Friday, December 12, 2008

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - நிறைவுப் பகுதி

முதல் பகுதி

முதலில் இருந்த ஒரு இறுக்கமான சூழ நிலை இப்போது இல்லை. மிஷின் விவகாரத்தில் ஐஸ் ப்ரேக் ஆகி விட்டிருந்தது. அவள் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள். தினமும் லேட்டாகத் தான் கிளம்புவாள். அவள் வீடும் என் வீடும் ஒரே பகுதி என்பதால் என் வண்டியிலேயே ட்ராப் செய்து கொண்டிருந்தேன். கம்பெனியில் வேலை செய்யும் மற்ற மேனேஜர்களின் வீடு நேரெதிர் பகுதி என்பதால் என்னைத்தான் நம்பியிருந்தாள்.

அது ஃபாக்டரி. ஐ.டி. கம்பெனி அல்ல. ஃபாக்டரியில் பெண்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். அக்கவுன்ட்ஸ், பில்லிங், கமர்ஷியல் ஆகிய துறைகளில்தான் பெண்களைப் பார்க்க முடியும். அதுவும் அவர்களுடைய ட்ரஸ் சென்சைப் பார்த்தால் 70ஸ் 80ஸ் தான் ஞாபகத்திற்கு வரும். பெண்களுடன் பேசுவதே ஒரு டபூ. இந்த சூழலில் சுவேதா என்னுடன் பழகுவதை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தாலும், அவள் ஐ.டி. கம்பெனியிலிருந்து வந்திருக்கிறாள் (அப்படித்தான் எல்லாரிடமும் சொல்லியிருக்கிறாள்) என்பதால் தவறாக எண்ணவில்லை.

திடீரென்று ஒரு நாள் எனக்குப் பார்ட்டி கொடுக்கிறேன். நாளை அடையார் பார்க் போகலாம் என்று கூறினாள்.

===

ஏன் அடையார் பார்க்கிற்கு வந்தோம் என்று ஆகிவிட்டது. நானும் சைவம். அவனும் சைவம். பேசாமல் ஒரு நல்ல உடுப்பி ஹோட்டலுக்கு சென்றிருக்கலாம் என்று வாய் வரை வந்ததை விழுங்கிவிட்டேன். ஒருவேளை திண்ணிப் பண்டாரம் என்று நினைத்துவிட்டால்.

பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி பேசினோம். பிடித்தது, பிடிக்காதது, பார்த்தது, பார்க்காதது, கேட்டது கேட்காதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் தெரிந்து கொண்டோம்.

முதலில் பிடிக்காமல் வேலைக்குச் சேர்ந்த நான், இப்போதெல்லாம் எப்பொழுது ஃபாக்டரிக்குச் செல்லலாம் என்று அலைந்து கொண்டிருக்கிறேன். ஏன். எனக்கே தெரியவில்லை.

===

சி.டபள்யூ.ஏ. பரிட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் இதை முடித்து விட்டால் நேரடியாக மேனேஜராக ப்ரமோஷன் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டார் ஜி.எம். ஆனால் என்னால்தான் படிக்க முடிவதில்லை.ஏனென்று புரியவில்லை. எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று கஷ்டப்பட்டு படித்தும் பாதிதான் ஏறுகிறது. என்ன செய்வது. சுவேதாவைக் கேட்கலாம்.

===

எனக்கு சஜஷன் சொன்னவன் என்னிடமே கேட்கிறான். என்ன சொல்வது. அவன் மனது அலைபாய்வது எனக்கு நன்றாகத் தெரிந்தது. என் மேல் ஏதாவது ஈடுபாடு இருக்கலாமோ? இருந்தால் நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே. ஏன் இப்படி செய்கிறான். மனதிற்குள் நன்றாகத் திட்டினேன். சரி நாமே ப்ரபோஸ் செய்யலாம். அதையும் அவன் பாஸ் செய்தவுடன் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தேன். நிச்சயமாக மறுக்க மாட்டான். தேவையான இன்டிகேஷன்கள் கிடைத்துவிட்டன.

பாஸ் செய்தால் அவன் எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் தருவதாக ப்ராமிஸ் செய்தேன். என்ன ட்ரீட் என்று முடிவும் செய்துவிட்டேன்.

