நேற்று ஒரு சொந்தப்பணி நிமித்தமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்ல வேண்டி இருந்தது.
எப்பொழுதும் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்ல இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் ஆகி விடுகிறது.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன், கோயம்பேடு தாண்டிவிட்டாலே வயல்கள் தென்படும். செம்பரம் பாக்கம் ஏரி, ஸ்ரீ பெரும்பூதூர் ஏரி என்று பெரிய பெரிய ஏரிகளின் பாசனத்தில் நல்ல விளைச்சலைக் காணலாம்.
இப்போதோ, மருந்துக்குக் கூட ஒரு வயல் காடு கூட இல்லை.:-((
முதலில், ஹுன்டாய் வந்தது, பிறகு செயின்ட் கோபேய்ன். அதன் பின் நோக்கியா, மோட்டரோலா, ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், டெல், கபரோ என்று உலகத்தின் 'பெத்த' பேர்கள் எல்லாம் வரிசையாகத் தென் படத்துவங்கியது.
இதே நிலைதான் செங்கல்பட்டு வரையிலும்.:(இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்காவது விவசாயம் நடக்கிறதா என்றே தெரியவில்லை.
இது எங்கு சென்று விடும் என்பதும் புரிய வில்லை.இந்நிலையில் உணவுத் தன்னிறைவு இல்லாவிட்டால் முழுமையான வளர்ச்சி என்பது கடினமாகி விடும்.
நான் எதிர் பார்ப்பது எல்லாம் இதுதான்.
.
.
அக்ரிகல்சுரல் எஸ்.இ.இஜட் களை......
ஆம் விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான் வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக இருக்கும்.
நாம் எல்லோரும் இதை வரவேற்கத் தயாராக இருப்போம்..
.
நீங்க என்ன சொல்றீங்க ! ! !
இது ஒரு மீள் பதிவு.
21 comments:
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல் தான் நம் கதை ஆகப்போகிறது.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை ஒதுக்குவது சரியல்ல.
நல்ல பதிவு
The Government must take specific care for acricuture depatment.The people of we take responsibility to make the planets.
வாங்க வெங்கட் ராமன்,
இன்றைக்கு மிகவும் கவனிக்கப் படவேண்டிய துறை விவசாயம் தான். ஆனால் யாருமே வாய் திறக்க மாட்டேன்றாங்க.:((
நல்லது நடக்க வேண்டும்.
இது நீங்க சொன்ன முறையில் பதியப்பட்ட மீள்பதிவு.:)
//அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல் தான் நம் கதை ஆகப்போகிறது.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை ஒதுக்குவது சரியல்ல.
நல்ல பதிவு//
வருங்கால விவசாயி
கபீஷ்
Thanks anony!
கபீஷ் கூறியது...
//அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல் தான் நம் கதை ஆகப்போகிறது.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை ஒதுக்குவது சரியல்ல.
நல்ல பதிவு//
வருங்கால விவசாயி
கபீஷ்
//
கமெண்டையே ரிபீட்டிடீங்க:))
பேஷ், பேஷ்.
விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான் வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக இருக்கும்///
நேத்து யாரோ கேட்டாங்கப்பா. இந்த யோசனையெல்லாம் கண்டிப்பா நடைமுறைக்கு வரும்
என் நண்பர் வெங்கட்ராமன் நான் சொல்ல நினைச்சத சொல்லிட்டாருங்க, அதான் ரிப்பீட் போட மறந்து ரிப்பீட்டிட்டேன் :-):-)
சீக்கிரம் நம்ம நாட்டுல பசுமைப்புரட்சி வரும்.(என்ன ஒரு நம்பிக்கை!!!)
வணக்கம்
ம்ம்ம்ம்
\\தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை ஒதுக்குவது சரியல்ல.
