நெஜமாவே தெரியாம கேட்கிறேன். ஒரு பக்கம் சூடான இடுகைகள்ன்னு ஒரு தலைப்பு இருக்கு. அதுல ரெண்டு டேப் இருக்கு. ஒண்ணு இன்றைய சூடான இடுகைகள். அதுக்குப் பக்கத்திலேயே இன்னொன்று. அது இந்த வார சூடான இடுகைகள்.
இதில் இடம் பிடிக்க மினிமம் ஹிட்ஸ் ஏதாவது இருக்கா? எந்த அடிப்படையில ஒரு இடுகையை சூடானதா செலக்ட் செய்றாங்க?
ஏன்னா நான் நெறைய சூடான (?!?!) மேட்டர்லாம் எழுதிப்பாத்துட்டேன். ஒண்ணுமே இதுல வரல. கட்டம் கட்டற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்ல. அப்ப ஏன் சூடான இடுகையில வரமாட்டேங்குது?
வாசகர் பரிந்துரை பண்ணுங்கன்னு ஒரு இடுகையில கேட்டதனால பெரிய மனசு பண்ணி நேத்து முதல் தடவையா என்னுடைய இடுகையும், இரண்டாவது தடவையா என்னுடைய பேரும் (ஒரு முறை சுரேஷ், என் பேரை தலைப்புல வச்சி சூடாக்கிட்டார். அது வாசகர் பரிந்துரைலயும் வந்தது) வந்திருக்கு.
====
இப்ப லாஜிகலா (?!?!) யோசிப்போம்.
ஒரு இடுகை சூடாகணும்னா என்ன நடக்கணும்?. நெறைய பேர் வந்து பார்க்கணும்.
எப்ப பாப்பாங்க? ஒண்ணு இடுகை மேலே தெரியணும் இல்லைன்னா நம்மள பதிவர்களுக்கோ, வாசகர்களுக்கோ தெரியணும். அப்பதான் நம்மளப்பாக்க நம்ம வலைப் பக்கம் வருவாங்க.
சரி அப்ப என்ன மாதிரிப் புதுப்பதிவர்லாம் என்ன பண்றது?
ஒரு நல்ல (?!) இடுகையைப் போட்டுட்டு யாராவது வருவாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கும் போதே நம்ம இடுகை நடுசென்டர்லர்ந்து மறைஞ்சி போயிடும்.
அப்புறம்..... 'அந்தப்புறம்தான்'. அதாவது உள்ள அதாவது பின்னாடி ஒரு பக்கம் இருக்கில்ல அங்க போயிடும்னு சொல்றேங்க.
===
இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னன்னா... எல்லாரும் சூடான இடுகைக்கு ஆசைப் படுறாங்க. (இதுல தெரிவிக்கறது என்ன இருக்கு. இதுதான் லோல் பட்டுகிட்டிருக்கேன்னு நீங்க கேக்கப்போறது எனக்கு இப்பவே கேக்குது).
ஆகவே தமிழ்மண நிர்வாகிகளே, தயவு செய்து நடுவில் தெரியும் பட்டைக்கு 'சூடான இடுகை / வாசகர் பரிந்துரை' என்று தலைப்பு வைத்துவிடவும். அப்போது எல்லோரது பதிவும் தோன்றும் போதே சூடான, பரிந்துரைத்த பதிவாகிவிடும்.
எப்படி நம்ம ஐடியா ?
===
ஆக நம்ம பங்குக்கு நாமளும் இந்த மேட்டர்ல நம்ம மேலான கருத்த சொல்லிட்டோம்.
இதுக்கு தம்ஸ் அப்ல ஒரு குத்து குத்திட்டு போங்க (இது பரிந்துரைக்கு). மீண்டும் மீண்டும் வாங்க (இது சூட்டுக்கு).
29 comments:
நக்கலு...
//எல்லாரும் சூடான இடுகைக்கு ஆசைப் படுறாங்க//
ஓ. அப்பிடியா?
//சரி அப்ப என்ன மாதிரிப் புதுப்பதிவர்லாம் என்ன பண்றது? //
இது எப்பேலருந்து.....
ஹி..ஹி போன வாரம் என்னோட பதிவும் வந்தது. அதுவும் ஒரு சீனியர் பதிவர் பேர யூஸ் பண்ணினதுனால
இன்னைக்கு பல்லவன் ஆசைய நிறைவேத்திடவேண்டியது தான்
ஸ்டார்ட் மியூஸிக்
இது 6
7
8
9
விட்றதில்ல இன்னைக்கு...
//
ILA கூறியது...