===

என்ன ட்ரீட் ஆக இருக்கும். ஏற்கனவே பெரிய ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து விட்டாள். அதைவிட பெரிய ட்ரீட் இருக்க முடியாது. ஏதாவது வாங்கித் தரப் போகிறாளா? அவளைச் சுற்றியே மனம் திரிகிறதே. ஒரு வேளை... அது தானா இல்லையா. கேட்டுப் பார்க்கலாமா? கேட்டு ஏதாவது ஏடாகூடமாகப் போய்விட்டால்? இருப்பதும் போய்விட்டால்...

குழப்பமாக இருந்தது. சரவணா.. மனதை ஒருமுகப் படுத்து. படி. பாஸ் செய். பிறகு உனக்கே தெரிந்து விடுகிறது. எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

ஜி.எம். கூடுதல் லீவும் கொடுத்து விட்டார். மொத்தமாக 25 நாட்கள். தேர்வு நாட்களையும் சேர்த்து. செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஃப்ரென்ட் வீட்டிற்குப் படிக்கப் போய்விட்டேன். அங்கிருந்தே எக்சாம் எழுதினேன். நன்றாக எழுதி முடித்துவிட்டேன்.

சுவேதா கேட்ட போது, சுமார்தான் என்று உதட்டைப் பிதுக்கினேன். நல்ல ரிசல்ட் வந்தால் சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று.

===

சரவணன் தேர்வெழுத லீவ் போட்டிருக்கும் போது என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. பையன் யு.எஸ்.-ல் இருக்கிறான். நான் அங்கே சென்ற பிறகு இன்ஸ்ட்ருமென்டேஷனிலேயே வேலை செய்யலாம்.

யாரும் என்னைக் கேட்கவில்லை. சம்பிரதாயத்திற்குக் கேட்ட போது மவுனமாக இருந்தேன். சம்மதம் என்று எடுத்துக் கொண்டார்கள்.

என்ன முடிவு செய்வது. சரவணனுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த ட்ரீட் என்னாவது. அவனே சுமாராக எழுதியிருக்கிறேன் என்று சோகமாகச் சொன்னானே. பிறகு எப்படி ப்ரபோஸ் செய்வது? அப்பா வேறு நிறைய ஆசை வைத்திருக்கிறார். தங்கை வேறு இருக்கிறாள். எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்தில் இது போல் எதுவும் நிகழ்ந்ததில்லை. இப்படி ஏதாவது செய்து ஏடாகூடமாக ஆகி விட்டால்? நினைக்கவே பயங்கரமாக இருந்தது.

அவன் நன்றாக எழுதவில்லை என்று சொன்னது ஆறுதலைத் தந்தது. ஃபெயிலாகிவிட்டால் ட்ரீட் என்று ப்ரபோஸ் செய்ய முடியாது.

அப்பாவின் முடிவுக்குக் கட்டுப்படுவது என்று முடிவெடுத்தேன்.

===

சுவேதா திருமணத் தகவலைச் சொன்ன போது என்ன செய்வதென்றே தோன்றவில்லை. இப்போது சொல்லிவிடலாமா? வேண்டாம் என்று முடிவெடுத்தேன். திருமண நாளன்றுதான் எனக்கு ரிசல்ட் வருகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றேன்.

===

திருமணத்திற்கு முன் வேலையை ரிசைன் செய்துவிட்டேன். மணப்பெண் கலராகவும், பூசினாற்போலவும் இருக்கவேண்டுமாம். ஆகவே வீட்டிலேயே ஈட்டிங் ட்ரீட்மென்ட்.

திருமணம் காலையில் முடிந்தது. மாலையில் ரிசப்ஷன். பரிசுடன் வந்திருந்தான் சரவணன்.

