நாம் ஏன் பதிவெழுதுகிறோம்? நமது எண்ணத்தைப் பதிவு செய்கிறோம். நமது கருத்துச் சுதந்திரத்தைப் பயன் படுத்துகிறோம். சரி நாம் எழுதிவிட்டோம். அதனால் என்ன பயன்? நான்கு பேர் படித்தார்களா? அவர்கள் நமது கருத்துடன் ஒத்துப் போகிறார்களா? நமது பார்வையும் சிந்தனையும் அனைவருக்கும் பிடித்திருக்கிறதா? இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சரி இதெல்லாம் எப்போது தெரியும். நாலு பேர் இந்தப் பக்கம் வர வேண்டும். வந்து படிக்க வேண்டும். படித்து பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் நம் சிந்தனை சரியா இல்லையா என்பது தெரிய வரும்.
இன்றைய தமிழ்மணத் தகவலின் படி,
மொத்தப் பதிவுகள் : 4000
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 159
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் : 1643
ஆக நாலாயிரம் பேர் எழுதுவதற்கு இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 159 பதிவுகள் வெளி வருகின்றன. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சரா சரியாக, 6.67 பதிவுகள். இது இந்தியப் பகலில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் இருக்கும்.
இப்படி இருக்கும் போது நமக்குத் தேவை நம் பதிவைப் பார்த்து மக்கள் கருத்துக் கூற வேண்டும். கருத்து தெரிவிக்காவிட்டாலும் எட்டியாவது பார்க்க வேண்டும். இதற்குத் தேவை அருமையான தலைப்பு.
அவ்வைப் பிராட்டியார் இப்பொழுது தமிழ்ப்பதிவுலகத்தில் இருந்திருந்தால் இவ்வாறு பாடியிருப்பார்.
பெரியது கேட்கின் வரிவடிவேலோய், பெரிது பெரிது பதிவுலகம் பெரிது.
அதனினும் பெரிது, தமிழ்மணத் திரட்டி.
அதனினும் பெரிது அவற்றில் பதிவுகள்.
பதிவுகள் வாழ்வது அதன் தலைப்பாலே.
(கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ் பண்ணிக்குங்க:) )
நாம் என்ன எழுதுகிறோம் என்பது பெரிய விஷயமில்லை. எதைப் பற்றி எழுதுகிறீர்கள் என்பதும் முக்கியமில்லை. ஆனால் மிக முக்கியமானது எழுதுவதற்கு வைக்கப் படும் தலைப்புதான்.
எண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம் என்பது - பழமொழி.
எவ்வளவு எழுதினாலும் தலைப்பே முக்கியம் - இது பதிவுலக மொழி
நல்ல பதிவுகளெல்லாம் சூடாவதில்லை. ஆனால் நல்ல தலைப்புகள் நிச்சயம் சூடாகி விடும்.
தலைப்பின் வகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வித்தியாசமான தலைப்பு
உதாரணத்திற்கு, தற்போது கார்க்கி 'டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*^' இப்படி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
உள்ளே போய்ப் படித்தால் அவருக்கும் ஆசிரியருக்கும் நடந்த மேட்டரை எழுதியிருக்கிறார்.
இதற்கு 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்றோ,
'இலக்கு' என்றோ,
'நானும் ஆசிரியரும்' என்றோ,
'அடிக்காத வாத்தியார் அடித்த கதை' என்றோ தலைப்பு வைத்திருக்கலாம்.
ஆனால் இவையெல்லாவற்றையும் விட இந்தத் தலைப்பு வித்தியாசமாக இருக்கவே, 'அட என்னமோ இருக்கு போல இருக்கே' என்று எட்டிப் பார்க்கத் தூண்டும்.
இப்படி நிறைய வித்தியாசமான தலைப்புகளை யோசிக்க வேண்டும். சம்பந்தம் இருக்க வேண்டும் என்பதில்லை. கடைசியில் ஒரு வரியில் சேர்த்து விடலாம்.
காரசாரமான தலைப்பு
இன்றைக்கு நிறைய 'கல்லா கட்டும்' (விளக்கத்திற்கு பழமை பேசியைத் தொடர்பு கொள்ளவும்) தலைப்பு இந்த வகையைச் சார்ந்ததுதான். உதாரணத்திற்கு அதிஷாவின் 'முஸ்லீம்கள் குறித்த பதிவு. அதுவும் டிசம்பர் ஆறாம் தேதி.
