Saturday, December 13, 2008

குழந்தை வளர்ப்பு - ஆறு வித்தியாசங்கள்

குழந்தை வளர்ப்பதில் முதல் குழந்தை வளர்ப்பதற்கும் இரண்டாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைகளை வளர்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் சாம்பிளுக்கு ஆறு.


ப்ரெக்னென்சி கன்ஃபர்ம் ஆகும் போது

ரங்கு: பாத்துமா. மெதுவா. தல சுத்துதா? டாக்டர் கிட்ட போலாமா? நான் வேண்ணா லீவு போட்டுடட்டுமா?

ரங்கு: தல சுத்துதா? கொஞ்சம் உக்காந்தா சரியா போயிடுது. இதுக்கெதுக்கு டாக்டர். இன்னிக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங். கண்டிப்பா லீவு போட முடியாது. வேணுண்ணா, நாளைக்கு சாயந்திரம் நீயே போயிட்டு வந்துடு.


டெலிவரிக்குப் பின்

ரங்கு: குழந்தையை யாரும் தூக்க விடாதே, நீயே தூக்கு. நானா. அய்யோ எனக்கு பிடிக்கத் தெரியாதே. இப்படி அழுதுகிட்டே இருக்கே, ஏதாவது குடேன்.

ரங்கு: குழந்தைய நானே வச்சிக்கிறேன். பெரியதுக்கு நீதான் வந்து சாப்பாடு போடணுமாம். அழுதா ரெண்டு தடவ ஆட்டினா சரியா போயிடுது.


வளரும் போது - மூன்று வயது வரை

தங்கு: ட்ரிங்..ட்ரிங்... ஏங்க (ஆப்ஷனல்) குழந்த அழுதுகிட்டே இருக்குங்க. என்ன பண்றதுன்னே தெரியல. உடனே சைல்டு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போணும். கெளம்பி வாங்க.

ரங்கு: சரி உடனே வரேன்.


ரங்கு: காலைல சின்னது அழுதுகிட்டே இருந்துதே என்னாச்சு.

தங்கு: அதுக்கு பொழுது போலன்னு அழுது. ரெண்டு அடி குடுத்தேன். நிப்பாட்டிடுச்சு.



ஸ்கூலுக்கு அனுப்பும் போது

தங்கு: ஏங்க (ஆப்ஷனல்), குழந்தைய நல்லா பாத்துக்குவங்களா? அதுக்கு மூச்சா வருதுன்னு கூட சொல்லத் தெரியாதே. நான் வேண்ணா விட்டுட்டு அங்கேயே வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்துரவா? ஸ்கூல் போமாட்டேன்னு அழுதே. அங்க அடிச்சிருப்பாங்களோ. கம்ப்ளெயின்ட் பண்ணலாமா? இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பல.



ரங்கு: நேத்தி ஸ்கூல் போமாட்டேன்னு சின்னது சொன்னதே என்னாச்சு.

தங்கு: சும்மா? வீட்ல் ஒக்காந்து டோரா பாக்கணும்னு ஆக்ஷன் பண்ணுது. வெரட்டி உட்டுட்டேன்.



காலேஜ் அட்மிஷன்

ரங்கு: நல்ல காலேஜ்ல அலஞ்சு திரிஞ்சு அட்மிஷன் பண்ணனும். நாம கேக்கற சப்ஜக்ட் கெடைக்கறதுக்கு கொஞ்சம் செலவு செஞ்சா என்ன?

ரங்கு: கெடச்ச காலேஜ்ல கெடச்ச சப்ஜக்ட் சூஸ் பண்ணு. பரவால்ல. எல்லாமே நல்ல சப்ஜக்ட்தான். இல்லாட்டி ஏன் அதை வைக்கப் போறாங்க. நாம படிக்கறதுல தான் இருக்கு.


கல்யாணம்

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

நார்மல் டெக்ஸ்டில் இருப்பது முதல் குழந்தை டயலாக். இடாலிக்ஸில் இருப்பது இரண்டாவது குழந்தை டயலாக்.

இதன் மூலம் கிடைக்கும் நீதி. முதல் குழந்தைக்குக் கிடைக்கும் கவனிப்பு, இரண்டாம் குழந்தைக்குக் கிடைப்பதில்லை. முதலாவது ரொம்ப ரொம்ப ஓவர், அடுத்தது ரொம்ப ரொம்ப கம்மி.

நீங்க மொதல் குழந்தையா ரெண்டாவது (அ) அதற்கு மேற்பட்ட குழந்தையா?

16 comments:

கோவி.கண்ணன் said...

நல்லா சொல்லி இருக்கிறீர்கள், அனைத்தும் உண்மைதான். 2 ஆவது குழந்தைக்கே இப்படி ஆகுது என்றால் பத்தாவது ப்தினொன்றாக பிறந்தவர்களையெல்லாம் எண்ணிக்கை கணக்காக வைத்திருந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுது.

நல்ல பதிவு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல சுத்துதா? கொஞ்சம் உக்காந்தா சரியா போயிடுது. இதுக்கெதுக்கு டாக்டர். //


மசம்சன்னு நிக்காம சோத்தப் போடு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பத்தாவது ப்தினொன்றாக பிறந்தவர்களையெல்லாம் எண்ணிக்கை கணக்காக வைத்திருந்திருப்பார்களோ என்று //



ஒரு பிஸிணஸ் பாக்கறவங்களூக்கும்,

கஜினி மாதிரி நூறு பிஸிணஸ் பண்றவங்களுக்கும் உள்ள வித்தியாசம்.




பொண்ணுங்கள்ள பெரிசு வீட்டை பார்த்துக்கும். பெரிசு ரெண்டும் குடும்பத்த விரிவாக்குவதில் கவனம் செலுத்தும்.