===

மேரேஜ் கிஃப்டைக் கொடுத்துவிட்டு பாஸ் ஆன செய்தியையும் தெரிவித்துவிட்டு, உங்கள் மனைவி நான் பாஸ் செய்தால் ஒரு ட்ரீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று சுவேதாவின் கணவனிடம் கூறினேன். அவன் மையமாகச் சிரித்தான். சுவேதாவிடமிருந்து வந்த ரியாக்ஷன் என்ன என்று என்னால் கணிக்க முடியவில்லை. கிஃப்ட் கொடுப்பதற்காக மற்றவர்கள் அவசரப் படுத்தினார்கள். சாப்டுட்டு போங்க என்றான் மணப்பையன்.

(முடிந்தது)
* * * * *

இது ஃபர்ஸ்ட் பெர்சன் நேரேடிவ் ஸ்டைலில் எழுதப்பட்டது. உரையாடல்களே இருக்காது. நடை எப்படி இருக்கிறது என்பதையும் சற்றுத் தெரிவியுங்கள்.

21 comments:

ரவி said...

நல்லாருக்கு !!!!!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் இங்கே ரெண்டாவது

http://urupudaathathu.blogspot.com/ said...

இருங்க படிச்சிட்டு வந்துடுறேன் AX

நசரேயன் said...

இரண்டு பாகமும் அருமை

சுரேகா.. said...

அருமையான நடை
எதிர்பாராத , ஆனால் யதார்த்தம் நிறைந்த முடிவு..!

வாழ்த்துக்கள்!

சுரேகா.. said...

அருமையான நடை
எதிர்பாராத , ஆனால் யதார்த்தம் நிறைந்த முடிவு..!

வாழ்த்துக்கள்!

CA Venkatesh Krishnan said...

நன்றி ரவி !

வாங்க அணிமா, படிச்சிட்டீங்களா?

நன்றி நசரேயன் !

கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சுரேகா !

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்கு பல்லவன்....

வாழவந்தான் said...

///இதுதான். வாய்ப்பு இருக்கும் போதே பயன் படுத்திக் கொள்ளுங்கள், தயங்காதீர்கள்.
இது ஃபர்ஸ்ட் பெர்சன் நேரேடிவ் ஸ்டைலில் எழுதப்பட்டது///

கதையின் யதார்த்தம் மற்றும் நடை அழகு

CA Venkatesh Krishnan said...

வாங்க ஆதவன்.

//
நல்லாத்தான் போகுது..சட்டுபுட்டுன்னு ரெண்டு பேருக்கும் கல்யாணத்த பண்ணி குழந்த குட்டின்னு சந்தோஷமா வைக்க பாருங்க ஆமா சொல்லிபுட்டேன்...
//

நேத்து இப்படி சொல்லியிருந்தீங்க. இதப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

வெங்கட்ராமன் said...

கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது. சீக்கிரமே முடித்து விட்டது போல் இருந்தாலும் நன்றாகவே இருந்தது.

CA Venkatesh Krishnan said...

//
வாழவந்தான் கூறியது...
கதையின் யதார்த்தம் மற்றும் நடை அழகு
//

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி வாழவந்தான் !

CA Venkatesh Krishnan said...

//
வெங்கட்ராமன் கூறியது...
கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது. சீக்கிரமே முடித்து விட்டது போல் இருந்தாலும் நன்றாகவே இருந்தது.
//

நன்றி வெங்கட் ராமன்,

இதற்கு மேல் இழுத்தால் தொடர்கதை என்று சொல்லிவிடுவார்களே ! ! ..

Unknown said...

இளைய பல்லவன்

யதார்த்தமான
முடிவு.இயற்கையானதும் கூட. நல்ல சஸ்பென்ஸ்..இலவு காத்த கிளி இரு பக்கமும்.

படித்தவர்கள் கூட open talk செய்வதில்லை.

சுஜாதாவின் "மையமாக தலையாட்டினான் " எல்லோரும் பயன்படுத்துகிறார்கள்.

அடுத்து

"எங்கோ இருந்து வந்த.............. எனவே அடுத்தவருக்குத்"

எதுக்கு இந்த கோனார் நோட்ஸ்?

வாசகர்கள் நீங்கள் சொல்லாமலேயே உணரவேண்டும்.

தன்மை நடை ந்ன்றாக உள்ள்து.

அது சரி நம்ம வலைக்கு வந்து நம்ம கதைகளை (வாரண ஆயிரம்,ஜோரா ஒரு வாட்டி கை,மீண்டும் ஒரு காதல்)
படித்து விமர்சனம் செய்யப்போறீங்க?