நக்கலு...
//
வாங்க இளா,
ஏதாவது பண்ணனுமே, நர்சிமே சொல்லிருக்காரே.
அதான்.
ஆமா மெயில் கிடைச்சுதா?
//ஏதாவது பண்ணனுமே, நர்சிமே சொல்லிருக்காரே.//
ஒரு நல்ல விசயத்துக்கு சொன்னத இப்படியெல்லாம் எடுத்துப்பீங்களா????
அட லைன்ல தான் இருக்கீங்க போல...
என்னையும் கும்மியடிக்க வச்சிட்டீங்களே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
17
//
பழமைபேசி கூறியது...
//எல்லாரும் சூடான இடுகைக்கு ஆசைப் படுறாங்க//
ஓ. அப்பிடியா?
//
ஓஓ. அப்படித்தான்.
//
நான் ஆதவன் கூறியது...
//சரி அப்ப என்ன மாதிரிப் புதுப்பதிவர்லாம் என்ன பண்றது? //
இது எப்பேலருந்து.....
//
மொதல்லேர்ந்தே.
//
நான் ஆதவன் கூறியது...
//
அய்யா, நான் எதுக்கு ஆசைப்பட்டேன். தெளிவாச் சொல்லுங்க.
அதான் நீங்க லக்கி பதிவராயிட்டீங்களே. இதெல்லாம் எனக்குத் தெரியாததினாலதான் நான் இன்னும் புதுப் பதிவராவே இருக்கேன்.
//அய்யா, நான் எதுக்கு ஆசைப்பட்டேன். தெளிவாச் சொல்லுங்க.//
சூடாக்கறதுக்கு தான்
ஆஹா ஆதவன்,
கணக்கு வெக்க ஆரம்பிச்சிட்டீங்களே,
இன்னிக்கி கும்மிச்சத்தம் மொதமொதலா நம்ம இடத்துல கேக்குது.
நர்சிம் சொன்னமாதிரி இது நல்லதில்லையா? ஒரு பெரிய பிரச்சனை தீருமில்ல.
உங்க மெயில் கெடச்சுது. ரொம்ப நன்றி.
//மொதல்லேர்ந்தே.//
ஆகா என்னவொரு தன்னடக்கம்...எப்பவும் மாணவன் தான்ங்கற மாதிரி
//பாத்துக்கிட்டிருக்கும் போதே நம்ம இடுகை நடுசென்டர்லர்ந்து மறைஞ்சி போயிடும்//
:-)))))))
//எப்படி நம்ம ஐடியா ?//
கலக்கல் ஐடியா :-))
//நான் ஆதவன் சொன்னது…
//அய்யா, நான் எதுக்கு ஆசைப்பட்டேன். தெளிவாச் சொல்லுங்க.//
சூடாக்கறதுக்கு தான்//
கண்டிப்பாக சூடாகிடும் :-)))
ஆன்லைன் மொதமொதல்ல டபுள் டிஜிட்டக் காட்டுது.
கும்மியடிச்சாத்தான் எட்டிப்பாக்கறாங்க.
அவ்வ்வ்வ்வ்.
//
கிரி கூறியது...
கண்டிப்பாக சூடாகிடும் :-)))
//
வாங்க கிரி,
சிங்கப்பூர் வாசி வாக்கு சீக்கிரம் பலிக்கும்னு சொல்லுவாங்க.
//
நான் ஆதவன் சொன்னது…
//மொதல்லேர்ந்தே.//
ஆகா என்னவொரு தன்னடக்கம்...எப்பவும் மாணவன் தான்ங்கற மாதிர
//
ரொம்ம்ம்ப நன்றி. ஆக்சுவலா, உண்மையா, அதாவது, வந்து,
அது என்னன்னா,
.... (சாரிங்க மறந்து போச்சு)
//ஏன்னா நான் நெறைய சூடான (?!?!) மேட்டர்லாம் எழுதிப்பாத்துட்டேன். ஒண்ணுமே இதுல வரல//
இந்த பதிவு சூடாகும் !
:)
//
கோவி.கண்ணன் கூறியது...
இந்த பதிவு சூடாகும் !
:)
//
கிரி கூறியது...
கண்டிப்பாக சூடாகிடும் :-)))
//
வாங்க கிரி,
சிங்கப்பூர் வாசி வாக்கு சீக்கிரம் பலிக்கும்னு சொல்லுவாங்க.
//
Repeateyyyyyyyyyyy
என்னாச்சு இப்படி நின்னு போச்சே. யாராவது ரிட்ரீவ் பண்ணுங்க.
Post a Comment