சட்டக் கல்லூரி வன்முறை, மும்பாய் பயங்கரம் ஆகிய நாட்டு நடப்புகளை பற்றி, கார சாரமான உணர்ச்சி மயமான தலைப்பு வைக்க வேண்டும். உள்ளேயும் ஓரிரு இடங்களில் அவ்வாறு எழுத வேண்டும்.
நீங்கல்லாம் ***க்குப் பொறந்தவங்களா? என்று ஒரு பதிவர் கேட்டிருந்தார். வாடா, போடா, *&^%#@! போன்ற வார்த்தைகள் காரத்தைக் கூட்டும்.
நான் இதே மும்பை பயங்கரத்திற்கு ஒரு பதிவிட்டேன். தலைப்பு 'தேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்'. எவ்வளவு உப்பு சப்பில்லாமல் இருக்கிறது பார்த்தீர்களா.
கேள்வித் தலைப்பு
இது தான் மிக முக்கியமான வகைத் தலைப்பு. பெரும்பாலான இடுகைகள் இந்த வகையைச் சார்ந்தவை. நாம்தான் தருமி (பதிவர் அல்ல, திருவிளையாடல் தருமி) வகையினராயிற்றே. நமக்குத்தான் கேள்வி கேட்கவும் தெரியும். கேள்வி கேட்பவர்களையும் பிடிக்குமே. ஆகவே, சரியான கேள்விப் பதிவு நிறைய போக்குவரத்துக்கு வழி செய்யும்.
உதாரணமாக இட்லி வடை யார்? என்ற பதிவு. இது பதிவுலகத்திற்கு மிகத் தேவையான பதிவு. அதே போல், சாரு மறை கழன்றவரா? இந்து மதம் எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விப் பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெரும்.
நான் கூட 'ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?' என்ற ஒரு பதிவை எழுதினேன். நல்ல ரெஸ்பான்ஸ்.
இதைப் போல் நிறைய உள்ளது. போகப் போகத்தான் தெரியும். நான் ஒரு குழந்தைப் பதிவன். ஆகவே, சீக்கிரம் கற்றுக் கொண்டு விடுவேன். நீங்களும் அப்படித்தானே?
இப்போது எல்லாரும் கேட்பதைப் போல் தம்ஸ் அப்பில் ஒரு குத்து எலியை வைத்து குத்துங்க என்று கேட்டுக் கொண்டு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
இப்ப நீங்க சொல்லுங்க. நான் இந்தப் பதிவிற்கு வைத்திருக்கும் தலைப்பு சரியா? இல்லைன்னா இன்னும் கொஞ்சம் வித்தியாசமா வைத்திருக்கலாமா?
மேற்கொண்டு பின்னூட்டத்தில் தொடர உங்களை அழைக்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.
27 comments:
இட்லி வடை யார்?
//
இந்த தலைப்புல எழுதி அதிர வெச்சம்ல.இந்த பதிவினால் எனக்கு ஒரு வாசகர் வட்டம் கிடைத்தது, அதே அளவுக்கு வாசகர் வட்டம் இழந்தும் இருப்பேன்.ஏனென்றால பதிவின் தரம் அப்படி
உதாரணமாக இட்லி வடை யார்? என்ற பதிவு. இது பதிவுலகத்திற்கு மிகத் தேவையான பதிவு. அதே போல், சாரு மறை கழன்றவரா? இந்து மதம் எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விப் பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெரும்.
your article is very useful!!!
தலைப்பு ஒ.கேதான் பட் இன்னும் நீங்க கொஞ்சம் டெரரா யோசிச்சிருந்தா ச்சூடான இடுகைக்கு தூங்கிட்டு போயிருக்கும் :)))
பழமைபேசி விளக்கம்பேசி ஆக்கிப்புட்டீங்க தல! பதிவு நல்லா இருக்கு!! நாமளும் நீங்க சொன்னா மாதிரி பல தலைப்புகளப் போட்டம்ல.... புலிகளைச் சீண்டாதே! 2500 வருகை ரெண்டு நாள்ல! இஃகி!ஃகி!!