\\
ஆம் பெரும்பாலும் எல்லா தொழில்களும் விவசாயத்தை ஏதாவதொரு வகையில் சார்ந்தே இருக்கும்
என்ன நாம பேசிகிட்டே இருக்கிறதைவிட, ஏதாவது செய்யலாம்னு தோண்றியது, அதனால் நானும் எனது நண்பர்களும் சேர்ந்து உள்ளூர் விவசாயிகளை கொண்ட ஒரு விவசாய பண்ணை தொடங்களாம் என ஒரு வருடத்திற்கு முன் முடிவெடுத்து அதற்கான ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கியுள்ளோம்
நன்றி
மலைநாட்டை (மலேசியா) பொறுத்தமட்டில் இன்று விவசாயம் செய்பவன்தான் பணக்காரன்..
வாங்க வனம்,
மிகச் சிறந்த திட்டம். மனமார்ந்த வாழ்த்துக்கள். எனக்கும் இப்படி செய்ய வேண்டும் என்று தோன்றும்.
சுரேஷ், கபீஷ்,
நமது நம்பிக்கை நிச்சயம் ஒரு நாள் உண்மையாகும். (இதுவும் நம்பிக்கைதான்.)
மலை நாட்டில் மட்டுமல்ல, மேல் நாட்டிலும்தான்
இந்தியாவில்தான் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.:((
இந்த நிலை மாற வேண்டும்.
Hi all
How you thought about agri. sez.
Because our nation need food item based agri for our peoples. Generally SEZ for agri has used for other nations' luxury usage (like flower agri, etc). So lot of our farmers turned to these type of agri. Furthermore we expect rice from the ship pf USA.
Nobody above have knew about Green Revolution. Because the main fig of that MS Swaminathan also accept that is failure and ours' own seeds had missed.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சண்முகம்.
சி.பொ.ம.க்கள் இன்றைய இந்தியாவில் அதிக சலுகைகளைப் பெறுகின்றன. இவை அமைக்க பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவைப் படுகிறது. நல்ல விளை நிலங்களில்தான் இந்த சி.பொ.ம.க்கள் வருகிறதே தவிற கரம்பான நிலங்களில் அல்ல. இதனால் விவசாயத்திற்கு நிலத் தட்டுப் பாடு ஏற்படுகிறது. ஆகவே விவசாயத்தை மேம்படுத்த விவசாய சி.பொ.ம.க்களை உருவாக்கி அதன் மூலம் அதிக உற்பத்தியை ஏற்படுத்துவதாக அமையும்.
இங்கே நான் குறிப்பிடுவது பணப்பயிர் சார்ந்த விவசாய சி.பொ.ம.க்களை அல்ல. உணவுப் பயிர் சார்ந்த விவசாய சி.பொ.ம.க்களை. என் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல், உணவில் தன்னிறைவு அடையா வளர்ச்சி, வளர்ச்சியல்ல. வீக்கம்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன், கோயம்பேடு தாண்டிவிட்டாலே வயல்கள் தென்படும். செம்பரம் பாக்கம் ஏரி, ஸ்ரீ பெரும்பூதூர் ஏரி என்று பெரிய பெரிய ஏரிகளின் பாசனத்தில் நல்ல விளைச்சலைக் காணலாம்.
சில கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கும்!!!
Shanmugam
//Nobody above have knew about Green Revolution. Because the main fig of that MS Swaminathan also accept that is failure and ours' own seeds had missed.//
Dear Mr. Shanmugam,
As the previous green revolution failed, is there any valid reason that the coming green revolution in orgainic farming also may fail?
According to you what is green revolution. If you find time please do explain.
விவசாயிகள் முற்றிலும் இந்த வளர்ச்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.சிறப்பு உணவு மண்டலங்கள் அரசு நினைத்தால் சாத்தியமே.ஆனால் அரைகுறை கொள்கை இல்லாமல் சுயசார்புடன் கூடிய பசுமைப்புரட்சியாக இருக்கவேண்டும்
/*விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான் வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக இருக்கும்*/
கண்டிப்பாக
//
thevanmayam கூறியது...
சில கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கும்!!!
//
உண்மைதான் தேவன்மயம் அவர்களே :((
குடுகுடுப்பை, நசரேயன் மிக்க நன்றி. நாம் அனைவருமே இந்தத் தேவையை உணர்ந்துள்ளோம். அதிகாரிகளும், திட்டமிடுவோரும் இதை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதே நமது விருப்பம்.
Post a Comment