CA Venkatesh Krishnan said...

// கே.ரவிஷங்கர் கூறியது... //

தீர்க்கமான அலசலுக்கு மிக்க நன்றி.

//
எதுக்கு இந்த கோனார் நோட்ஸ்?
//

உண்மைதான். இந்த முடிவு, முதலில் எனக்கே பிடிக்க வில்லை. பிறகு அதை ஜஸ்டிஃபை செய்ய வேண்டுமென்றுதான் இந்தப் பின்னுரை எழுதப்பட்டது.
//
படித்து விமர்சனம் செய்யப்போறீங்க?
//

உங்களுடைய சிறுகதை எழுதுவது எப்படி என்பதை முதலிலேயே படிக்கவில்லையே என்று வருந்துகிறேன். உண்மையான விமர்சனங்கள் எழுத்தாளனைப் பட்டை தீட்டுகின்றன.

நிச்ச்யமாக வந்து
நிதானமாகப் படித்து
நிறைய விமர்சிக்கிறேன் :))

மீண்டும் நன்றி.

Unknown said...

//இந்த முடிவு, முதலில் எனக்கே பிடிக்க வில்லை//

எனக்கு அதிர்ச்சி. ஏன் இந்த முடிவு பிடிக்க வில்லை சார்? நல்லாத்தானே இருக்கு?

CA Venkatesh Krishnan said...

ரவிஷங்கர் சார்,

ஒரு வாசகனாக எனக்குப் பிடிக்க வில்லை. எனவே எழுத்தாளனை இன்ஃப்ளூயன்ஸ் செய்து பின்னுரை எழுத வைத்தேன்.!

எழுத்தாளன் வாசகனால் இன்ஃப்ளுயன்ஸ் ஆகக் கூடாது என்பது இதன் மூலம் நான் கற்ற பாடம்!

சரிதானே..

Unknown said...

சார்,
கிழ் உள்ள மாதிரி எப்படி வகைப்படுத்துகிறீகள். எங்கு, எப்படி Steps சொல்லவும்.


இடுகை வகைகள்
சக்கர வியூகம் (11)
நட்சத்திர வாரம் (10)
சிறுகதை (6)
கேள்வி (5)
பணம் (4)
வானவில் (3)
உதவி (2)
சுய புராணம் (2)
சொந்தக் கதை (2)
தமிழ் (2)
திரை விமர்சனம் (2)
பதிவுலகம் (2)
பொருளாதாரம் (2)

CA Venkatesh Krishnan said...

சார்,

நானே இது போல் கேட்டிருக்கிறேன் என்னுடைய வேறு வலைப்பதிவில் !:)

செய்முறை கீழே தரப்பட்டுள்ளது.

முதலில் ப்ளாக்கர் அக்கவுண்டில் லாகின் செய்யுங்கள்.

லே-அவுட் டேப் - ஐ க்ளிக்குங்கள்

லேஅவுட் வரும்

ஆட் எ கேட்ஜட் க்ளிக்குங்கள்.

அதில் 'லேபிள்' என்று ஒன்று இருக்கும். அதன் எதிரே '+' குறி இருக்கும். அதை க்ளிக்குங்கள்.

இப்போது ஒரு விண்டோ திறக்கும். அங்கே, அகர வரிசையிலோ, எண்கள் வரிசையிலோ செலக்ட் செய்ய ரேடியோ பட்டன் இருக்கும்.

அதற்கு தமிழில் தலைப்பு வைக்கலாம். பிறகு சேவ் செய்யுங்கள்.

அதை எந்த ஆர்டரில் வைக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த ஆர்டரில் ட்ராக் செய்யுங்கள்.

அவ்வளவுதான். முடிந்ததா என்பதைத் தெரிவியுங்கள்.

நன்றி.

Unknown said...

சார்,

உதவிக்கு நன்றி. It is a laborious job for me because i have given three lables for each of my published articles. I need to delete the other two of each blog and categorise.

Anyhow Thanks

Anonymous said...

நல்ல சப்ஜெக்ட். நல்லா எழுதியிருக்கீங்க.