நல்ல பதிவு. நட்சத்திர வாழ்த்துக்கள் இளைய பல்லவன் அவர்களே.
//
டெரரா யோசிச்சிருந்தா...
//
அதானே, இது மாதிரி யோசிக்க இன்னும் கொஞ்ச நாள் போகணும் தலைவா.
இதுவே நான் டெரரா யோசிச்சதுக்கப்புறம் கிடைச்ச தலைப்புங்க.
முதல்ல வச்ச தலைப்பு, 'தலைப்பின் மகத்துவம்' :((
இது எப்படி இருக்கு.
வாங்க குடுகுடுப்பை.
வரவும் செலவும் கலந்ததுதானே வாழ்க்கை. நீங்க சொல்றது போல இது கத்திமேல் நடப்பது மாதிரி.
ஜாக்கிரதையா தலைப்பு வைக்கணும்.
நன்றி தேவன் மயம்
(உங்க பேரை சரியாகச் சொல்லியிருக்கிறேனா?)
//
பழமைபேசி கூறியது...
பழமைபேசி விளக்கம்பேசி ஆக்கிப்புட்டீங்க தல
//
ஆமாங்க, நீங்கதான் பதிவுலகத்தின் 'தெசாரஸ்' ஆச்சே.
சரிதானுங்களே ;-))
நன்றி அமரபாரதி
நடசத்திர பதிவு வாழ்த்துக்கள்
நட்சத்திர பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் இளைய பல்லவனுக்கு வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பணி..
மிக்க நன்றி நசரேயன்.
மிக்க நன்றி சதீசுகுமார்
//இப்படி நிறைய வித்தியாசமான தலைப்புகளை யோசிக்க வேண்டும். சம்பந்தம் இருக்க வேண்டும் என்பதில்லை. கடைசியில் ஒரு வரியில் சேர்த்து விடலாம்//
என்னங்க தூக்குற மாதிரி தூக்கி அமுக்கிட்டிங்களே? நான் செஞ்சது சரியா தப்பா????????????????
நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துகள். நட்சத்திர பதிவர் ஆவதற்கு எங்க அப்ளை பண்ணனும்? கொஞ்சம் சொல்லுங்க..
வாங்க கார்க்கி,
//
என்னங்க தூக்குற மாதிரி தூக்கி அமுக்கிட்டிங்களே? நான் செஞ்சது சரியா தப்பா????????????????
//
என்ன இப்படி கேட்டுட்டீங்க. உங்க பதிவப் பாத்ததுனால வந்த பதிவு இது. இப்ப நீங்க சொல்லுங்க. நீங்க செஞ்சது சரியா, தப்பா?;-)
//
நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துகள். நட்சத்திர பதிவர் ஆவதற்கு எங்க அப்ளை பண்ணனும்? கொஞ்சம் சொல்லுங்க..
//
ரொம்ப நன்றிங்க.
என்னங்க நீங்க, சூரியனுக்கே டார்ச் லைட்டா? கார்க்கிக்கு நட்சத்திரமா? நட்சத்திரமெல்லாம் என்ன மாதிரி அட்ரஸ் தேவைப்படறவங்களுக்குதான். உங்களுக்கு அல்ல.;-)). எனினும் விரைவில் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
ஆனா இது எப்படின்னு எனக்கே தெரிலீங்க. ஒரு மெயில் வந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி பரிசல்னு நினைக்கிறேன். இது மாதிரி மெயில் வந்ததுன்னு விளையாடினாங்களே, அப்படியோன்னு நினைச்சேன். அதனாலேயே கடைசி வரைக்கும் யாருக்கும் சொல்லலீங்க:)
கடைசீல பாருங்க நம்ம போட்டோவோ பதிவோ கூட உடனே தெரியல. பழமை பேசிக்கு அப்புறம் திடீர்னு வேற யாருதோ வந்துடுச்சு. அப்புறம் மெயிலெல்லாம் அனுப்பி.. அது ஒரு ட்ராக். கடைசி பதிவில் இந்த அனுபவம் இடம் பெறும்.
தல முக்கியமுன்னு நீங்க சொல்றது சரிதான் தல.