துளசி கோபால் said...

அனுபவம் பேசுது:-))))

நான் வீட்டுலே கடைசி(-:

ஷைலஜா said...

வித்யாசமா நல்லா சொல்லி இருக்கீங்க..நான் வீட்டுக்கு ஃபஸ்ட்!

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம் அனுபவம் பேசுது...

நான்தான் வீட்ல கடைசி.. :-)

CA Venkatesh Krishnan said...

நன்றி கோவி.கண்ணன்,
உண்மைதான். இப்பதான் ஒண்ணுக்கு மேல பார்ப்பதே கடினாமாக இருக்குதே.

நன்றி சுரேஷ்,
இன்னும் கூட இழுக்கலாம் !!
//
பொண்ணுங்கள்ள பெரிசு வீட்டை பார்த்துக்கும். பெரிசு ரெண்டும் குடும்பத்த விரிவாக்குவதில் கவனம் செலுத்தும்.
//

நச்.

வாங்க துளசி மேடம். நானும் தான்:((

வாங்க ஷைலஜா. கங்க்ராட்ஸ் ஃபார் ஸ்பெஷ்ல் ட்ரீட்மென்ட்.

வாங்க ஆதவன். நானும்தான்:))

Anonymous said...

சுபா கூறியது,
நன்றாக உள்ளது.இரண்டாவது குழ்ந்தை தானகவே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டடுவிடும்.
முதல் குழ்ந்தைக்கு அதிக கவனம் தேவையில்லை என்பது வள்ர்ந்தபின் தான் தெரிகிறது.
தாங்கள் குழ்ந்தை வளர்ப்பில் நல்ல தேர்ச்சி அடைந்தவரா?........................

CA Venkatesh Krishnan said...

//
சுபா கூறியது,

நன்றாக உள்ளது.இரண்டாவது குழ்ந்தை தானகவே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டடுவிடும்.
முதல் குழ்ந்தைக்கு அதிக கவனம் தேவையில்லை என்பது வள்ர்ந்தபின் தான் தெரிகிறது.
//

வாங்க சுபா.

இதுதான் அனுபவப் பாடம்.

//
தாங்கள் குழ்ந்தை வளர்ப்பில் நல்ல தேர்ச்சி அடைந்தவரா?........................
//

இல்லைன்னா இவ்வளவு விரிவா எழுத முடியுமா :))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லா இருக்கே இது...

துளசி கோபால் said...

குழந்தைங்க, பெரியவர்களைப் பார்த்துக் கத்துக்கறதைவிட இன்னொரு குழந்தையைப் பார்த்துச் சட்னு கத்துக்கும். அதுக்குத்தான் இங்கே நியூஸியில் ஒன்னாப்பு & ரெண்டாப்பு, ரெண்டாப்பு & மூணாப்பு ன்னு கம்பைண்டு க்ளாஸா வச்சுருக்காங்க.

ரெண்டாவது குழந்தைக்கு ரோல் மாடல் இருக்கு. முதல் குழந்தை, தானா முட்டி மோதியில்லே கத்துக்கணும்.

CA Venkatesh Krishnan said...

//
முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
:) நல்லா இருக்கே இது...
//


நன்றி அக்கா :)))

CA Venkatesh Krishnan said...

//
துளசி கோபால் கூறியது...
அதுக்குத்தான் இங்கே நியூஸியில் ஒன்னாப்பு & ரெண்டாப்பு, ரெண்டாப்பு & மூணாப்பு ன்னு கம்பைண்டு க்ளாஸா வச்சுருக்காங்க.
//

இது கொஞ்சம் குழப்புதே,

ஒண்ணாப்பு, ரெண்டாப்பு சரி. ரெண்டாப்பு, மூணாப்புன்னா,

ஒண்ணு, ரெண்டு, மூணு - மூணையும் ஒண்ணா ஒக்கார வச்சிருவாய்ங்களோ. ஒரே வகுப்புல மூணு வருஷமா? நல்லா இருக்கே:)))

//

ரெண்டாவது குழந்தைக்கு ரோல் மாடல் இருக்கு. முதல் குழந்தை, தானா முட்டி மோதியில்லே கத்துக்கணும்.
//

இதுதான் நம் குணாதிசயங்களை நிர்ணயிக்கிறது. இதைப் பற்றிய தனிப்பதிவு விரைவில்.

துளசி கோபால் said...

இதுலே என்ன குழப்பம்?

வகுப்பு அறைகளுக்கு எண்தான் கொடுப்பாங்க.

ரூம் நம்பர்ஸ்.

எந்த அறைக்குள்ளே போனாலும் கம்பைண்டா ரெண்டும் சேர்ந்தும் இருக்கும். நாலு & மூணு ஒரு ரூம் என்றால் மூணு & ரெண்டு ஒரு ரூம்.

துளசி கோபால் said...

ஆரம்பப் பள்ளியில் மொத்தம் 6 வருசம்.

ஆனா நாலாப்புதான் கடைசி வருசம்.

குழப்பறேனா?

முதல் ரெண்டு வருசம் J1, J2. அதுக்குப் பிறகு மூணாம் வருசம் ஸ்டேண்டர்டு ஒன்.

ஐயோ ஐயோ......

CA Venkatesh Krishnan said...

//
துளசி கோபால் கூறியது...
இதுலே என்ன குழப்பம்?
//

//
துளசி கோபால் கூறியது...

குழப்பறேனா?
//

மேடம், இதப் பத்தி தனியா ஒரு பதிவப் போட்டு எங்க சந்தேகத்தையும், எ(உ)ங்க குழப்பத்தையும் தீர்த்து வைங்க:)))