளைக் காலையில்.