ஆஹா,
தலயா..
இது எனக்கே கொஞ்சம் ஓவரா படுதே.
//***க்குப் பொறந்தவங்களா? என்று ஒரு பதிவர் கேட்டிருந்தார். வாடா, போடா, *&^%#@! போன்ற வார்த்தைகள் காரத்தைக் கூட்டும்.//
என்ன தல இதுல எதும் உள்குத்து இல்லையே?????
நீங்க சொன்னா சரிதான் தல....இனிமே பதிவ எழுதிட்டு உங்கிட்ட தலைப்பு கேட்ககிறேன் :-)
//நட்சத்திர பதிவர் ஆவதற்கு எங்க அப்ளை பண்ணனும்? கொஞ்சம் சொல்லுங்க..//
எனக்கும் சொல்லுங்க பல்லவன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..ஒன்னு வாங்கிபுடனும்
வாங்க ஆதவன்,
தலன்னே முடிவு பண்ணிட்டீங்களா.
சரி சரி இன்னும் ஒரு வாரத்துக்குத்தானே:)
மேல ஆயில்யனோட கருத்தைப் பாருங்க. டெரரா யோசிக்கச் சொல்றார். நம்மளால முடியற காரியமா?:((
thala title pathathum engal THALA - AJITH pathina matternu ulla vantha...
neenga romba kusumbu thaan sir...
பதிவுகள் வாழ்வது அதன் தலைப்பாலே.
உண்மை ஐயா, பல நேரங்களில் படிக்க தலைப்பே காரணம்.
எண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம் என்பது - பழமொழி.
எண்சான் பதிவிற்கும் சிரசே ப்ரதானம்
வாங்க கலீல் பாஷா,
தலைப்பைப் பாத்துதானே வந்தீங்க. இதுதான் இந்தப் பதிவோட நோக்கமே. :))
SUREஷ் கூறியது...
பதிவுகள் வாழ்வது அதன் தலைப்பாலே.
//
உண்மை ஐயா, பல நேரங்களில் படிக்க தலைப்பே காரணம்.
//
இதுதான் எனக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ஞானோதயம்.;-))
23.8.2006 தேதியன்று என்னுடைய பல்சுவைப் பதிவில் தலைப்பைப் பற்றி நான் எழுதியது:
தலைப்பை நன்றாகப் போடு - தானாக வருவார்கள்
எதை நீ படித்தாய்
அவர்கள் படிப்பதற்கு?
எதற்கு நீ மறுமொழிந்தாய்
அவர்கள் உனக்கு மறுமொழிவதற்கு?
எதற்கு நீ ஒழுங்காகப் பின்னூட்டம் இட்டாய்
அவர்கள் உனக்கு பின்னூட்டம் இடுவதற்கு
எத்தனைபேர் பதிவுகளைக் காணவேண்டி ஆசைப்பட்டாயோ
அத்தனை சீக்கிரம் உன் பதிவுகள் பரணுக்குப் போவிடும்
உன்னுடைய எந்தப் பதிவு முதல் பக்கத்தில் இருக்கிறதோ
அது சில மணி நேரத்தில் அடுத்த பக்கத்திற்குபோய்விடும்
அதற்கு அடுத்த நாள் பரணுக்குள் போய் விடும்
பிறகு பூமிக்குள் புதையுண்டு போய்விடும்
பதிவை மட்டும் இடு
படிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்காதே
நாளென்றுக்கு நூறு பதிவுகள் என்றால்
நானே அவதரித்தாலும் படிக்க முடியமா?
தலைப்பை மட்டும் நன்றாகப் போடு
தானாக வருவார்கள்
பதிவை மட்டும் இடு
படிக்கப்படுமென்று எதிர்பார்க்காதே
இதுவே வலைப்பூக்களின் (Blogs) நியதியும்
வலைஞர்களின் குணாம்சமும் ஆகும்!
சம்பவாமி யுகே யுகே!
சுட்டி:
http://devakottai.blogspot.com/2006/08/blog-post_23.html
//
SP.VR. SUBBIAH கூறியது...
//
அய்யா, சூப்பர். இதைத்தவிர வேறொன்றும் இல்லை:))
Post a Comment