Tuesday, December 9, 2008

25க்கு 90, 25க்கு 30, மொத்தம் 50

இந்தப் பதிவு ஐம்பதாவது பதிவு என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் இந்த ஐம்பதாவது பதிவு நட்சத்திர வாரத்தில் வெளிவருவது. இது இரட்டைச் சந்தோஷத்தைத் தருகிறது.சென்ற மாதம்தான் 25வது பதிவை முடித்து '3 மாதம் 25 பதிவுகள்' என்ற பதிவைப் போட்டேன்.

முதல் 25க்கு 3 மாதம். அடுத்த 25க்கு 30 நாட்கள். ஒரு ரிதமிக்காக இருக்கவேண்டுமென்பதற்காக 3 மாதம் 30 நாட்கள் என்று போட்டிருக்கிறேன். உண்மையில் சற்று அதிக நாட்கள்தான்:). வேகம் கூடியிருக்கிறது. இந்த வேகம் தொடருமா என்று தெரியவில்லை. ஆனால் பதிவுகள் நிச்சயம் தொடரும்.

அதிலும் இந்த நட்சத்திர வாரம் ஆரம்பித்த இரு நாட்களில் ஐந்து பதிவுகள். நடுவில் தினம் ஒரு பதிவென்று முடிவெடுத்து வழக்கம் போல் செயல்படுத்த முடியாமல் விட்டிருக்கிறேன்.

இடையிடையே சில மொக்கைப் பதிவுகள், (நானே ஒரு பதிவை அதிமொக்கையாக இருக்கிறதென்று நீக்கிவிட்டேன்:)..) இரு மீள்பதிவுகள் இருந்தாலும் பெரும்பாலும் மன நிறைவைத் தரும் பதிவுகளாகத் தான் இருக்கின்றன.

புள்ளியியல் அடிப்படையில் சக்கரவியூகம் இரட்டை இலக்கத்தை அடைந்திருக்கிறது. (இடையில் ஒரு மன்னிப்புப் பதிவு:(..).

ஐந்து கேள்விப்பதிவுகள் இட்டிருக்கிறேன். ஆடிட்டரல்லவா. நமக்கு கேட்பதுதான் அல்வா கொடுப்பது போலாயிற்றே!(இப்போதெல்லாம் அல்வா சாப்பிடுவது தவறாமே..)

மூன்று சிறுகதைகள் - நான்கு பதிவுகள் (டேய்.. நிஜமல்ல கதை - இரு பாகங்களாக வந்தது.)

வானவில் என்று வாராந்திரியை ஆரம்பித்தேன். அது தற்சமயம் குறைப் பிரசவமாக இருக்கிறது.

மற்றவை பொதுவானவை.

மாதவாரியாகப் பார்த்தால் ஆகஸ்டில் 4, செப்டம்பரில் 8, அக்டோபரில் 13, நவம்பரில் 14, டிசம்பரில் இதுவரை 11.

இதுவரை 6000 சொச்சம் முறை இந்தப் பதிவு பார்க்கப் பட்டிருக்கிறது. நானே 1000முறைக்கும் மேல் பார்த்திருக்கலாம்.


இது சாத்தியமானதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி.

11 comments:

Sathis Kumar said...

50-வது பதிவுக்கு வாழ்த்துகள்.. :)

Sathis Kumar said...

குறுகிய காலத்திலேயே நடசத்திரப் பதிவராகிவிட்டீர்கள். இதுதான் சமயம் உங்கள் திறமையை வெளிக்கொணர..

மொக்கைப் பதிவுகளைக் குறைத்துவிட்டு உங்களிடமுள்ள எழுத்துத் திறமையையும் பொது அறிவையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன, எனவே கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

CA Venkatesh Krishnan said...

வாழ்த்துக்களுக்கும் அறிவுரைகளுக்கும் மிக்க நன்றி சதீசுகுமார். மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். இவை என்னுடைய பொறுப்பை அதிகமாக்குகின்றன என்றால் மிகையாகாது.

http://urupudaathathu.blogspot.com/ said...

மீண்டும் அதே.. 50க்கு வாழ்த்துக்கள் நண்பரே

http://urupudaathathu.blogspot.com/ said...

இந்த வாரம் மட்டும் மொக்கைகளை குறைத்து கொள்ளுங்கள்.. பிறகு வழக்கம் போல நம்ம ஜோதியில் (மொக்கை ) இணைத்து உங்கள் சேவையை தொடருங்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே..

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன அண்ணே, நம்மக்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ?????????????

http://urupudaathathu.blogspot.com/ said...

காலயில வந்து மீதி கச்சேரி வைத்து கொள்கிறேன் ..

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துக்கள் பல்லவன். அடுத்த மாதம் நூறாவது பதிவிற்கு வாழ்த்த காத்திருக்கிறேன்!

CA Venkatesh Krishnan said...

நட்சத்திர வாழ்த்துக்களுக்கும் 50 வாழ்த்துக்களுக்கும் நன்றி அணிமா.

என்னது நான் மொக்கையா எழுதறனா? ஒரு வேளை மொக்கையா எழுதறது நமக்கே தெரியாதோ? :((

எனக்கே டவுட்டா இருந்தது. அதனால் தான் யார்கிட்டயும் சொல்லல:)

வாங்க வாங்க. கச்சேரி சீசன் தானே இப்ப.

CA Venkatesh Krishnan said...

மிக்க நன்றி ஆதவன். அடுத்த மாதத்தில் 100க்கு முயற்சிக்கிறேன்.

எண்களால் அல்ல எண்ணங்களால்!